பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்91

9.-தன்நினைவைக்கூறிய காளி வீடுமனதுஉடன்பாட்டைப்
பெற்று வியாதனைச் சிந்தித்து வரச்செய்தல்.

எனக்குமைந்தகேணினைவிதுன் றுணைவனென்னேவலுமறானிவ்வாறு,
உனக்குநெஞ்சுறவருங்கொலோ வறிகிலேனுண்மைநீயுரையென்ன,
மனக்கிசைந்ததென்றவன்வியந் தேகலும்வழுவறமனஞ்செய்யக்,
கனக்கருங்குழன்மகிழ்வுற முதற்பெறுகாதன்மைந்தனும்வந்தான்.

     (இ-ள்.) மைந்த - மைந்தனே! கேள் - கேட்பாயாக: எனக்கு நினைவு இது -
எனக்கு எண்ணம் இங்ஙன்செய்வது: உன் துணைவன் - உன் சகோதரனாகிய அந்த
வியாசன், என் ஏவல்உம் மறான் - என் கட்டளையையும் மறுத்துக்கூறான்; இ
ஆறு -இந்தவழி, உனக்கு நெஞ்சுஉற வரும்கொல்ஓ - உன் மனத்துக்கு ஏற்ற
தாகத்தோன்றுகின்றதோ? இல்லையோ, அறிகிலேன் - (அதனை) யான் அறியேன்: நீ
உண்மை உரை - நீ (உன்கருத்தை) மெய்ம்மையாகக் கூறுவாய், என்ன - என்று
(அந்தக்காளி) வினாவ, - மனக்கு - (என்) கருத்துக்கு, இசைந்தது - (நீ
இப்போதுகூறியது) உடன்பாடானதேயாகும், என்று-, அவன் - அவ்வீடுமன்,
வியந்து -(தாய்வார்த்தையை உடன்பட்டுக்) கொண்டாடி, ஏகலும் - சென்றவுடனே,-
கனம் கருங்குழல் - மேகம்போன்ற கரிய கூந்தலையுடைய அந்தக்காளி, வழு
அற -குற்றமில்லாமல், மனம் செய்ய - (அந்தவியாசனை) மனத்தினால்நினைக்க,-
மகிழ்வுஉற- (அன்னாள்) மகிழ்ச்சியடையும்படி, முதல் பெறு காதல் மைந்தன்உம் -
முன்னமேபெற்ற அன்பிற்கு உரிய புதல்வனாகிய வியாசனும், வந்தான்-; (எ-று.) (164)

10.- வந்தவியாதன் தன்தாயை வணங்கி நிற்க. தாய் 'குரு
குலத்தை யுண்டாக்குவாய்' என்ன, அவனும் இசைதல்.

தொழுதுநெற்றியில் விபூதியா லன்னைதன்றுணையடித்துகணீக்கி
விழுதுடைத்தனியாலென விருந்ததொல்வியாதனைமுகநோக்கிப்
பழுதுபட்டதிக்குருகுல மீளநின்பார்வையாற்கடன்ஞாலம்
முழுதுமுய்த்திடுமகவருளெனப் பெருமுனியுமக்குறைநேர்ந்தான்.

     (இ-ள்.) தொழுது வணங்கி, நெற்றியில் விபூதியால் - (தன்)
நெற்றியிலணிந்துள்ளவிபூதியினாலே, அன்னை தன் - தாயினுடைய, துணை அடி
துகள் நீக்கி -உபயபாதங்களிற் படிந்துள்ள தூளியைப் போக்கி, விழுது உடை தனி
ஆல் எனஇருந்த தொல் வியாதனை - (தன்னுடைய தொங்குகின்ற சடைமுடியினால்)
விழுதைக்கொண்ட ஒப்பற்ற ஆலமரம்போல இருந்த பழமையான வியாச
முனிவனை, முகம்நோக்கி - முகத்தைப்பார்த்து, 'இ குருகுலம் பழுதுபட்டது- 
இந்தக் குருகுலமானதுகேடு அடைந்திட்டது: மீள - அந்தப் பழுது நீங்கும்படி,
நின் பார்வையால் -உன்னுடைய (கருணை கொண்ட) பார்வையினாலே, கடல்
ஞாலம் முழுதும்உய்த்திடும்-கடலாற் சூழப்பட்ட பூமிமுழுவதையும் தாங்கவல்ல,
மகவு- குமாரனை,அருள் - தந்தருள்வாய்,' என - என்று (தன்கருத்தை அந்தக்காளி)
தெரிவிக்க,- பெருமுனிஉம்-பெருமைபெற்ற முனிவனாகிய அந்த வியாசனும்,
அகுறை நேர்ந்தான் - அந்த வேண்டுகோளை நிறைவேற்றுமாறு
ஒப்புக்கொண்டான்; (எ-று.)