வார்த்தையைச் செவியுற்று, அந்தணன் தனை எதிர்கொண்டு - அம்முனிவனை எதிரில் வந்து வரவேற்று உபசரித்து, கலங்கிய துவாரபாலர் நின்சாபம் கடப்பது எக்காலம்ஓ என்றான் - '(உனது சாபத்தாற்) கலங்கிய இவ்வாயில்காவலர் உனது சாபம் நிவிருத்தியாகப் பெறுவது எந்தக் காலத்திலோ?' என்று வினாவினான்; தன்னை வைகுண்டத்துக்குப் போகவொட்டாதபடி கோயில் வாயிலில் நின்று கதிவிலக்கினவர்களைக் கோபித்து அவ்வுலகத்தில் அவ்விடத்தையும் அதிகாரபதவியையும் இழந்து கீழுள்ள பூலோகத்தில் ஜனனகதியிற் சேர்க என்று சபித்தான். தவத்திற் சிறந்து ஆற்றலாற் பெரியரான முனிவர் சபித்த சாபம் அவர்கள் தாமே நிவிருத்தி செய்தாலன்றி முழுமுதற்கடவுளாலும் நீக்க வொண்ணாதென்பது இங்கு விளங்கும். 'அம் துளவம் அலங்கல் மௌலியான்' என மொழிமாற்றி, அழகிய திருத்துழாய்மாலையையணிந்த முடியை யுடையானென்றல், நேர். 'விலங்கிய' என்பதைப் பிறவினைப் பொருளில் வந்த தன்வினை யென்றாவது, விலக்கிய என்ற பிறவினை எதுகை நயம் நோக்கி விலங்கிய என மெலித்தல் விகாரமடைந்த தென்றாவது கொள்க. "சாபத்தாலும் சாபமொழி தன்னால் வளருந்தவத்தாலும், கோபத்தாலும் பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன்" என்னும்படி துருவாசமுனிவன் மிக்க முன்கோபியாதலால், 'வெஞ்சின முனிவரன் எனப்பட்டான்; 'சுலபகோபரானமஹர்க்ஷி' என்றான், இவனைக் காளிதாஸனும். "குணமென்னுங் குன்றேறிநின்றார் வெகுளிகணமே" ஆதலால் அக்கோபம் விரைவில் தணிந்து அருளுமியல்புடையனென்பார் 'அந்தணன்' என்றார். (143) 144. | என்றலுமுனிவன்பரிந்திவரெழுகாலின்புறுமன்பராய்வருத, லன்றிமும்மடங்குபகைவராய்வருதலல்லதிங்குன்பதமணுகார், மன்றலந்துளபமாலையாயென்னமலர்மகண்மகிழ்நனுமவரைக், கன்றியமறையோன்சாபநீர்கடக்குங்கருத்துமற்றியாது கொலென்றான். |
(இ -ள்.) என்றலும் - என்று (திருமால்) வினாவியவுடனே, முனிவன் - துருவாசன், பரிந்து-(திருமாலின் கோயில்வாயில் காவலாளரைத் தான் சபித்தமைக்கு) இரங்கி, 'மன்றல் அம் துளபம்மாலையாய் - நறுமணமுள்ள அழகிய திருத்துழாய்மாலையை யுடையவனே! இவர்-இத்துவாரபாலகர், இன்பு உறும் அன்பர் ஆய் எழு கால் வருதல் - (தேவரீர் பக்கல்) மகிழ்ச்சி மிக்க அன்பையுடைய பக்தர்களாய் ஏழுபிறப்புப் பிறத்தல், அன்றி-அல்லாமல், பகைவர் ஆய் மும் மடங்கு வருதல் - (தேவரீர்க்கு) விரோதிகளாய் மூன்று முறை பிறத்தல், அல்லது - என்ற இவ்விரண்டிலொன்றினாலன்றி, இங்கு உன்பதம் அணுகார் - இவ்விடத்தில் தேவரீருடைய திருவடியைச்சாரார்,' என்ன - என்று (சாபநிவிருத்தியை வகுத்துக்)கூற,-மலர்மகள் மகிழ்நன்உம் - செந்தாமரை மலரில்வாழுந் திருமகளின் கணவனான அத்திருமாலும், அவரை - அவ்வாயிலோரை நோக்கி, கன்றிய மறையோன் சாபம் நீர் |