பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 154

நெருங்கிய உறவினரே கூறினாலும் கேட்பவர் பொறுப்பரோ? [பொறார்] என்று
சொல்பவர்களும், காது ஒருகுழையோன் இளவலைதேர்மேல் கண்டு தம் கண்
இணை களிப்பார் - ஒரு காதிலே குண்டலத்தைத் தரித்தவனான பலராமனது
தம்பியாகிய கண்ணபிரானைத் தேரின் மீதிருக்கத் தரிசித்து (க் கண்படைத்த
பயன்பெற்றோமென்று) தங்கள் கண்களிரண்டுங் களிக்கப் பெறுபவர்
களுமானார்கள்; (எ - று.)

    காதொருகுழையோனிளவலைத் தேர்மேற்கண்டு - கண்ணன்
வெற்றிபெற்று விளங்கிய காட்சியைச் சேவித்து.  இக்கண்ணன் பக்கல்
மனிதபாவனையை யொழித்துத்தேவபாவனையையே கொள்ளவேண்டுமென்பது,
இரண்டாமடியின் உட்கொள்.  நெருங்கிய உறவினன் செய்த பிழையைப்
பொறுத்திலனென்ற குற்றம் இதனாற் கண்ணனுக்கு வராதென்பது,
மூன்றாமடியின் தாற்பரியம்.  மாது ஒரு பாகன் - அம்பிகையை
வாமபாகத்திலுடையவன்.  கோதொரு வடிவாம் புன்மொழி - குற்றத்தின் ஒரு
வடிவமான வசைமொழி யெனினுமாம்.  காதொரு குழையோன் - ஒரு காதிலே
குண்டலத்தையும் மற்றொரு காதிலே குழையையும் அணிந்தவன்.  இளவல் -
இளமையுடையவன்; அல் - பெயர்விகுதி.  ஆ - ஆறு என்பதன் விகாரம்.
இச்சொல் இங்ஙனம் விகாரப்பட்டு வரும் போது பலவிடங்களில் 'என்னே'
என்பது தொக்குநிற்றலை நூல்களிற் காணலாம்.                   (140)

141.- அனைவரும் கேட்பவியாசமுனிவன் சிசுபாலனது
பழைய வரலாற்றை யெடுத்துக் கூறத்தொடங்குதல்.        

அதிசயித்திவ்வாறிருந்துழியிருந்தோரனைவருமாழி
                                     யான்றன்னைத்,
துதிசெயத்தருமன்சுதன்முதலெவருந்தொழுதெதிர்
                                  வந்துவந்திறைஞ்ச,
விதியெனப்பொருதவெங்களத்திடையவ்
                        வியாதமாமுனியெடுத்துரைப்ப,
மதியுடைக்கடவுள்வீடுமன் முதலாமன்னவர்யாவருங்கேட்டார்.

    (இ-ள்.) இ ஆறு அதிசயித்து இருந்த உழி - இப்படி
ஆச்சரியமடைந்திருந்த போது, இருந்தோர் அனைவர்உம் ஆழியான் தன்னை
துதி செய - அங்கிருந்த அரசர் அந்தனன் முதலியோ ரெல்லாரும்
கண்ணபிரானைத் தோத்திரஞ்செய்ய, தருமன் சுதன் முதல் எவர்உம் எதிர்
வந்து வந்து தொழுது இறைஞ்ச - தருமபுத்திரன் முதலான
பாண்டவர்களெல்லாரும் கண்ணபிரானெதிரில் வந்து வந்து கைகூப்பி வணங்க,-
விதி என பொருத வெம்களத்திடை - ஊழ்வினைப்பயனென்னும்படி போர்
செய்த கொடிய அந்த யுத்த களத்திலே, அ வியாத மா முனி எடுத்து உரைப்ப
- அந்த வேத வியாசமகாமுனிவன் (கண்ணனைப்பலவாறு நிந்தித்து அழிந்த
சிசு பாலனது உடலினின்று ஒரு சோதி எழுந்து கண்ணனது திருவடியிற்
சேர்ந்ததற்குக் காரணமான வரலாற்றை) எடுத்துச் சொல்ல, மதி உடை கடவுள்
வீடுமன் முதல் ஆம் மன்னவர் யாவரும் கேட்டார் - சிறந்த அறிவுடைய
தெய்வத்தன்மையுள்ள பீஷ்மன் முத