பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 10

                                    வரம்பில்கேள்விச்,
சோதிடத்தோர்நாளுரைப்பச் சுதன்மையினுமுதன்மைபெறத்
                                     தொடங்கினானே.

     (இ -ள்.) வரம்புஇல் கேள்வி - எல்லையில்லாத நூற்கேள்வியையுடைய,
சோதிடத்தோர் - ஜ்யோதிஷநூல்வல்லவர், நாள் உரைப்ப - சுபதினத்தை
நிச்சயித்துச் சொல்ல, (அந்நாளிற் சுபமுகூர்த்தத்திலே),- மீது அடுக்கி
பசும்பொன்னால் சுவர்செய்து - பசியபொன்னினாலாகிய கற்களை
ஒன்றன்மேலொன்றாக அடுக்கி அப்பொன்னினாலேயே சுவர்களை யெழுப்பி,
மரகதம் தூண் வீதி போக்கி-மரகதமென்னும் பச்சையிரத்தினத்தாலாகிய
தூண்களை ஒழுங்குபட நிறுத்தி, ஓது இடத்தில் சுருங்காமல்-(சிற்பநூல்) கூறிய
இடத்தினளவிற் சுருங்காதவண்ணமாய், செழுந் துகிர் உத்திரம் பரப்பி -
செழிப்பான பவழத்தினாலாகிய உத்திரத் துண்டுகளை மேலே பரப்பி, உலகு
ஓர் ஏழும் 'மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ!' இது என்ன -
இம்மண்டபம் அழகியபெண்ணான அம்பிகையைத் தனது இடப்
பக்கத்திலுடையவனாகிய சிவபிரான் வீற்றிருத்தற்குத் தக்கவாறு
அமைக்கப்படுகிறதோ வென்று ஏழுலகத்துச்சனங்களும் வியந்து கூறும்படி,
சுதன்மையினும் முதன்மை பெற - சுதர்மையென்கிற தேவேந்திர
சபாமண்டபத்தினும் சிறப்புப்பெறுமாறு, தொடங்கினான் - (ஒரு சபா
மண்டபத்தைச் செய்யத்) தொடங்கினான், (மயன்); (எ - று.)

     மாது இடத்தான்- அம்பிகைக்குத் தனது திருமேனியில் இடப்பகுதியைக்
கொடுத்து அப்பகுதி பெண்வடிவமும் வலப்பகுதி தனது ஆண்வடிவமுமாகக்
கலந்துநின்ற அர்த்தநாரீசுவர மூர்த்தியாகிய சிவபிரான்: மாது - விரும்பப்படும்
அழகுடைய பெண்.  உலகுஓரேழும் மாதிடத்தான்வைகுதற்கு வாய்க்குமதோ
இது என்ன - சிவபிரான் வீற்றிருத்தற்கு இது கிடைக்குமோ என்று
உலகத்தாரனைவரும் விரும்பும்படி யென்று உரைப்பாருமுளர்.  மா திடத்தான்
என்று பதம் பிரித்து, மிக்க உறுதியையுடையவனான நமது அரசன்
வீற்றிருத்தற்கு வாய்ப்பதோ இது என்று நிலவுலகத்துச் சனங்களெல்லாம்
கொண்டாட என்று உரைத்தலுமாம்;  இவ்வுரையில், த்ருடம் என்ற வடசொல்
திடமென்று விகாரப்பட்ட தென்க;  அது - நெஞ்சுறுதி, சொல்லுறுதி,
உடல்வலிமை, ஒழுக்க நிலைகுலையாமை என்பவற்றைக் குறிக்கும்.

     மரகதம் - எழுத்து நிலைமாறுதலாய், மரகதம் எனவும் வழங்கும்;
வடசொல்: வீதி, ஜ்யோதிஷம், ஸு தர்மா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
ஜ்யோதிஷம் - சூரியன் முதலிய சுடர்களின் சஞ்சாரத்தைக் கொண்டு
பயனுரைக்கும் நூல்.  ஸு தர்மா என்ற தேவசபையின் பெயர் - நல்ல
தருமங்கள் தன்னிடத்து நிகழப்பெறுவ தென்று பொருள்படும்.  உத்திரம் -
உத்தரம்.  உலகுஓரேழ் என்றது-மேலேழுலகங்களெனக்கொண்டு, அவற்றில்
முதலதான பூலோகமென்றதில் அதன்கீழுள்ள ஏழுலகங்களும்
அடங்குமென்பர்; அன்றி, இரட்டுறமொழித லென்னும்