பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 170

அவ்யாகத்திற்குவேண்டிய பல தொழில்களைப் புரிந்தார்களாதலால்,
'மகத்தைமுற்றி' எனப் பிறவினையாகக் கொள்ளப்பட்டது;  தன்வினையாகக்
கொண்டால், யாகமானது நிறைவேற எனப்பொருள்படுமாறு 'முற்றி' என்பதை
எச்சத்திரிபாகக்கொள்ளவேண்டும்.

    தாமரையனைய செங்கண் தரணிபன் - செந்தாமரைக்கண்ணனும்
(கொடியவர் பலர் ஒருங்கு நிறைந்ததனாலாகிய பூமிபாரத்தைத் தீர்த்துப்)
பூமிதேவியைக் காக்கத் திருவவதாரஞ் செய்துள்ளவனுமான கண்ணபிரான்,
இராயசூயமாமகம் முற்றி - (தருமபுத்திரனது) சிறந்த ராயசூயயாகத்தை
நிறைவேற்றி, தங்கள் மாநகர் புகுந்தபின்னர் - தங்கட்கு உரிய சிறந்தநகரமாகிய
துவாரகாபுரிக்குச் சென்ற பின்பு, துரியோதனன் தனது தம்பிமாரோடும்
ஆலோசித்துச்செய்த காரியத்தை இனிச் சொல்லத் தொடங்கினோம் என்று
இச்செய்யுளுக்குப் பொருளுரைப்பின், கண்ணன் பாண்டவர்களுக்கு உதவியாக
அவர்களுடைய இந்திரப்பிரஸ்த நகரத்திலில்லாத சமயம் பார்த்துத்
துரியோதனாதியர் சூழ்ச்சி செய்யலாயின ரென்பது போதரும்.  இப்பொருளில்,
'தங்கள்' என்பது மரியாதைப்பன்மை யென்னவேண்டும்.  மேல் 17, 18, 19-
ஆஞ் செய்யுள்களையுங் காண்க.  முன்னிரண்டடி - கீழ் இராயசூயச்சருக்கத்து
151 - ஆஞ் செய்யுளில் "கருமுகிலனையமேனியங்
கருணைக்கண்ணனுங்கிளையுடன் துவரைத், திருநகரடைந்தான் சென்று
வன்றிறல்கூர்சேதிபப்பெரும்பகை செகுத்தே" என்றதன் அநுவாதமாம்.
தருமபுத்திரனது ராயசூயயாகம் இனிது நிறைவேறுவதற்குக் கண்ணன்
பலபடியாலும் உதவியமை பிரசித்தம்.

     கண்கள் சிவந்திருத்தல், உத்தமபுருஷ லஷணம்.
செவ்வரிபரந்திருத்தலால், கண்களுக்குச் செந்தாமரைமலர் உவமை.  தரணிபன்
- பூமியைக் காப்பவன்;  இராயசூயம் என்ற யாகப் பெயரின் காரணம்:-
அரசனால் சோமலதையைப் பிழிந்து செய்யப்படுவதென்றும், ராஜா என்னும்
பெயருள்ள சோமலதை நொருக்கப்படுகிற தென்றும் வடநூல்களிற் காண்க.
இது - எல்லா அரசர்களையும் வென்று அவர்களிடங்கொண்ட பொருளைச்
செலவிட்டுச் செய்வதொரு பெருவேள்வி.

     ஏறு - ஆண்மைப்பெயர்;  சிறந்ததையும் பெரியதையும் ஏறென்றல், மரபு.
ஏறாகிய நாகம் எனக் கூட்டுக.  உயர்த்த மகன் என இயையும்.  நாகம் -
நகத்தில் [மரத்தில் அல்லது மலையில்] வாழ்வது என்று பொருள்பெறும்.
நாகவேறு என்பது - இங்கே, அதன்வடிவத்தை யெழுதிய துவசத்துக்குத்
தானியாகுபெயர்.  தனது கொடுமைக்கு அடையாளமாகத் துரியோதனன்
பாம்பைத் தனது கொடியிற்கொண்டனன்;  அது - அவனது
நன்றியறிவின்மைக்கும்,  எப்பொழுதும் வக்கிரகதியிற் செல்லுந் தன்மைக்கும்,
நாவிரண்டுடைமைக்கும் அறிகுறியாகின்றது.  குறித்தது - பெயர்;  இங்கு,
இச்சொல் - குறித்துச்செய்த செயலுக்கு