பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 175

வாழ்க்கை அளவு ஏது - அத்தருமபுத்திரனது செல்வ வாழ்க்கைக்கு
அளவுதான் உண்டோ? யார் இனி எதிர் உண்டு - இனி எவர்தாம்
(அத்தருமபுத்திரனுக்கு) எதிராகவுள்ளவர்?' என்று-பரிவு கூர-
(துரியோதனனிடத்து) அன்பு மிகுதலினால், பாதகம் நினைவை - பாவத்துக்குக்
காரணமான (தனது) எண்ணத்தை, தானும்- (கர்ணன்) தானும், பகர்ந்தனன் -
சொன்னான்; (எ - று.)

     தாது - தேனுமாம்.  தருமத்தினின்று தவறியவர்க்குத் தக்க தண்டனை
செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தர்மனென்று பெயர்.
கொடியவர்க்கு ஏற்ற தண்டனை செய்து நல்லவர்களை நன்கு பாதுகாக்கிற
நடுவுநிலைமையில் தந்தையாகிய யமனினும் மைந்தனாகிய யுதிஷ்டிரன்
மிகப்பலமடங்கு மேம்பட்டவனென்ற சிறப்புத்தோன்ற, 'தருமன் மாமதலை'
என்றார்.  பாண்டவர்க்குக் குவளைப் பூமாலை உரியதாதலால், "தாதவிழ்
குவளைமாலை" எனத் தருமனுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.
முன்னாளில் இராயசூயயாகஞ் செய்து முடித்த அரசர்கள் பலருளராயினும்
மயனாற்கட்டியமைக்கப்பட்ட மண்டபச்சிறப்பும், வீமன் முதலிய
தம்பியர்திக்விஜயஞ்செய்து கொணர்ந்த திறைப்பொருட் சிறப்பும், வியாசன்
கண்ணன் முதலியோர் உடனிருந்து யாதோரிடையூறுமின்றி வேள்வியை இனிது
முடித்த மேன்மையும் முதலியனவாகப் பலவகை மேம்பாடுகள் தருமபுத்திரன்
செய்த யாகத்தில் மிக்கிருந்தனவாதலால், அது கண்டு பொறாமை கொண்ட
கர்ணன் அவ்வாறே பொறாமைகொண்டிருந்த துரியோதனனை நோக்கிக்
கூறினனென்க.  அறநெறியிற் சிறிதுந் தவறாது நடக்குந் தருமபுத்திரனைப்
பலவகையாலும் வருத்துதற்குக் காரணமாதலால், அவன் நினைவு 'பாதக
நினைவு' எனப்பட்டது.  தானும், உம்மை - கதைத் தொடர்ச்சி நோக்கி
இறந்தது தழுவிய எச்சப்பொருளது;  சிந்தையோடிருந்த துரியோதனனுக்குக்
கர்ணன் பாதக நினைவைப்பகர்ந்தன னென்க:  இனிச் சகுனிமுதலியோர்
கூறுவதையுந் தழுவி நிற்றலால் எதிரதுதழுவியதுமாம்.  'பரிவுகூர' என்பதற்கு.
(தன் மனத்து) வருத்தம் மிக என்றும், (துரியோதனன் மனத்து) வருத்தம் மிக
என்றும் பொருள் கூறவும் இடனுண்டு.  கூர-செயவெனெச்சம்.    (159)

7.-சகுனி வார்த்தை.

விதரண வினோதன் சொன்னவார்த்தையும் வேந்தர் வேந்தன்
இதயமு மொன்றாய் நின்றவியற்கையைச் சகுனி கண்டு
புதைநக மடங்க னாளும்புறஞ்செலா தொடுங்கு மானான்
மதகரி விடுமோ வென்றான்வசையிசை யாகக் கொள்வான்.

     (இ -ள்.) வசை இசை ஆக கொள்வான் - (பிறர்கூறும்) வசை
மொழிகளையே (தனக்குப்) பெரும்புகழாகக் கருதுபவனாகிய சகுனி, -
விதரணம் வினோதன் சொன்ன வார்த்தையும் - ஈகையையே