பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 169

வேறு.

2,-கவிக்கூற்று.

தாமரை யனைய செங்கட் டரணிபனிராய சூய
மாமக முற்றித் தங்கண்மாநகர் புகுந்த பின்னர்
நாமரு பனுவன் மாலை நாகவேறுயர்த்த செல்வக்
கோமக னிளைஞ ரோடுங்குறித்தது கூற லுற்றாம்.

     (இ -ள்.) தாமரை அனைய - செந்தாமரை மலர்போன்ற, செம் கண்-
சிவந்த கண்களையுடைய, தரணிபன் - யுதிஷ்டிரமகாராஜன் (செய்த),
இராயசூயம் மா மகம் - இராயசூயமென்று பெயர் கொண்ட பெரிய யாகத்தை,
முற்றி - நிறைவேற்றி, தங்கள் மா நகர் புகுந்த பின்னர் - (துரியோதனன்
முதலியோர்) தம் தமது பெரியநகரத்தைச் சேர்ந்த பின்பு,- நா மரு -
(கவிகளின்) நாக்கிற் பொருந்திய, பனுவல் மாலை - பிரபந்தங்களாகிய
மாலையைச் சூடியவனும், நாகம் ஏறு உயர்த்த-பெரிய பாம்புக்கொடியை உயர
எடுத்துள்ளவனும், செல்வம் கோ மகன் - செல்வத்திற்குஉரிய
திருதராஷ்டிரமகாராஜனது புதல்வனுமாகிய துரியோதனன், இளைஞரோடும்
குறித்தது - (தன்னுடைய) தம்பிமார்களோடு ஆலோசித்து நடத்திய செய்தியை,
கூறல் உற்றாம் - சொல்லத்தொடங்கினோம்; (எ - று.)

     இதனால், கவி தாம் இச்சருக்கத்திற் சொல்லப் போகின்ற விஷயத்தை
இன்னதெனத் தொகுத்துரைத்தார்; இது 'தொகுத்துச் சுட்டல்'என்னும் உத்தி.
தனது தந்தையாகிய பாண்டுமகாராஜாபித்ருலோகத்திலிருந்து நாரதமகாரிஷி
மூலமாகச் சொல்லியனுப்பியபடி யுதிஷ்டிரராஜன் இப்பெருவேள்வியைச்
செய்துமுடித்தனனென அறிக.  'தங்கள் மாநகர் புகுந்தபின்னர்' என்றது,
கவிதாம் கூறப்போகின்ற வரலாற்றின் தொடக்கத்திற்கு எல்லை கூறியவாறு;
அநுவாதமன்று.  துரியோதனனிடத்துச் சன்மானம் பெறுதற்காகக் கவிகள்
பலவகைத் தோத்திரப் பிரபந்தங்களை அவன் மீது பாடுவரென்க;  அவ்வாறு
பாடப்பட்ட செய்யுட் கோவைகள் அன்போடு சூட்டப்படுகிற
மாலைபோலிருத்தலால், 'பனுவன்மாலை' எனப்பட்டன.  திருதராஷ்டிரன்
மூத்தவனாதலால் அரசிற்கு உரியவனென்ற காரணம்பற்றி, 'செல்வக்கோ'
எனப்பட்டான்;  இனி, செல்வம் என்பதை கோமகனுக்கு அடைமொழியாக்கி,
செல்வச்சிறப்புள்ள ராஜகுமாரன் எனினுமாம்.  "வரம்பிலா நிதிகள்யாவுங்,
கானலங் கடல் சூழ்வையங் காவலன் காவலென்றான்" என்று கீழ்
இராயசூயச்சருக்கத்துக் கூறியவாறு தருமபுத்திரனது கட்டளைப்படி ராயசூய
யாகத்தில் தநாத்யட்சனாயிருந்ததனாலும், துரியோதனனை 'செல்வக்கோமகன்'
எனத்தகும்;  அச்சமயத்தில் தருமனது செல்வப்பெருக்கு முழுவதையும்
நன்றாகக் கண்டு பொறாமை கொண்டவனென்க.  அன்றியும், துரியோதனன்
ராஜராஜனும் கையில் தநரேகையுடையவனுமாதல் காண்க.  யாகத்திற்கு வந்த
துரியோதனன் முதலியோர் தருமபுத்திரனது விருப்பத்தின்படி