வேறு. 131.- இதுமுதல் நான்கு கவிகள்- இருதிறத்துச் சேனைகளும் போர் செய்தலையுணர்த்தும். யானை மேல்வரு நிருப ருந்திறல்யானை மேல்வரு நிருபஞ் சோனை மாமுகி லேழு மேநிக ரென்னவம்புதொ டுத்தலிற் றானை யாறுநி றைந்து பல்லணி யாகிமிஞ்சிய சதுர்விதச் சேனை யாவையு மெய்சி வந்தனசிந்தை மாமலர் கருகவே. |
(இ - ள்.) யானைமேல் வரு நிருபர்உம் - (கிருஷ்ணன் பக்கத்தவராய்) யானைமேலேறிவந்த அரசர்களும், திறல் யானைமேல் வரு நிருபர்உம் - (சிசுபாலன் பக்கத்தவராய்) வலிய யானைமேலேறி வந்த அரசர்களும், சோனைமா முகில் ஏழ்உம்ஏ நிகர் என்ன - விடாப்பெருமழை பொழியும் பெரிய ஏழு மேகங்களுமே (தங்கட்குச்) சமான மென்று சொல்லும்படி, அம்புதொடுத்தலின்-(இடைவிடாது) அம்புமழை சொரிந்ததனால், தானை ஆறுஉம் நிறைந்து பல்அணி ஆகி மிஞ்சிய சதுர்விதம் சேனை யாவைஉம் - அறுவகைப் படைகளும் நிரம்பிப் பற்பல அணிவகுப்புகளாய் மிகுந்திருக்கிற நால்வகைச் சேனைகளிலும் பிராணிகளும், (புண்பட்டு), சிந்தை மா மலர் கருக மெய்சிவந்த - (தம் தமது) மேலான இதயகமலம் வாடிக் கருக இரத்தப்பெருக்கினால் உடல்சிவக்கப் பெற்றான்; (எ - று.) நிருபர் - வடசொல். மனிதரைக்காப்பவரென்று பொருள்படும்; நிரு - மனிதர். முகில்ஏழ் - சம்வர்த்தம்; ஆவர்த்தம், புஷ்கலாவர்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம்என. தானை ஆறு - மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்பன. சிந்தைகருகமெய் சிவந்தன -முரண்தொடை. உம்மை ஐந்தனுள் முதலிரண்டும் - எண்ணுப்பொருளன: மற்றை மூன்றும் - முற்றும்மை. ஏகாரம் இரண்டனுள், முன்னது பிரிநிலையோடு தேற்றம்; பின்னது - ஈற்றசை. அரசர்கள் மேகம்போல அம்புமழை சொரிந்ததனாற் படைகளாகிய நதிகள் நிரம்பி என ஒரு பொருள் தொனித்தலுங் காண்க. "பூவிற்குத்தாமரையே" என்றபடி எல்லா மலர்களிலுந் தாமரை சிறத்தலால், அடைமொழிகொடாது வாளா 'மலர்' எனப்பட்டு: மாமலர் எனவே, தாமரையென்றவாறுமாம். இதுமுதல் ஆறுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். 132. | ஓரிரண்டுவரூதினிக்குளுமுயர்தடங்கிரியொப்பவே யீரிரண்டுவிதத்தினாலுமியம்பலுற்றனவெண்ணில்பஃ றேரிரண்டணியுருளினோடுருள்சென்றுமுட்டினதீயிடிக் காரிரண்டெதிர்மலையுமாறெனவண்டபித்திகலங்கவே. |
|