பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 148

களின் சேனைகளிலுள்ள அவ்வத்தேசத்து வீரர்கள் இவ்விருவர்க்கும்
சகாயமாய் இருதிறத்துச் சேனைகளிலும் புக்குநின்று பேர் செய்யலாயினரென்க.
உவமையணி. வங்கம் முதலியன, ஐம்பத்தாறு தேசங்களிற் சேர்ந்தவை. 
இவற்றில் பெரும்பாலன, பதினெட்டுப் பாஷைகள் வழங்குந் தேசங்களாகவுங்
குறிக்கப்பட்டுள்ளன.  துளுவம் - பஞ்சதிரவிட தேசங்களில் ஒன்று;  மற்றவை-
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்.  ஆர்யர் விந்தியமலைக்கும்
இமயமலைக்கும் இடையிலே கிழக்கும் மேற்கும் கடலெல்லையாகவுள்ள
ஆர்யாவர்த்த மெனப்படுகிற புண்ணிய பூமியில் வாழ்பவர்.  ஒட்டியம் -
ஓட்ரதேசம்.  ஸ்ரீசைலம், பீமேச்சுரம், ஸ்ரீகாளஹஸ்தி என்ற மூன்று சிவலிங்க
ஸ்தானங்களையுடையதேசம்.  அக்காரணத்தால், த்ரிலிங்கதேச மெனப்பெயர்
பெறும்; அது, தெலுங்கமென விகாரப்பட்டது.  இதுவே, தெலுங்கு பாஷைக்கு
உரிய நாடு.  சிங்களம் - ஸிம்ஹளம் என்ற வடசொல்லின் சிதைவு.  அது
இலங்கைத் தீவு; ஈழநாடு.  கோஸலர் - கோஸல தேசத்தார்.  அங்கம் -
சிவபிரானது நெற்றிக் கண்ணின் நெருப்பினா லெரிக்கப்பட்ட மன்மதனது
அங்கம் விழுந்த இடமாதல் பற்றிவந்த பெயர்.  அதிர்ந்து - கர்ச்சித்துச்
சிங்கநாதஞ்செய்து, சிங்கம் - ஸிம்ஹம் என்ற வடசொல் சிதைந்தது;  (யானை
முதலிய மிருகங்களையெல்லாம்) ஹிம்ஸிக்க வல்லதாதலால் ஹிம்ஸமென
வரவேண்டிய பெயர், எழுத்துநிலைமாறி, ஸிம்ஹம் என வழங்கப்பட்டதென்க.
                                                        (133)

134.-வாத்திய கோஷம்.

வெருவரும்படிகம்புகொம்புவிதங்கொண்மாமுரசாதியா
விருவர்தம்படைகளினுமூழியெழுந்தகாலெனவதிர்தலான்
மருவியெண்டிசைமுகமுநிற்பனமத்தவாரணகன்னமும்
திருவிரும்புபுயத்துவானவர்செவிகளுஞ்செவிடானவே.

     (இ -ள்.) இருவர்தம் படைகளின்உம் - (கிருஷ்ணனும் சிசுபாலனுமாகிய)
இருவர்களுடைய சேனைகளிலும், கம்பு கொம்பு விதம் கொள் மாமுரசு ஆதி
ஆ - சங்குகளும் ஊதுகொம்புகளும் பலவகைகொண்ட பெரிய முரசங்களும்
முதலாக (ப்போர்க்கு உரிய வாத்தியங்கள்), வெருவரும்படி - (கேட்பவர்க்கு)
அச்சமுண்டாம்படி, ஊழி எழுந்த கால் என அதிர்தலால் - கற்பாந்த காலத்தில்
எழுந்துவீசுகிற காற்றுப்போல ஆரவாரித்தலால், எண்திசை முகம்உம் மருவி
நிற்பன மத்த வாரண கன்னம்உம் - எட்டுத்திக்குகளினிடத்தும் பொருந்தி
நிற்பனவான மதயானைகளின் காதுகளும், திரு விரும்பு புயத்து வானவர்
செவிகள்உம் - வீரலக்ஷ்மி விரும்பி வசிக்குந் தோள்களையுடைய
மேலுலகவாசிகளான தேவர்களின்காதுகளும், செவிடு ஆன - செவிடாய்
விட்டன; (எ - று.)

     உயர்வுநவிற்சியணி. வாத்தியகோஷம் எட்டுத்திசைகளின்
எல்லையிலும் மேலெல்லையிலுஞ் சென்று மிக அதிர்ந்து நன்கு