பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 205

     நீ "தந்தைக்கு ஒருபுடைவார முண்டோ" என்று கூறியது எனக்கும் ஒக்கு
மாதலால், யானும் பட்சபாதமாகக் கூறமாட்டேனென்று கொள்ளவேண்டியதா
யிருக்க.  என்னை மாத்திரம் 'நேயமும் அவர்கள் மேலே, மனக்கருத்தும்
அங்கே' என இவ்வாறு பழித்துக்கூறுவது, உனது வார்த்தைக்கே முன்னும்
பின்னும் முரணாகின்றது என விதுரன் துரியோதனனுக்கு எடுத்துக் காட்டியபடி.
இதனால், விதுரன் தான் பட்சபாதமாகக் கூற வகையில்லை யெனச்
சாதித்தவாறு காண்க.  தன்மனம் வருந்துமாறு துரியோதனன் பலபடிசொல்லவும்
அதனைப்பொறுத்து அத்துரியோதனனுக்கு மீளவும் நன்மை உபதேசிக்கத்
தொடங்கிய விதுரனது மனவுறுதியுடைமையைப் பாராட்டிக் கூறுவார் வெந்திறல்
விதுரன்' என்றார். 

     ஈர்கல் - அறுத்தல், பிளத்தல், இலக்கணையால் விருத்துதலைக் குறித்தது.
அன்றி, மனமாகிய மரத்தைக் கொடுஞ்சொ  ளாகிய வாள் அறுக்க என்று
கொண்டால் என்ப ஈற்றசை;  சீவகசிந்தாமணியுரையில்இவ்வாறே கூறியுள்ளார்.
விதுரன் துரியோதனனை 'புந்தியில் மறுவிலாதோய்' என விளித்தது,
தந்தைமுறையாகின்ற தன்னைப் பழித்துக்கூறியதையும் மாறுபடக் கூறியதையும்
பற்றிய இகழ்ச்சிக் குறிப்பு: இது, எதிர்மறையிலக்ககணையெனவும், பிறகுறிப்பு
எனவும் சொல்லப்படும். உனக்கு இவ்வகைத்தீக்குணம் வசவாசதோஷத்தால்
வந்தது என்பது தோன்ற 'புந்தியின் மறுவிலாதோய்' என விளித்ததுமாம். என்றாய்+யானும்=என்றாயனும்; தனிக்குறிலைச் சாராத யகரம், அல்வழியில் யகரம்வரக் கெட்டது. 

38நீங்களு மவரு நேய நெறிமுறை தவறா தென்றும்
வாங்குநீ ருததி யாடை மண்ணின் மேல் வாழ்க லுற்றால்
பாங்கலா வரச ரெல்லாம் பணிந்துநும் வாயி னிற்பர்
ஒங்கிய புகழும் வாழ்வு மொருப்பட வளரு மன்றோ.

     (இ -ள்.) நீங்களும்-, அவரும் - அப்பாண்டவர்களும், என்றும் நேயம்
நெறி முறை தவறாது - எப்பொழுதும் அன்பிற்கு உரிய வழியின் முறைமையில்
தவறாமல் [மிக்க அன்புகொண்டு], வாங்கு நீர் விகுதி ஆடை மண்ணின்மேல்
வாழ்தல் உற்றால் - வளைவான சூழ்ந்துள்ள நீர் நிறைந்த சமுத்திரத்தை
ஆடையாகக்கொண்டுள்ள இந்நிலவுலகத்தில் (ஒருமித்து) வாழ்ந்தால்,- பாங்கு
அவர் அரசர் எல்லாம் - (தம்மோடு) இணக்கம்கொண்டிராத [நும்மிடத்துப்
பகைமைகொண்டுள்ள] அரசர்களெல்லாரும், பணிந்து - வணங்கி, நும் வாயில்
நிற்பர் - உங்களுடைய அருளைப் பெறுதற்காகத்) தலைவாசலிலே
காத்துக்கொண்டிருப்பார்கள்; (உங்கட்கு), - ஓங்கிய - மிகவும் அதிகமான,
புகழும் - கீர்த்தியும், வாழ்வும் - செல்வவாழ்க்கையும், ஒருப்பட - ஒருசேர,
வளரும் - விருத்தியடையும்; (எ - று.) அன்றே - ஈற்றசை; தேற்றமுமாம். 

     இச்செய்யுள், ஒற்றுமையுடன் வாழ்தலா லுண்டாகும் நன்மையை
எடுத்துக்காட்டியதாம்.  'எத்தால் வாழலாம், ஒத்தால்