இரண்டாவது சம்பவச்சருக்கம் (கதாநாயகரான தருமன் முதலியோரின்) பிறப்பைப்பற்றிக் கூறுஞ்சருக்கம் என்றுபொருள்படும். சம்பவம் = ஸம்பவம்: பிறத்தலென்று பொருள். இதில், விசித்திரவீரியனுடைய மனைவியரான அம்பிகை அம்பாலிகையர்பால் திருதராட்டிரனும்பாண்டுவும் தோன்றியதும், திருதராட்டிரன் மனைவியான காந்தாரியினிடத்தும்பாண்டுவின்மனைவியரான குந்தி மாத்திரியரிடத்தும் துரியோதனன் முதலியநூற்றுவரும் பஞ்சபாண்டவரும் தோன்றியதும், பாண்டு இறந்ததும், இம்மக்களின்வளர்ச்சியும் கூறப்படும். 1. கடவுள் வணக்கம். அரிய கங்குலி னன்னைதன் வடிவுகொண் டலகையா கியநங்கை பரிவு பொங்கவந் தெடுத்தணைத் துவந்துளம் பரிந்துடன் பாராட்ட உருகு மாமுலைப் பாலுட னவளுயி ருண்டழு முருகார்மெய் கரிய கோவலன் செய்யதாண் மலர்களென் கருத்தைவிட் டகலாவே. |
(இ-ள்.) அரிய கங்குலின் - (செறிந்த இருளால் இணங்குதற்கு) அருமையான இராப்போதில், அலகை ஆகிய நங்கை-(இயற்கையிற்)பேயான பெண், அன்னை தன்வடிவுகொண்டு - தாயின் வடிவைக்கொண்டு, பரிவு பொங்கவந்து - அன்பு பொங்கப்பெற்றவள் போன்று வந்து, எடுத்து-, அணைத்து - தழுவி, உவந்து - மகிழ்ந்து, உளம் பரிந்து - மனத்திலிரக்கங்கொண்டு, உடன் - அப்பரிவுடன், பாராட்ட- பாராட்டாநிற்க,- உருகும் மா முலைப்பாலுடன் - பெருகுகின்ற மிக்க முலைப்பாலுடனே, அவள் உயிர் உண்டு - அந்தப்பேய்ச்சியின் முலையையுண்டு, அழும் - அழுபவனான, முருகுஆர் - இளமை நிறைந்த, மெய் - உடல்படைத்த, கரிய- கருநிறமுள்ளவனான, கோவலன் - இடையனான ஸ்ரீகிருஷ்ணனுடைய, செய்யதாள்மலர்கள் - செந்நிறமுள்ள தாமரைமலர்கள், என் கருத்தை விட்டு-, அகலா -(ஒருபோதும்) நீங்காது நிற்கும்; (எ -று.) கோபாலனது திருவடித்தாமரை மலர்களையே அனவரதமுஞ் சிந்திப்பேனென்பதாம். பாலுண்பதென்ற வியாஜத்தினாற் பூதனையுயிரைத் திருமால்உண்டானென்க. இதுமுதல் நாற்பத்திரண்டுகவிகள் - பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,ஈற்றுச்சீரொன்று காய்ச்சீரும், மற்றை நான்கும் விளச்சீருமாகவந்த அறுசீராசிரியவிருத்தங்கள். (156) 2.- இறந்தமைந்தனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்தபின், வீடுமன் வருந்துகையில், தாய் கூறத் தொடங்கல். இறந்தமைந்தனுக்குரியதென் புலத்தவர்யாவருங்களிகூரச் சிறந்தநான்மறைவிதியினா லுலகியல்செய்தபின்செழுந்திங்கள் மறைந்தயாமினிநிகரெனக் குருகுலமன்மயக்குறுமெல்லை அறந்தவாவகைதுறந்தவா ளரசனுக்கன்னைமற்றிதுசொன்னாள். |
(இ-ள்,) இறந்த மைந்தனுக்கு - (க்ஷய ரோகத்தால்) இறந்திட்ட விசித்திரவீரியனுக்கு, உரிய - செய்யவேண்டிய சடங்குகளை, |