சிரேஷ்டரின் கருணையினால், மகவு பயந்தனர் என்பர் - மகவைப் பெற்றுக்கொண்டனரென்றுகூறுவர்: எழுது - (ஸ்மிருதிகளில்) எழுதியுள்ள, நல் நெறிமுறைமையின் - நல்லவழியின் முறைமையினால், விளைப்பதுஏ- (சந்ததியைக்) கிளைக்கச்செய்வதே, இயற்கை - இயற்கையானசெயலாம்: என்று-, இருகையால் தொழுது- (தன்) இரண்டுகைகளாலும்(தாயை) வணங்கி, சொன்னபின் - சொன்ன பிறகு,- மனம் தெளிந்து - மனந்தெளியப்பெற்று, அவனைஉம் - தாயும், தோன்றலுக்கு- விளங்குபவனான வீடுமனுக்கு, உரைசெய்வாள் - பின்வருமாறு சொல்பவளானாள்;(எ-று.)- அன்னை சொல்வதை, மேல் நான்குகவிகளிற் காண்க. இருபத்தொருகால் அரசகுலத்தைக் கருவறுத்தபரசுராமனால் மனுகுலம் மடிவதாயிருந்த நிலையில், முனிவரரைக்கொண்டு அந்தக் குலத்தை அழிவுறாதவாறுமகவை அரசமகளிர் பெற்றதுபோலக் குலத்தையுண்டாக்குவதே முறை யென்றுவீடுமன் சொன்னானாக, காளியும் மனந்தெளிந்து வீடுமனிடம் தான் கருதியதைக்கூறலாயின ளென்க. க்ஷத்திரியமகளிர் காமவிச்சையினாலன்றிக் குல விருத்திக்காகமுனிவரைச்சேர்ந்தது சாஸ்திரசம்மதமாதலால் கற்புக்கிழுக்காகாது ஆதலால், அவரை 'பழுதின் மங்கையர்' என்றது. (160) 6.- மூன்றுகவிகளால், காளி தன் பாலியசரிதைசொல்லி வியாசனாற் குலத்தையுண்டாக்கிக்கொள்ளக் கருதியமை கூறுகின்றாள்:- பரிதிதந்தமாநதிமருங் கொருபகற்பராசரன்மகப்பேறு கருதிவந்துகண்டென்னையு மெனதுமெய்க்கமழ்புலவையுமாற்றிச் சுருதிவாய்மையின்யோசனைப் பரப்பெழுசுகந்தமுமெனக்கீந்து வருதிநீயெனப்பனியினான் மறைத்தொருவண்டுறைக்குறைசேர்ந்[தான். |
நான்குகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) பரிதி தந்த மா நதி மருங்கு - சூரியன்பெற்ற சிறந்த நதியாகிய யமுனையினருகே, ஒருபகல் - ஒருநாள், பராசரன் - பராசரனென்றமுனிவன், மக பேறுகருதி - ஒருமகனைப்பெறுதலை யெண்ணி, வந்து-, என்னைஉம் கண்டு - என்னைப்பார்த்து, எனது மெய் கமழ் புலவைஉம் மாற்றி - எனது உடம்பிலிருந்து வீசுகின்ற புலால் நாற்றத்தையும் போக்கி, சுருதி வாய்மையின் - வேதம் போன்ற (தனது) உண்மைவாக்கினால், யோசனை பரப்பு எழு சுகந்தம்உம் - யோசனை யகலம்வீசுகின்ற நறுமணமும், எனக்குஈந்து - எனக்குக்கொடுத்து, நீ வருதி என - நீஇங்குவருக என்று (என்னைத்தன்னருகு) அழைத்து, பனியினால் மறைத்து - பனியினால் (பிறருக்குத் தெரியாதவாறு) மறையும்படிசெய்து, ஒரு வள்துறை குறை- ஒருவளப்பமுள்ள நீரிறங்கு துறையோடுகூடிய திட்டில், சேர்ந்தான் - (என்னுடன்) கலந்தான்; (எ-று.) மச்சத்தின்வயிற்றிற் பிறந்ததனால் மச்சகந்தியாயிருந்த என்னைப் பராசரன் யோசனகந்தியாக்கி, என்னை யமுனைத்திட்டிற் கூடினனென்பதாம். அத்தீவு கருநிறமுள்ளது ஆதலால், 'க்ருஷ்ணத் |