| நிறுத்து வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் -தருமத்தை நிலைநிறுத்தி மேன்மேல் வளரச்செய்பவனான தருமபுத்திரனுடைய மனத்தில் நீதியமைந்திருப்பதையும், குரவர் ஏவல் மறுத்து எதிர் உரைக்கும் என்பால் வடுவும் - பெரியோர்களுடைய கட்டளைப்பேச்சை மறுத்து எதிர்மொழி சொல்லுகின்ற என்னிடத்துக் குற்றம் நிறைந்திருப்பதையும், நீ-, வரைந்து கண்டாய் - வரையறுத்து அறிந்தாய்; அடியனேன் செய்ததுஎல்லாம் - (உனது) அடியனாகிய நான் செய்த பிழைகளெல்லாவற்றையும், பொறுத்தருள் - பொறுத்தருள்வாயாக, என்ன - என்றுசொல்லி, கையால் போற்றினன் - கை கூப்பி வணங்கி, முறுவல் செய்தான் - (பரிகாசக்குறிப்புத்தோன்றச்) சிரித்தான், (துரியோதனன்); (எ - று.) இவ்வாறு துரியோதனன் விதுரனை மேம்படுத்திச் சொல்லி வணங்கியது, பழித்தற்பொருளை விளக்கும். ஆகவே, இச்செய்யுள் - வஞ்சப் புகழ்ச்சியணியின் பாற் படும். முறுவல் - சிரிப்பு; 'எள்ளலிளமை பேதைமை மடனென், றுள்ளப்பட்ட நகை நான்கென்ப' என்று தொல்காப்பியத்திற் கூறிய நகைவகை நான்கனுள் இது, எள்ளலாம். (எள்ளல் - இகழ்ச்சி.) "ஓலை ஐவருக்கு எழுதி விட்டால் மெய்யுற மறுத்துச்சொல்லார்" என்றும், "தீதிலாதுணரா வஞ்சச் சிந்தையார் பரிந்துகூறுங், கோதலா துனக்கிங்கு ஏலாது" என்றும் விதுரன் கூறியதனால், 'நிறுத்தறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும்... என்பால் வடுவும் நீ வரைந்து கண்டாய்' என்றான். கொள்வாய் என்பதில், வடுவும் நீ வரைந்து கண்டாய்' என்றான். கொள்வாய் என்பதில், வகரவிடைநிலை - காலங்காட்டாது, தன்மையை விளக்கும். செய்தது எல்லாம் - ஒருமைப் பன்மை மயக்கம். நிறுத்து - சீர்தூக்கி; வரையறுத்து என்றலுமாம். வடு - மாறாத பெருங்குற்றத்திற்கு இலக்கணை. (194) 42.-விதுரன் விலகிப்போதல். செழுந்திரு விரும்பு மார்பன் செப்பிய கொடுமைகேட்டு விழுந்திரண் மாலைத் திண்டோள் விதுரனும் வெகுண்டு முன்னித் தொழுந்தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற் கிசைவு றாமல் எழுந்துதன் கோயில் புக்கா னிகலரி யேறு போல்வான். |
(இ - ள்.) இகல் அரி ஏறு போல்வான் -வலிமையுள்ள ஆண்சிங்கத்தையொத்தவனாகிய, திரள் மாலை விழும் திண் தோள் விதுரனும்- திரண்ட மலர்மாலைகள் தொங்கப்பெற்ற வலியதோள்களையுடைய விதுரனும்,- செழுந் திரு விரும்பும் மார்பன் - சிறந்த வீரலட்சுமி விரும்பிவசித்தற்கு இடமான மார்பையுடைய துரியோதனன், செப்பிய - சொன்ன, கொடுமை - கொடுமையான வார்த்தைகளை, கேட்டு-, வெகுண்டு - கோபங்கொண்டு, முன்னி-சிறிது ஆலோசித்து, தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு - (பலரால்) வணங்கப்படுகின்ற மேம்பாட்டையுடையவனும் கிரீடத்தைத் தரித்தவனுமான துரியோதன ராஜனது ஆலோசனைக்கு, இசைவு உறாமல் - உடன்படாமலே, எழுந்து - எழுந்திருந்து, தன் கோயில் புக்கான் - தனது சிறந்த கிருகத்துக்குச்சென்று சேர்ந்தான். (எ - று.) |