பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 165

வேந்தர்உம் - (மத்ஸ்யதேசத்து அரசனான) விராடனும் (பாஞ்சால தேசத்து
அரசனான) யாகசேனனும் முதலான அரசர்களும், தம்பதி புகுந்தார் - தம்தம்
நகரத்துக்குப் போய்ச் சேரலானார்கள்; சராசனம் தட கை சல்லியன் முதலோர்
- வில்லையேந்திய பெரிய கையையுடைய (மத்திரதேசத் தரசனான) சல்லியன்
முதலிய அரசர்களும், கிளையுடன் - சுற்றத்தாருடனே, தம் புரம் சார்ந்தார் -
தங்கள் நகரத்துக்குப்போய்ச் சேரலானார்கள்; (இங்ஙனம் வந்தவரனைவரும்
மீள), பராவு அரு முதன்மை பாண்டவர் - துதித்தற்கு அரிய
தலைமையையுடைய பாண்டவர்கள், கடல்பார் பண்பு உறதிருத்தி ஆண்டு
இருந்தார் - கடல் சூழ்ந்த நிலவுலகத்தை நன்மையமையும்படி
சீர்திருத்தஞ்செய்து அவ்விடத்திலே [இந்திரப்பிரத்தநகரத்திலே] அரசாண்டு
கொண்டிருந்தார்கள்; (எ - று.)

    இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், 'ஆண்டு' என்பதற்கு
அவ்விடத்தில் என்றும், அரசாட்சி செய்து என்றும் இருபொருள்
கொள்ளப்பட்டன.  தம்நகர் அடைந்தார், தம்பதி புகுந்தார், தம்புரம்சார்ந்தார்
என்ற வெவ்வேறு சொற்றொடர்கள் ஒருபொருளனவாய் வந்தது,
பொருட்பின்வருநிலையணி. 'அரா' என்ற குறியதன்கீழ் ஆ குறுகாது
'அம்' சாரியைபெற்று, அராவம் என்று நின்றது.  அராவக்கொடியோன் என்ற
தொடர் - பாம்புபோலக் கொடியவனென்றும் பொருள்படும்.  யாகசேநன்
என்பது, துருபதனது மற்றொரு பெயர்; இவன், திரௌபதியின் தந்தை.  சல்யன்
- (பகைவர்க்கு) அம்பு நுனிபோல் (வருத்தஞ்செய்)பவன்;  சல்யம் -
அம்புமுனை.  இவன், பாண்டு மகாராசனது இரண்டாம் மனைவியான
மாத்திரியின் உடன்பிறந்தவனாதலால், நகுல சகதேவர்க்கு மாமனாவன்.
சராஸநம் என்ற வடசொல் சர அஸநம் என்றுபிரிந்து - அம்புகளைத்
தள்ளுவது என்றும்; சரஆஸநம் என்று பிரிந்து - அம்புகளை (த்
தொடுத்தற்காக) வைத்தற்கு இடமாவது என்றும் காரணப் பொருள்படும்.
பண்பாவது எல்லாரியல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல்.  "பண்பெனப்படுவது
பாடறிந்தொழுகல்." என்றார் கலித்தொகையிலும்.  'கிளையுடன்
தம்புரஞ்சார்ந்தார் என்றவிடத்து 'தமருடன் தம்புரஞ் சார்ந்தார்' என்று
சிலபிரதிகளிற் பாடல் காணப்படுகிறது.                       (152)

153.-தருமபுத்திரனதுகொடைச்சிறப்பு.

முன்குலத் தவர்க்கு முனிகுலத்தவர்க்கு மும்மதக்
                               கைம்முகக்களிற்று,
மன்குலத் தவர்க்கும் வான்குலத் தவர்க்கும்
                     வரம்பிலா வகைக்கலை தெரியு,
நன்குலத் தவர்க்கும் பொருளெலாநல்கி நாடொறும் புகழ்மிக
                               வளர்வான்,
றன்குலக் கதிர்போற்றேய்ந்தொளி சிறந்தான் றண்ணளித்
                               தருமரா சனுமே.

     (இ -ள்.) தண் அளி தருமராசன்உம் - குளிர்ச்சியான
கருணையையுடைய தருமபுத்திரனும்,-முன் குலத்தவர்க்குஉம் - (நால்வகை
வருணத்துள்ளும்) முதல்வருணத்தவரான அந்தணர்களுக்கும்,
முனிகுலத்தவர்க்குஉம் (அவர்களுள்ளுஞ் சிறந்தவர்