பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 155

லான அரசர்களெல்லோரும்  (அதனைக்) கேட்பவரானார்கள்; (எ - று.)-
அவ்வரலாற்றை, அடுத்த ஏழுகவிகளிற் காண்க.

    இருந்துழி-தொகுத்தல்.  ஆழியான் கடல்போலும் கருநிற முடையவன் :
அல்லது, சக்கராயுதத்தை யுடையவன்: அன்றி, கடலிற் பள்ளிகொள்பவன்
முன்பு செய்தவினை தவறாது பலிப்பது போலச் சிசுபாலனைத் தவறாது
கொல்லும்படி போர்செய்த இடமென்பார், 'விதியெனப் பொருதகளம்' என்றார்.
சிசுபாலன் இறத்தற்கேற்ற ஊழ்வினையே இங்ஙனம்போராய் விளைந்த
தென்னும்படி  பெரும்போர்செய்த கள மெனினுமாம்.  பொருத களம்-
பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது.  அவ்வியாதமாமுனி - கண்ணனுக்கு
அக்ரபூஜை செய்யும்படி முன்புசொன்ன வியாசமுனிவன் என்றபடி;
அகரச்சுட்டு, பிரசித்தியையுங்காட்டும்.  அஷ்டவசுக்களில் ஒருவனது
அம்சமாதல் தோன்ற, 'கடவுள் வீடுமன்' எனப்பட்டான்.  பீஷ்மன் என்ற
வடசொல், வீடுமனென விகாரப்பட்டது; அச்சொல்லுக்கு - பயங்கரனானவ
னென்பது உற்பத்தி யருத்தம்: பயங்கரமான விரதமுடையவனென்பது கருத்து.
இவன் தனது தந்தைக்கு யோஜநகந்தியை இரண்டாவது மணஞ்செய்வித்தற்கு
அவளை வளர்த்த தந்தையான செம்படவன் இசைதற் பொருட்டு, தான்
மணஞ்செய்து கொள்வதில்லை யென்றும், மூத்தவனாய்ப் பட்டத்துக்கு உரிய
தனது இராச்சியத்தையும் மற்றை எல்லாச்செல்வங்களையும் தனக்குச் சிறிய
தாயாக வருமவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே கொடுப்பதாகவும், இங்ஙனம்
ஒழித்தற்கரிய மண்ணாசை பெண்ணாசை பொன்னாசையென்னும்
மூவகையாசையையும் இளமையிலேயே ஒழித்துக் கேட்போர் அஞ்சும்படியான
சபதத்தைச் செய்ததனால், இவனுக்கு இப்பெயர்; தேவர்கள் முன்னிலையில்
இந்தவிரதத்தை மேற்கொண்டதனால், தேவவிரதனென்றும் இவனுக்குப்
பெயருண்டு.                                                 (141)

142.- இதுமுதல் ஏழுகவிகள் -ஒருதொடர்:
வியாசமாமுனிவன் கூறிய பழையவரலாறு. 

ஐவகைவடிவாயெங்குமாய்நின்றவச்சுதனமலனானந்தன்,
செய்யொளிதிகழும்பங்கயக்கண்ணன்றிருமகள்கொழுநனைக்

                                             காணத்,
துய்யசெய்தவத்துத்துருவாசமுனிவன்சேறலுஞ்சுடர்
                                 கொள்வைகுண்ட,
மெய்யுறுகோயிற்றுவாரபாலகரவ்வேதபண்டிதன்றனைவிலக்க.

     (இ -ள்.) ஐவகை வடிவு ஆய்-ஐந்துவகை வடிவமுடையவனாய், எங்கும்
ஆய் நின்ற-எல்லாவிடத்தும் வியாபித்து நின்ற, அச்சுதன் - அச்யுதனென்னுந்
திருநாமமுடையவனும், அமலன் - குற்றமில்லாதவனும், ஆனந்தன் -
பேரானந்தத்தை யுடையவனும், செய் ஒளி திகழும் பங்கயம் கண்ணன் -
செந்நிறவொளிவிளங்குந் தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையவனும்,
திருமகள் கொழுநனை-இலக்குமியின் கணவனும் ஆகிய ஸ்ரீமந்நாராயணனை,
காண தரிசிப்பதற்காக, துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் -
பரிசுத்தமான செய்த தவத்தையுடைய துருவாசமகாமுனிவன்
(ஸ்ரீவைகுண்டத்துக்குச்) செல்லும்போது, சுடர் கொள்