பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 207

40.

ஆதலா லுறுதி சொன்னே னாமுறை தெரிந்துகோடி
ஏதிலார் போல யானு மினியுனக் கியாதுஞ் சொல்லேன்
தீதலா துணரா வஞ்சச் சிந்தையார் பரிந்து கூறுங்
கோதலா துனக்கிங் கேலா தெனச்சில கூறி னானே.

     (இ - ள்.) ஆதலால் - ஒற்றுமையால் நன்மையும் ஒற்றுமையில்லாமையால்
தீமையும் உண்டாவதனால், (உனக்கு), உறுதி - நன்மையைத்தரத்தக்க செயலை,
சொன்னேன்-; ஆம் முறை தெரிந்து கோடி - தகுதியான நல்ல வழியைத்
தெரிந்துகொள்வாயாக;  இனி - இனிமேல், யானும் - , ஏதிலார் போல -
யாதொரு தொடர்புமில்லாதவர்போலவே, உனக்கு-, யாதும் - ஒன்றையும்,
சொல்லேன்-;உனக்கு-, இங்கு-இப்பொழுது, தீது அலாது-, உணரா -
(நன்மையைச் சிறிதும்) அறியாத, வஞ்சம் சிந்தையார் - வஞ்சனையுள்ள
மனத்தையுடையராகிய தீயோர், பரிந்து கூறும் - (உன்னிடத்து) அன்பு கொண்டு
கூறுகிற, கோது அலாது - பயனில்லாத சொல் (உடன்பாடாகுமே) அல்லாமல்,
ஏலாது - (யான் கூறும் நன்மொழி உனக்கு) உடன்பாடாகத் தோன்றாது, என -
என்று, சில - சிலவார்த்தைகளை, கூறினான் - (விதுரன்) சொன்னான்; 

     நன்மை தீமைகளை யாராய்ந்து கூறிய எனதுநன்மொழிகளைக் கேட்டுப்
பகுத்தறிவுடன் நல்வழியில் நடந்தால் உனக்கு நன்மையுண்டாகும்;
இவ்வுறுதிமொழியைக்கேளாது அவமதித்து நடந்தாயானால், பயனில்லாத
அற்பரதுசொல் உன்மனத்திற்கு ஏற்குமேயன்றிப் பயனுள்ளசொல் ஏலாதென்பது
பெறப்படும்.  ஆகவே உறவுமுறையில்லாத நொதுமலரைப்போல உபேக்ஷை
கொண்டிருப்பேனே யன்றி, இனி ஒன்றுங் கூறேன் என்று தனது மனக்கருத்தை
விதுரன் வெளியிட்டன னென்க. இனி, ஏதிலார்போல என்பதற்கு -
கெடுமதிகூறும் பகைவரைப்போல என்று பொருளுரைத்து, உனக்குத் தீயோர்
கூறுங் கெடுமொழி நன்மொழியாயும் யான்கூறும் உறுதிமொழி தீமொழியாயும்
இருப்பதனால், யானும் நீ மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதற்கு உரிய
கெடுமதியையுரைப்பே னானாற் பகைவரோடொத்தவ னாவேனாதலால் அது
கூறேனென்று விதுரன் சொல்லின னெனினும் அமையும். 'மன்னவர் செவியழன்
மடுத்ததாமென, நன்னெறி தருவதோர் நடுவுநீதியைச் சொன்னவரமைச்சர்கள்
துணைவர் மேலையோர், ஒன்னலர் விழைந்தவாறுரைக்கின்றார்களே' என்ற
கந்தபுராணம், இப்பொருளில் மேற்கோளாகத்தக்கது.  கோது - அசாரம்.   (193)

41.-துரியோதனன் விதுரனை நோக்கிக் கூறிய நிட்டூர
வார்த்தை.

நிறுத்தறம் வளர்ப்போ னெஞ்சி னீதியுங் குரவ ரேவன்
மறுத்தெதி ருரைக்கு மென்பால் வடுவுநீ வரைந்து கண்டாய்
செறுத்தவ ராவி கொள்வா யடியனேன் செய்த தெல்லாம்[தான்.
பொறுத்தரு ளென்னக் கையாற் போற்றினன் முறுவல் செய்

     (இ - ள்.) செறுத்தவர் ஆவிகொள்வாய்-பகைமை கொண்டவர்களின்
உயிரைக் கவரும் வல்லமையுடைய விதுரனே! அறம்