உரைப்பாரு முளர்; நாகங்கட்கு இடி அச்சந் தந்து அழிவு செய்யுமென்ப. 'உயர்த்தோன்' என்ற சொல்-உயரநாட்டியவனென்ற பொருளோடு, மற்றையெல்லா வரசர்களுடைய கொடிகளினும் சிறக்கும் படு நிலைநிறுத்தினவனென்றபொருளையுங்காட்டும். இரண்டாவது கொடி - பூங்கொடிபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர்; மெல்லியதாய் ஒல்கிஒசியும் வடிவில் உவமம். 'முரசக்கொடி யுயர்த்தோன் கனற்பிறந்தகொடியும் தானும் குடிபுகுந்தான்' - ஆண்பாலும் பெண்பாலும் கலந்து சிறப்பினால் ஆண்பால் முடிபைப் பெற்றன; பால்வழுவமைதி; [நன் - பொது 27.] 'எத்தமரும்' என்றது, வீமன்முதலிய நான்கு தம்பிய ராதியோரை. தமர்-தம்மவர்: கிளைப்பெயர். இறைஞ்சலர் - வணங்காதவர்: எனவே பகைவராயிற்று. ஏறு - ஆண்மைப்பெயர்; பெரியதையும் சிறந்ததையும் 'ஏறு' என்றல், மரபு. அங்கிவேசமுனிவரிடத்தில் துரோணாசாரியருடன் வில்வித்தையைக் கற்றுவந்தபொழுது, 'எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப் பாதி உமக்குப் பங்கிட்டுக்கொடுப்பேன்' என்று அவர்க்கு வாக்குதத்தஞ் செய்திருந்த பாஞ்சாலராசனாகிய துருபதன்,பின்பு ஒருகாலத்தில் அவர் தம்குழந்தைக்குப் பாலுக்காகப் பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது முகமறியாதவன்போல 'நீ யார்?' என்று வினவிச் சில பரிகாசவார்த்தைகளைச் சொல்லிச் சபையிற் பங்கப்படுத்த, அப்பொழுது அவர் 'என்மாணாக்கனாகிய இராசகுமார னொருவனைக்கொண்டு உன்னை வென்று கட்டிக் கொணரச்செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்' என்று சபதஞ்செய்துவந்து, பின்பு அங்ஙனமே அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி அப்பிரதிக்ஞையை நிறைவேற்றிவிட, யாகசேனன் துரோணர்மீது மிகக்கறுக்கொண்டு அவரைக் கொல்லும் பொருட்டு ஒரு புத்திரனையும், அருச்சுனனது பல பராக்கிரமங்களைக்கண்டு மகிழ்ந்ததனால் அவனுக்கு மணஞ்செய்து கொடுக்கும் பொருட்டு ஒருபுத்திரியையும் பெறவிரும்பிப் புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத் தீயினின்று திட்டத்துய்மனும் திரௌபதியும் தோன்றின ராதலின், திரௌபதி 'கனற்பிறந்தகொடி' எனப்பட்டாள். (8) 9. - அங்கு நாரதமாமுனிவன்வருதல். தம்பியர்கணால்வருடன்றண்டுழாய் முடியோனுந் தானுமேனை, யம்புவிமன்னரு முனிவரனைவருஞ் சூழ்தரவிருந்த வமயந் தன்னிற், தும்புருநாரதரென்னு மிருவரினு நாரதனாந்தோன்றறோன்றப், பைம்பொன்மலர் தூயெதிர்போய்ப் பணிந்திறைஞ்சி யென்செய்தான் பாண்டுமைந்தன். |
(இ -ள்.) பாண்டு மைந்தன் - பாண்டுமகாராசனது மூத்த குமாரனான தருமபுத்திரன், தம்பியர்கள் நால்வருடன் - (வீமன் அருச்சுனன் நகுலன் சகதேவன் என்னும் தனது) தம்பிமார் நான்குபேருடனே, தண் துழாய் முடியோன்உம் - குளிர்ச்சியான |