பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 147

    (இ - ள்.) ஓர் இரண்டு வரூதினிக்குள்உம் - (கிருஷ்ணன் சிசுபாலன்
என்னும்) இருதிறத்தார் சேனைகளிலும், உயர்தட கிரிஒப்ப - உயர்ந்த பெரிய
மலைகளுக்கு ஒப்பாக, ஈர் இரண்டுவிதத்தினால்உம் இயம்பல் உற்றன -
நான்குவகையினாற் பெயர் குறித்துச் சொல்லப்படுவனவான, எண் இல் பல்
தேர் - அளவிறந்த பலதேர்களின், இரண்டு அணி உருளினோடு உருள் -
அழகிய இரண்டு முன் சக்கரங்களோடு முன்சக்கரங்கள், - தீ இடி கார்
இரண்டு எதிர்மலையும் ஆறு என - நெருப்புமயமான இடியையுடைய இரண்டு
மேகங்கள் (ஒன்றோடொன்று) எதிர்த்துப் போர்செய்யும் விதம்போல, அண்ட
பித்தி கலங்க சென்று முட்டின - (அதிர்ச்சியினால்) அண்டகோளத்தின்
சுவர்நிலை கலங்கும்படி எதிரோடித் தாக்கின; (எ - று.)

    தம்மேலேறிய அதிரதர் மகாரதர் ஸமரதர் அர்த்தரதர் என்ற நால்வகை
வீரர்களின் தகுதிக்கு ஏற்பத் தேர்கள் நால்வகையாகப் பகுத்துக்
கூறப்படுதலால், 'ஈரிரண்டு விதத்தினாலு மியம்பலுற்றன தேர்' என்றார்;
பல்+தேர் = பஃறேர்: நிலைமொழியீற்று லகரம் தகரம்வர ஆய்தமாகத்திரிதற்கு,
"குறில்வழி லளத் தவ்வணையி னாய்தம், ஆகவும்பெறூஉம் அல்வழியான"
என்பதும், லகரத்தின் முன்வருமொழிமுதல் தகரம் றகரமாகத்திரிதற்கு,
"னலமுன் றனவும் ணளமுன் டணவும் ஆகுந் தநக்க ளாயுங் காலே" என்பதும்
விதியாம்.  'எண்ணிலாத் தேர்' என்றும் பாடமுண்டு.  வரூதிநீ, அண்டபித்தி -
வடசொற்கள்.  'அண்டபித்தி கலங்க முட்டின' என்பது-உயர்வுநவிற்சியணி.
'தடங்கிரி யொப்ப' என்றும், 'தீயிடிக்காரிரண்டெதிர் மலையுமாறென' என்றும்,
ஒப்புமைகூறியது, உவமையணி. இரண்டும் சேர்ந்துவந்தது,
சேர்வையணியாம்.காரிரண்டு எதிர்மலைதல், இல்பொருளுவமை.    (132)

133.சிங்கமொன்றுடனொன்றுசீறுசெருக்கெனும்பிடிசேனைவாய்
வங்கர்கொங்கணர்துளுவராரியர்மகதரொட்டியர்மாளவர்
கங்கர்கொங்கர்தெலுங்கர்சீனர்கலிங்கர்சிங்களர்கௌசல
ரங்கர்சோனகரானவீரரதிர்ந்துதங்களினமர்செய்தார்.

     (இ -ள்.) சேனைவாய் - இருதிறத்துச் சேனைகளிலுமுள்ள, வங்கர்
கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் கங்கர் கொங்கர்
தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் அங்கர் சோனகர் ஆனவீரர் -
வங்கம் முதற் சோனகமீறாகச்சொல்லப்பட்ட பதினாறு தேசத்தவர்களான
வீரர்களும்,-சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி - சிங்கங்கள்
ஒன்றோடொன்று சீறிக்களித்துப் போர்செய்யுந் திறத்தை உவமை கூறும்படி,
அதிர்ந்து தங்களின் அமர்செய்தார் - ஆரவாரித்துத் தங்களுக்குள்ளே
[ஒருவரோடொருவர்] போர்செய்தார்கள்; (எ - று.)

     பற்பல பாஷைகள் பேசும் பலவேறு தேசத்துச் சனங்கள்
போர்வீரர்களாய்ச் சேனைகளில் வந்து அமர்தல், இயல்பு: அன்றியும்
அவ்விராயசூய யாகத்துக்குவந்த பற்பலதேசத்து அரசர்