கடக்கும் கருத்து யாதுகொல் என்றான் - 'கோபித்த முனிவன் (உங்களைச்சபித்த) சாபத்தை நீங்கள் நிவிருத்தி செய்துகொள்ளும் ஆலோசனை (இவ்விரண்டில்) எது?' என்று வினவினான்; (எ - று.) மற்று - அசை; வினைமாற்றுமாம். எழுமுறை அன்பராய்ப் பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ? மும்முறை பகைவராய்ப்பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ? இவ் விருவகையில் நுமது விருப்பம் யாது? என்று வினவினான். 'பரிந்து' என்றது, அவன் கொண்ட கழிவிரக்கத்தைக் காட்டிற்று. 'அன்றி' என்றது - விகற்பப்பொருளில் வந்தது. 'துளவமோலியாய்' என்றும் பாடமுண்டு. மலர்மகள் மகிழ் நன் - மலர்மகளோடு கூடிமகிழ்பவன். மகிழ்நன் என்ற பெயரில், மகிழ் - பகுதி; ந் - பெயரிடைநிலை. கருத்துமக்கியாது கொல்' என்றும் பாடமுண்டு. 'முனிவன் பரிந்து' என்றவிடத்து 'முனியுந்தொழுது' என்றும், 'மும்மடங்கு பகைவராய்' என்றவிடத்து 'மும்மடங்குன் பகைவராய்' என்றும் சிலபிரதிகளிற் காணப்படுகின்றன. (144) 145. | மற்றவரிறைவன்மலரடிவணங்கிவான்பிறப்பேழுறமாட்டே, முற்றுமுப்பவமுமுனக்குவெம்பகையாயுற்பவித்துன்பதமுறுவேம், வெற்றிகொண்முதிர்போர்நேமியாயென்றார்விமலனுங் கொடியவெஞ்சாப, மற்றிடும்வகையவ்வரமவர்க்களித்தானசுரராயவரும்வந்துதித்தார |
(இ -ள்.) மற்று - பின்பு, அவர் - அத்துவாரபாலகர், இறைவன் மலர் அடி வணங்கி - திருமாலினது தாமரைமலர் போன்ற திருவடிகளை நமஸ்கரித்து, 'வெற்றி கொள் முதிர் போர் நேமியாய் - ஜயங்கொள்ளும் பெரும் போரைச் செய்கின்ற சக்ராயுதத்தையுடையவனே! வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் - அதிகமான ஏழுபிறப்புக்களை (நாங்கள்) விரும்பமாட்டோம்; முப் பவம்உம் உற்று உனக்கு வெம் பகை ஆய் உற்பவித்து உன் பதம் உறுவேம் - (குறைவான) மூன்று பிறப்புக்களையே ஏற்றுக்கொண்டு உனக்குக் கொடிய பகைவராய்த்தோன்றி(ப் பின்பு) உனது திருவடியைச் சேர்வோம்,' என்றார்- என்று (தமது கருத்தை) விண்ணப்பஞ் செய்தார்கள்; (அது கேட்டு), விமலன்உம் - குற்றமற்றவனான திருமாலும், கொடிய வெம்சாபம் அற்றிடும் வகை அ வரம் அவர்க்கு அளித்தான் - அவ்வாறே (மும்முறை பகைவராய்ப்பிறந்து) மிகக்கொடிய அச்சாபந் தீரும்படி அவர்கட்கு வரங்கொடுத்தருளினான்; அவரும் அசுரர் ஆய் வந்து உதித்தார் - (அங்ஙனமே) அவர்களும் (முதலில்) அசுரர்களாய்(ப் பூமியில்)வந்து பிறந்தார்கள்; (எ - று.) அன்பராய்ப் பிறப்பதானால் ஏழுபிறப்பு எடுக்கவேண்டியதனாலும், அன்பராய்ப் பிறந்தால் விரைவில் அழிவுநேராதாதலின் காலம் நீட்டிக்கு மாதலாலும், அவர்கள் அன்பராய்ப் பிறத்தற்கு உடன்பட்டிலர். மும்முறை பகைவராய்ப் பிறந்து அப்பிறப்புத் |