அழகையும், வரிகொள் கூர் அம்பை மானும் விழி - செவ்வரிபரந்த கூரிய அம்பையொத்த கண்களையுமுடையவளான, அம்பை என்பவளும்-, அரிய மாதவம் -அருமையான பெருந்தவத்தை, இயற்றினாள் - செய்தாள்; (எ-று.) விஹங்கராஜன் - வடசொற்றொடர். வம்புஎன்பது வெவ்வேறு பொருளில் வந்தது- சொற்பின்வருநிலை. அரவம்வீடுமனுக்கும், விகங்கராசன் அம்பைக்கும் உவமை.தும்பை - பொரச்செல்வோர் தரிக்கும் மாலை. (152) 145.- அம்பையின் பெருந்தவம். தாளிரண்டினிலொர்தாண்மடக்கியொரு தாளில்வைத்தமை சமைத்தபொன், தோளிரண்டினையுமீதெடுத்துநனி தொழுதியக்கி துணையடியிலே, வாளிரண்டனையவிழிமலர்த்திநிறை வாவிநீரினிடை வானுளோர், நாளிரண்டதனொடையிரண்டுமொரு நாளெனும்படி நடக்கவே. |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ - ள்.) தாள் இரண்டினில் - இரண்டுபாதங்களுள், ஒர் தாள் மடக்கி - ஒருதாளைமடக்கி, ஒரு தாளில் வைத்து - மற்றொருதாளின் மேல் வைத்துக்கொண்டு,அமை சமைத்த பொன் தோள் இரண்டினைஉம் - மூங்கிலையொத்த அழகியதோள்கள்இரண்டையும், மீது எடுத்து - மேலேதூக்கியவண்ணம். நனிதொழுது- நன்குகுவித்து,இயக்கி துணை அடியிலே - தருமதேவதைபோன்ற தன் இரண்டு பாதங்களிலே, வாள்இரண்டு அனைய விழி மலர்த்தி - இரண்டு வாட்படை போன்ற (தன்) இரண்டுகண்களையும் மலரவைத்து, நிறை வாவிநீரின் இடை - நிறைந்துள்ள வாவியின் நீரிலே,வான் உளோர் இரண்டு நாள் அதனொடு ஐ இரண்டுஉம் - தேவர்களின்பன்னிரண்டுநாள்கள் [பன்னிரண்டுவருஷங்கள்], ஒருநாள் எனும்படி நடக்க -ஒருநாள்போலக் கழிய,- (எ-று.)- "அருந்தவ முயன்றபின்" (146) என்றுதொடரும்.(152) அம்பை பெருந்தவமுயன்ற தன்மை கூறியது, இது. மானிடவர்க்கு ஒருவருடம்தேவர்கட்கு ஒருநாளெனப்படும். இயக்கி-ஆகுபெயர். இயக்கி- தருமதேவதை அல்லதுகாளி என்பாருமுளர். இச்செய்யுளிலுள்ள வினையெச்சங்களுக்கெல்லாம் அடுத்தசெய்யுளில் அம்பையைக் குறிக்குஞ் சொற்றொடர் எழுவாயாகும். (153) 146.- அம்பை சிகண்டியாதல். முயலிலாமதிமுகத்தினாளொருவர் முயலருந்தவமுயன்றபின் புயலிலாதமினலொத்தமெய்யிலொளி புரியியக்கிதனதருளினான் மயிலனாடனதுவடிவகற்றியிகல் யாகசேனனதுவயினிடைச் செயலிலாறுமுகனிகரெனத்தகுசி கண்டியாயினள்சிறக்கவே. |
(இ-ள்.) ஒருவர் முயல் அருந் தவம் - ஒருத்தர் முயன்று செய்வதற்கு அருமையான பெருந்தவத்தை, முயன்றபின் - முயற்சியோடு செய்தபின்பு, - முயல் இலா மதிமுகத்தினாள் - முயற்கறை யில்லாத சந்திரன் போன்ற முகத்தையுடைய, மயில் அனாள் - மயில் |