பக்கம் எண் :

90பாரதம்ஆதி பருவம்

வீபம்' எனப்படும்: அந்தத்தீவில் தோன்றியதனால், வியாசர் க்ருஷ்ணத்வைபாயநர்'
எனப்படுவர்.                                                    (161)

7.முரணிறைந்தமெய்க்கேள்வியோ னருளினான்முஞ்சியும்புரி
                                           நூலும்,
இரணியஞ்செழுங்கொழுந்துவிட் டனவெனவிலங்கு
                                வேணியுந்தானும்,
தரணியெங்கணும்வியாதனென்றுரைகெழுதபோதனமுனியப்
                                        போது,
அரணியின்புறத்தனலெனவென்வயினவதரித்தனனம்மா.

     (இ-ள்.) முரண் நிறைந்த - வலிமை மிகுந்த, மெய் கேள்வி யோன் -
உண்மையான நூற்கேள்வியையுடையனான அந்தப்பராசரனது, அருளினால் -
கருணையினால், முஞ்சிஉம் - (இடையிற்கட்டிய) முஞ்சிப்புல்லினாலாகிய நாணும்,
புரிநூல்உம் - வெண்புரி நூலும், இரணியம் செழு கொழுந்து விட்டன என
இலங்குவேணிஉம் - சுவர்ணம் செழுமையோடு கொழுந்துவிட்டெரிகின்றன
என்றுசொல்லும்படி. விளங்குகின்ற ஜடையும், (ஆகிய இவற்றுடனே), தான்உம் -
தானுமாக,தரணி எங்கண்உம் - பூமிமுழுவதிலும், வியாதன் என்று -
வ்யாஸனென்றுபேர்சொல்லப்பட்டு, உரை கெழு - கீர்த்தி விளங்கிய,
தபோதனமுனி -தவத்தையேசெல்வமாகக் கொள்ளும் முனிவன், அப்போது-,
அரணியின் புறத்துஅனல் என - அரணிக்கட்டையின்வெளியிலே
(அதனிடத்தினின்று) அனல்தோன்றுவதுபோல, என் வயின் - என்னிடத்தினின்று,
அவதரித்தனன்-; (எ-று.)

     காளிவயிற்றினின்று வெளிப்பிறந்த வியாசனுக்கு,அரணிக்
கட்டையினின்றுதோன்றிய அனல் உவமையாகும். அரணி - தீக்கடைகோல்.
அம்மா - வியப்பிடைச்சொல்: பிறக்கும்போதே பிரமசாரியர்க்குரிய வேஷத்துடனே
அத்துணைவளர்ந்த புதல்வனாகத் தோன்றியமைபற்றி  வியந்தவாறு.        (162)

8.சென்னியாலெனைவணங்கியா தொருபகற்சிந்திநீசிந்திக்கும்
முன்னியானருகுறுவலென் றுரைசெயமுனிமகன்முனிமீளக்
கன்னியாகெனவிதித்துடன் கரந்தனன்கையறுகனிட்டன்றன்
பன்னியானவரிடத்தினி லவன்வரிற்பலித்திடுநினைவன்றே.

     (இ-ள்.) முனிமகன் - அந்தப்பிறந்த ரிஷிகுமாரன், சென்னியால் - (தனது)
சிரசினால், எனைவணங்கி - என்னைப்பணிந்திட்டு, 'யாது ஒருபகல் சிந்தி-(நான்
வரவேணுமென்று) ஏதேனும் ஒரு பகலிலே (நீ என்னைக்) கருதுவாய்: நீ
சிந்திக்கும்முன் - நீ கருதுவதற்கு முன்னம், யான் அருகு உறுவல் - நான் (உன்)
சமீபத்திலேவந்து சேர்வேன்,' என்று-, உரைசெய - சொல்ல, முனி - பராசர
முனிவன், 'மீள -மறுபடியும், கன்னி ஆக - கன்னிகையே யாகுவாய்,' என -,
விதித்து -கட்டளையிட்டு, உடன் - மகனுடனே, கரந்தனன்- மறைந்திட்டான்: கை
அறு-(கணவனையிழந்ததனாலான சோகத்தினாற்) செயலற்ற, கனிட்டன் தன்
பன்னிஆனவரிடத்தினில் - (உன்) இளையோனுடைய
பத்தினிமாரானவர்களிடத்தில், அவன்வரில் - அந்த வியாசன் வருவனேயானால்,
நினைவி-(என்) எண்ணம்.பலித்திடும்-பயன் விளைத்திடும்:(எ-று)-  அன்றே-
தேற்றம்.  அன்றேபலித்திடும்-அன்றைக்கே பலிக்குமெனினுமாம்.       (163)