பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்9

மிக்க விஷமானது மோதுவதனால், வருந்திய - வருத்தமடைந்த, பெருந்துயர் -
மிக்கதுன்பம், மாற - நீங்கும்படி - மண் தலந்தனை- மண்மயமாயமைந்த
இந்தப்பூமியை, நிழல் எனும் மரபினால்- (தனது) சாயையென்கின்ற
[நிலாவெனப்படுகின்ற]முறைமையினாலும், தனது மண்டலம் பொழி அமிழ்தின் -
தன்வட்டவடிவமானஉருவம்பொழிகின்ற அமிருதத்தினாலும், மெய் குளிர - உடல்
குளிரும்படி, வைத்தோன் -வைத்தவன்; (எ -று.)

     பாம்புகளின் நெட்டுயிர்ப்போடு விஷமும் கலக்கப்பெற்றதனால், இந்தப் பூமி
மிக்கவெதுப்பையடைய, அவ்வெம்மையைத் தனது நிலவினாலும்
தன்அமுதகலைகளினாலும்போக்கிக் குளிர்ச்சி யடையச் செய்பவன் சந்திரனென்க,
யமகவணி. மண்டு அலம்பொர மயங்கி வருந்திய பெருந்துயர் எனக் கொண்டு
கூட்டி யுரைப்பாரு முளர். அலம் =ஹாலம்.                          (11)

4.பைப்பொன்மால்வரைமத்தினிற் பணிவடம்பிணித்திட்டு
உம்பரானவர்தானவ ருடன்கடைந்திடவே
தம்பமானதுமன்றியத் தழல்விடந்தணிய
அம்புராசியினாரமு துடனவதரித்தோன்.

     (இ - ள்.) (அன்றியும் அந்தச்சந்திரன்),- பைம் பொன் மால் வரை
மத்தினில் -பசும்பொன்மயமான பெரியமலையாகிய மந்தரகிரி யென்னும்
மத்திலே, பணிவடம் -ஆதிசேஷனாகிய கடைகயிற்றை, பிணித்திட்டு-கட்டி,
உம்பர் ஆனவர் - தேவர்கள்,தானவருடன் - அசுரருடனே (கூடி), கடைந்திட -
கடையாநிற்க,- (அப்போது), தம்பம்ஆனதுஉம் அன்றி -(தயிர்கடையும்) மத்துக்கு
அடை தூணாக அமைந்ததல்லாமல், அதழல் விடம் தணிய - அங்குத் தோன்றிய
தழல்போன்ற [மிகவெப்பமான] விடத்தின்கொடுமை தணியும்படி, அம்புராசியின்-
அந்தத் திருப்பாற்கடலிலே, ஆர் அமுதுடன்- அருமையான அமிருதத்துடனே,
அவதரித்தோன் - தோன்றியவன்;(எ - று.)

     தேவர்கள் தாம் இழந்தசெல்வத்தை மீண்டும் பெறும் பொருட்டு
விட்டுணுவின்மொழிப்படியே திருப்பாற்கடலில் மந்தர கிரியை மத்தாகநாட்டி
வாசுகியென்னும் நாகத்தைக்கடைகயிறாகப் பூட்டிக் கடையும்போது அந்தச்சந்திரன்
அந்தமந்தரகிரியாகிய மத்துக்கு அடைதூணாக அமைந்தான்: அன்றியும்
கடைகின்றபோது முதன்முதலில் அந்தக் கடலிலிருந்து நஞ்சுதோன்ற
அந்தவெப்பத்தைத் தணிக்குமாறு அமிருதத்துடனே அந்தச்சந்திரனுந் தோன்றின
னென்பதாம். மேரு மந்தரம் இமயம் என்ற இந்தமலைகளை அபேதமாகக்கூறுவது
கவிசமயமாதலால், மந்தரமலையை இங்கு 'பொன்மால்வரை ' என்றார். பணி - பணீ:
வடசொல்:படத்தை யுடையதென்பது அவயவப்பொருள்.அம்புராசி - ஜலத்தின்
திரளையுடைய தெனக் கடலுக்குக் காரணப்பெயர்; பாற்கடலுக்கு இலக்கணை.  (12)