மீன் என தகும் கற்பாள் - (வானத்து) வடக்கின்கண் நட்சத்திர வடிவமாக (க் கணவனைப் பிரியாது) நிற்கும் அருந்ததியைப்போன்ற கற்பினையுடையளான அந்தக்காந்தாரி, உளம் மகிழ்ந்தனள்-; 'மணநேர்ந்தான்' என்று பாடமாயின் காந்தாரபதி என எழுவாய் வருவிக்க. பெருங்கற்பினளாதலால், கண்ணிலானென்று சொல்லியும் உளம் வருந்தாது மகிழ்ந்தனள் காந்தாரியென்க. (178) 24.- இனி யானொருவரையும் கண்ணாற்காணேனென்று காந்தாரி தன் கண்ணைப் பட்டத்தாற் புதைக்க, தந்தை முதலியோர் அவளைத் திருதராட்டிரனுக்கு மணஞ்செய்வித்தல். இமைத்தகண்ணினைமலர்ந்தினிநோக்கலேன் யானொருவரையென்று, சமைத்தபட்டமொன்றினிற்பொதிபெதும்பையைத் தந்தை யுந்தனயோரும், அமைத்தருங்குலமுனிவருமறைமுறையருங்கடிவிளைத்திட்டார், சுமைத்தராபதிமதியிவளுரோகிணி யென்னவேதொழத்தக்காள். |
(இ-ள்.) 'யான்-, இனி-, இமைத்த கண் இணை மலர்ந்து - இமைக்குந்தன்மையுள்ள (என்) இரண்டுகண்களை மலரவிழித்து, ஒருவரை- வேறொரு புருஷரை, நோக்கலேன் - பாரேன்', என்று - என்று கருதி, சமைத்த - செய்வித்த, பட்டம் ஒன்றினில் - பொற்பட்டத்தால், பொதி - மறைத்த, பெதும்பையை - பெதும்பைப்பருவத்தளான காந்தாரியை, தந்தைஉம் - அவள் தந்தையான சுபலனென்றகாந்தாரபதியும், தனயோர்உம் - (அவனது புத்திரராகிய) சகுனி முதலியோரும்,அருங்குலம் முனிவர்உம் - சிறந்தகுலத்தில் பிறந்தவரான இருடியரும், அமைத்து-(கலியாணத்துக்கு) வேண்டும்பொருளைச் சித்தஞ் செய்துகொண்டு,- மறை முறை-வேதவிதிப்படி, அருங் கடி - அருமையான விவாகத்தை, விளைத்திட்டார் - செய்துமுடித்தார்: சுமை - (பூமியைத்) தாங்குதலையுடைய, தராபதி மதி - அரசனாகிய சந்திரனுக்கு, இவள் -, உரோகிணி என்ன தொழ தக்காள் - உரோகிணி போலக் கொண்டாடத்தக்கவளானாள்; (எ -று.) சந்திரனுக்குஅசுவினி முதலிய மற்றைப் பல நட்சத்திரங்களும் மனைவியராகஇருப்பினும் உரோகிணி சிறத்தல்போல, திருதராட்டினுக்குப் பல மனைவி மாரிருப்பினும்காந்தாரியே யாவரினும் மிக்கவளானாளென்க. "அகச்சத் அந்த: புரிகாஸு முக்யதாம்" என்று பாலபாரதத்து வருவதும் காண்க. (179) 25.- இனிக் குந்தியைப்பற்றிய சரிதை:- சூரன்மகளாகிய குந்தி,குந்திபோசரில்லத்து வளர்தல். புந்தியாலருங்கலைமகள் பொற்பினாற் பூந்திருபுனைகற்பால் அந்திவாயருந்ததிபெரும்பொறையினா லவனிமானிகரென்னக் குந்திபோசரிற்சூரனென்பவன்மகள் குருகுலந்தழைத்தோங்க வந்தியாவரும்பிரதையென்றடிதொழ மதியெனவளர்கின்றாள். |
(இ-ள்.) 'சூரன் என்பவன் மகள் - சூரனென்று ஒருபேரையுடைய யதுகுலத்தரனுடைய மகள், -புந்தியால் அருங்கலை மகள்- புத்தியினால் அருமையான கலைக்குரிய மகளான சரசுவதியும், பொற் |