பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 202

கேள்வி ஆதி நால் மறையும் - (எழுதாக்கிளவியாய்) உபதேச கிரமத்திலே
வருகின்ற பழமையாகிய நான்குவேதங்களும், உள்ள அளவும்-
இருக்கிறவரையிலும், இ வசை அறாதே-(சூதாட்டத்தினாற்கவர்ந்தா ரென்கிற)
இந்தப்பழி (உங்கட்கு) நீங்கவே மாட்டாது; (எ - று.)-ஈற்றுஏகாரம் - தேற்றம்.

     ஒருநாளும் அழியாது எந்நாளும்பழிநிலைத்திருக்கு மென்பதற்கு,
'திரிமூர்த்திகளும் வேதங்களும் உள்ளவளவும்' என்றான்.  தீதினால் வரித்து -
கொடியவஞ்சனையினாற் கட்டுப்படுத்தி என்றலுமாம்.  மோசக்கருத்தினால்
(பாண்டவர்களை) வரவழைத்து எனினுமாம்.  பிரமன் திருமாலின்
நாபிக்கமலத்தில்தோன்றியவனும்நான்கு திசையையும் நோக்கிய
நான்குமுகங்களையுடையவனு மாதலால்,'போதினான்முகன்' எனப்பட்டான்.
மால் - (அடியார்கள் பக்கல்) அன்பு, (திருமகளிடத்துக்) காதல்
இவற்றையுடையவன்.  புரிசடை - கட்டுவதற்கு உரிய சடையுமாம்.
சிவபிரானதுசடைமுடி, கபர்த்தமென்று பெயர்பெறும். ஆக்கல் அளித்தல்
அழித்தல்என்னும் முத்தொழிலின் முறைபற்றி, 'நான்முகனும் மாலும்
சடையவனும்' என்று அடுக்கினார். ஸ்வரங்களையே பிரதானமாகக் கொண்டுள்ள
வேதங்கள்எழுதிப்படிக்க முடியாமல் குரு சிஷ்ய கிரமத்திற் கேட்டோதியே
யறியப்படுகின்ற முதனூலாதலால் 'கேள்வியாதி நான்மறை' என்றார்.
ஆதிநான்மறை - லௌகிக சப்தங்கட்கெல்லாம் முதற்காரணமான
வேதங்கள்எனினுமாம். நான்மறை - ருக், யஜு ர் ஸாமம், அதர்வணம் என்பன. 
தைத்திரியம்.  பௌடியம், தலவகாரம், ஸாமம் என்றலு மொன்று.         (187) 

35.-இதுவும், அடுத்த கவியும்-சினங்கொண்ட
துரியோதனன் வார்த்தை.

என்றவ னுரைப்பக் கேட்டே யெரியெழு மனத்த னாகி
ஒன்றிய கேண்மைத் தந்தைக் கொருபுடை வார முண்டோ
வன்றிறன் மைந்தர் வாழ்வு வாங்கியின் றெமக்குத் தந்தாற்
புன்றொழில் வசையே யன்றிப் புகழ்கொலோ புகல்வ தம்மா.

      (இ - ள்.) என்று - இவ்வாறாக, அவன்உரைப்ப-அவ்விதுரன் சொல்ல,
கேட்டு-,(துரியோதனன்), எரி எழு மனத்தன் ஆகி- (அவ்விதுரனது
சொற்களாற்) கோபாக்கினிபற்றியெரிகிற மனமுடையவனாய், (அவ்விதுரனை
நோக்கி), 'ஒன்றிய கேண்மை தந்தைக்கு-(இருதிறத்தாரிடத்திலும்) ஒத்த
உறவுரிமையையுடைய தந்தையாகிய திருதராட்டிரனுக்கு, ஒருபுடை வாரம்
உண்டோ - (எங்களிருதிறத்தாருள்) ஒருபக்கத்தில் பட்சபாதமாக அன்பு
கொள்ளத்தக்கதோ? இன்று - இப்பொழுது, வல் திறல் மைந்தர் வாழ்வு -
மிக்கவலிமையுடைய மைந்தர்களாகிய பாண்டவர்களுடைய செல்வத்தை, வாங்கி
- (ஓலையெழுதிக்) கவர்ந்து, எமக்கு தந்தால் - எங்கட்குக்கொடுத்தால்,
புகல்வது - (அப்பொழுது யாவராலுஞ்) சொல்லப்படுவது, புல் தொழில்
வசையே அன்றி -