"ப்ரணாமலக்நேந லலாட பஸ்மநா - ப்ருசம் பவித்ரீக்ருத பாத பங்கஜா" என்று பாலபாரதத்தில் வருவதற்கு ஏற்ப, 'நெற்றியில்விபூதியால் அன்னைதன் றுணையடித்துகணீக்கி' என்றார்: நெற்றிவிபூதியால் அன்னையின் பாதத்தைப் பரிசுத்தமாக்கினான் வியாசனென்பது, துணியடித்துகணீக்கி என்பதன் பொருள். (165) 11.- காளி தன்மருமகளிரை வியாசமுனிவனாற் சந்ததிவளர்க்க இசைவித்தல். அழைத்தமாமகனப்பொழு தவருழையணுகுவமெனப்போகத் தழைத்தநெஞ்சினளனந்தர மிழந்தபொற்றாலிமாதரைத்தேற்றி உழைத்ததுன்பமுமுன்னுளோர் பலருலகியற்ைகையுமுறக்காட்டி இழைத்தபாவையினிருந்தவர்க் கந்நினைவிசையுமாறிசைவித்தாள். |
(இ-ள்.) அழைத்த மாமகன் - (தன் தாயினால்) அழைக்கப்பட்ட சிறப்புற்ற குமாரனான அந்த வியாசன், அப்பொழுது-, 'அவருழை அணுகுவம் - (உரிய பருவத்தில்) அந்த நங்கைமாருடன் சேருவோம்,' என - என்று சொல்லி, போக - போய்விட,- அனந்தரம் - பிறகு, தழைத்தநெஞ்சினள் - மகிழ்ச்சியால்மலர்ந்த மனத்தையுடைய காளி,- இழந்த பொன் தாலி மாதரை - பொற்றாலியை யிழந்த மரு மகளிரான அம்பிகை அம்பாலிகைகளை, தேற்றி - சமாதானப்படுத்தி, உழைத்த- துன்பம்உம் - (அப்போது) நேரிட்டுள்ள துன்பத்தையும், முன் உளோர் பலர் உலகு இயற்கைஉம் - முன்னுளோர்பலர் நிகழ்த்திய உலகோரியற்கையையும், உற - (அவர்கள் மனத்திற்) பதியும்படி, காட்டி - எடுத்துச்சொல்லி, இழைத்த பாவையின் இருந்தவர்க்கு - செய்யப்பட்டுள்ள பாவை போன்று நிச்சலமாக இருந்தவரான அந்த மகளிர்க்கு, அ நினைவு - (தான் கருதிய) அந்த எண்ணத்தை, இசையும் ஆறு- உடன்படும்படி இசைவித்தாள் - செய்தாள்; (எ-று.) கருத் தரிப்பதற்கு ருதுகாலமே ஏற்றதாகையால் அக்காலத்து வருவேனென்பதுபட வியாசமுனிவன் கூறினனென்பது 'அவருழையணுகுவ மெனப்போக' என்ற இடத்துப் பெறப்படும். (166) 12.- அம்பிகை அச்சத்தினால் கண்மூடியவண்ணம் வியாசனைச் சேர்தல் கனையுநீடிருளணைமிசை யிருவருங்கணவனைமறவாது நினையுநெஞ்சினர்பயின்றுழிப் புன்மணநிறைந்தொளிகுறைந்தொல்கப் புனையுமெய்யொடும்பொழுதொடும் புரிதவன்போதலுமிகவஞ்சி அனையகாலையிலம்பிகை மலர்ந்திலளம்பகமொருக்காலும். |
(இ-ள்.) கனையும் நீடு இருள் - செறிந்த மிக்க இருட்போதிலே, அணைமிசை - படுக்கையின்மீது, இருவர்உம் - (அம்பிகை அம்பாலிகை என்ற) இரண்டு மாதரும், கணவனை-, மறவாது-, நினையும் நெஞ்சினர் - நினைக்கின்ற நெஞ்ச முடையவராய், பயின்ற உழி - தங்கியபோது,- பொழுதொடுஉம் - உரியசமயத்திலே, புல் மணம் நிறைந்து - புல்லின் மணம்மிக்கு, ஒளி குறைந்து ஒல்க புனையும் மெய்யொடுஉம்- ஒளிகுறைந்து சுருங்கப் பூண்ட சரீரத்துடனே, புரி தவன் - தவம் புரிபவனாகிய வியாசமுனிவன், போதலும் - வருதலும்,- மிக அஞ்சி - மிகவும் அச்சங்கொண்டு, அனைய காலையில்- |