பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 160

தால்" என்றபடி, அவன் பூமியிலிறவாத வரம் பெற்றவனாதலால்.  தரணியிற்
கொடுமைபுரிந்து என்று இயைத்துப் பொருள் கொள்ளினுமாம்.  மூவுலகு -
சுவர்க்கம் பூமி பாதாளம்.  அங்குரித்து-அங்குரமென்ற
வடமொழிப்பெயரினடியாப் பிறந்த வினையெச்சம்: அங்குரம் - முளை. 'நரவரி'
என்றவிடத்து 'ஆளரி' என்றும் பாடமுண்டு; பொருள் அதுவே.    (146)

147.அரக்கர்தங்குலத்துக்கதிபதியாகியாண்டுபோய்மீண்டு
                                    மங்குரித்துத்,
தருக்குடனவர்களிருவருமுறையாற்றம்பியுந்தமையனுமானார்,
சிரக்குவையுடனேபுயவரைநிரையுஞ்சிந்தவச்சிந்து வினிடையே,
சரக்குவைசொரிந்தானமலனவ்வுகத்துத் தசரதன்றன்
                                     வயிற்றுதித்தே.

     (இ -ள்.) மீண்டும் - மீளவும், அவர்கள் இருவரும்-அத்துவார
பாலகரிரண்டுபேரும், ஆண்டு - அவ்விடத்து [நிலவுலகத்தில்], போய்
அங்குரித்து - சென்று பிறந்து, அரக்கர்தம் குலத்துக்கு தருக்குடன் அதிபதி
ஆகி - இராக்கதர்களுடைய கூட்டத்துக்குப் பெருமிதத்தோடு தலைவர்களாய்,
முறையால் தம்பியும் தமையனும் ஆனார் - உறவுமுறைமையினால் தம்பியான
கும்பகர்ணனும் தமையனான இராவணனுமானார்கள்: அமலன் -
பரிசுத்தமூர்த்தியான திருமால், அ உகத்து - அந்தத் திரேதாயுகத்திலே,
தசரதன் தன் வயிறு உதித்து - தசரதசக்கரவர்த்தியின் வயிற்றில் தோன்றி
(ஸ்ரீராமாவாதாரஞ்செய்து), அ சிந்துவின் இடையே - கடலினிடையேயுள்ளதான
அவ்விலங்காபுரியிலே, சிரம் குவையுடனே புயம்வரைநிரையும்சிந்த -
(அவ்விராவண கும்பகர்ணர்களுடைய) தலைகளின் குவியலுடனே மலைபோன்ற
தோள்களின் வரிசையும் அற்றுவிழும்படி, சரம்குவை சொரிந்தான் -
அம்புக்கூட்டங்களை மிகுதியாகப் பிரயோகித்தான்;  (எ - று.)   

     இராவணன் பத்துத்தலையும் இருபதுதோளுமுடையவனாதலால்,
'சிரக்குவையுடனே புயவரைநிரையும்' எனப்பட்டது.  தசரதன் என்ற
வடமொழிப்பெயர் - பத்துத்திக்கிலுஞ் செல்ல வல்ல தேருடையவனென்று
பொருள்படும்:  தச - பத்து, ரதம் - தேர். சிந்துவினிடையே சிந்த - கடலிலே
சிதறிவிழ எனினுமாம்.  இருவரும் அதிபதியாகி - பன்மையொருமைமயக்கம்.
தருக்கு - செருக்கு, அகங்காரம், களிப்பு.  ஸிந்து - வடசொல்.        (147)

148.இந்தநல்லுகத்திலிறைவனுக்கன்னோரிருவருங்கிளைஞரா
                                       யெய்தி,
வந்தனர்வஞ்சக்கஞ்சமாமனுமிம்மைத்துனன்றானுமாய்மன்னோ,
சிந்தையிலுணர்வீரென்றுகொண்டுரைத்தான்சித்தசித்
                                துணர்ந்தருண்முனியு,
மந்தமன்னவையினிருந்துளோரெல்லாமமலனைத்துதித்ததி
                                     சயித்தார்.

     (இ -ள்.) அன்னோர் இருவர்உம் - அந்தத் துவாரபாலகரிரண்டு பேரும்,
இந்த நல் உகத்தில் - இந்தநல்ல (துவாபர) யுகத்திலே,