வெருவரும்படி - பூமிக்குத்தலைவரான அரசர் அஞ்சும்படி, பலவிதம் கலைகள்உம் -, வீடுமனிடம்-, கற்றார்-; (எ-று.) (176) 22.- வீடுமன் நல்லநாளில் திருதராட்டிரனுக்கு முடிசூட்ட, பாண்டுவைச் சேனாபதியும் விதுரனை அமைச்சனுமாக வைத்தல். ஆனதிக்கிருநாலும்வந்தடிதொழ வம்பிகைமகன்றன்னை வானதித்திருமகனொருதினத்தினின் மங்கலமுடிசூட்டிப் பானிறத்திறற்பாண்டுவேசேனையின் பதிமுழுமதிமிக்க கானிறத்தொடைவிதுரனேயமைச்சனிக் காவலற்கெனவைத்தா[ன.் |
(இ-ள்.) வான் நதி திரு மகன் - கங்காநதியின் புத்திரனாகிய வீடுமன்,- ஒரு தினத்தினில் - ஒப்பற்ற சிறந்த நாளிலே, ஆன - பொருந்திய, திக்கு இரு நாள் உம் -எட்டுத்திக்கிலுள்ளவரும், வந்து-, அடி தொழ - அடிதொழுமாறு, அம்பிகை மகன்தன்னை - அம்பிகையின் குமாரனான திருதராட்டிரனை, மங்கலம் முடி சூட்டி -மங்களமாகிய ராஜகீரிடத்தைக் கவித்து, 'இ காவலற்கு-இந்தத்திருதராட்டிர மகாராஜனுக்கு,- பால் நிறம் திறல் பாண்டுஏ - பால்போன்ற வெண்ணிறத்தையும் பராக்கிரமத்தையுமுடைய பாண்டுவென்பானே, சேனையின் பதி - சேனாபதியாவன்: முழு மதி மிக்க - நிரம்பிய புத்தியினால் மேம்பட்ட, கான் நிறம் தொடை விதுரன்ஏ -நறுமணத்தையும் (கண்கவரும்) நிறத்தையுமுடைய மாலைசூடிய விதுரனென்பானே, அமைச்சன்-,' என - என்று, வைத்தான் - ஏற்படுத்தினான்;(எ-று.) திருதராட்டிரன் முடிசூட்டப்பட்டானாயினும், கண்ணில்லாதவனாதலால், சேனாபதியான பாண்டுவே ராஜாவாக ஆண்டனனென்று, வியாசபாரதம் கூறும். (177) 23.- வீடுமனேவலினால் தூதர்போய்க் காந்தாரபதியைக் கண்டு எமது அரசனுக்கு நின்கன்னியைத் தருகென, அவனும் இசைதல். நதியளித்தவனேவலிற்றூதர்போய் நயந்துடன்காந்தார பதியளித்தமெய்க்கன்னியைத்தருகபூ பதிக்கெனமணநேர்ந்தார் மதியளித்ததொல்குலத்தவன்விழியிலா மகனெனத்தமர்சொல்ல விதியளித்ததென்றுளமகிழ்ந்தனள்வட மீனெனத்தகுங்கற்பாள். |
(இ-ள்.) நதி அளித்தவன் - கங்காநதி பெற்ற புதல்வனான வீடுமனுடைய, ஏவலின் - கட்டளையினால், தூதர்,- உடன் - உடனே, போய் - (காந்தாரதேசத்தை)அடைந்து, 'காந்தாரபதி அளித்த மெய் கன்னியை - காந்தார தேசத்துக்குத் தலைவனான சுபலன் பெற்ற நல்ல வடிவையுடைய காந்தாரியை, பூபதிக்கு தருக - (எமது) அரசனுக்குத் தருக,' என - என்று, நயந்து - இனிது பேசி, மணம் நேர்ந்தார்- (தம்மரசன் அன்னாளை) மணஞ்செய்து கொள்ள உடன்பட்டிருப்பதைத் தெரிவித்தனர்: 'மதி அளித்த தொல் குலத்தவன் - சந்திரன் தோற்றுவித்த பழையகுலத்திலே தோன்றின திருதராட்டிரன், விழி இலா மகன் - கண்ணில்லாதமகனாவான்,' என - என்று, தமர் - சுற்றத்தார், சொல்ல-,- 'விதி-கடவுள், அளித்தது - கொடுத்ததாகும் (இந்தவரன்),' என்று-, வட |