பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 211

முதலிய சில எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள் வேறுபட்டு வந்தது -திரிபு
என்னுஞ் சொல்லணி.  சங்கையில், சிற்ப நுண்ணூல் என்ற இரண்டும் -
தபதியர்க்கு அடைமொழி.  அயில்=ஐயில் - அழகு என்று பொருள்;
திரிபுநோக்கி அகரத்திற்கு ஐகாரம்போலியாய் வந்தது.  இனி, ஐ - அழகு: இல்
- சாரியை என்பாருமுளர்.  அம் கையில் என்று பிரித்து அழகிய கைகளினால்
என்றுகொண்டால், திரிபு என்னும் அணிக்கு இடமில்லையாம்.  ஸங்கா,
ஸல்பம், ஸ்தபதி, சித்ரம் ஸ்தூணா, அருணரத்நம், கங்கா, முக்தா -
வடசொற்கள்.  முக்தா - (இப்பியினின்று) விடுபட்டதெனப் பொருள்படுங்
காரணக்குறி.                                              (198)

46.-அந்த மண்டபத்தின் சிறப்பு.

ஓவியஞ் சிறக்கத் தீட்டி யொண்கொடி நிரைத்துச் செஞ்சொற்
காவிய மக்கட் கெல்லாங் கருத்துறு கவினிற் றாகி
வாவிய புரவித் திண்டேர் மன்னவ னினைவுக் கேற்ப
ஏவிய வினைஞர் தம்மா லியல்புறச் சமைந்த தன்றே.

     (இ - ள்.) (அம்மண்டபமானது), ஓவியம்சிறக்க தீட்டி - சித்திரங்களைச்
(சுவர்களிற்) சிறப்பாக எழுதப்பெற்று, ஒள் கொடி நிரைத்து - விளங்குகிற
கொடிச்சீலைகளை (மேலே) வரிசையாகக் கட்டப்பெற்று, செம் சொல் காவியம்
மக்கட்கு எல்லாம் கருத்து உறு கவினிற்று ஆகி - இனிய சொற்களினாற்
காவியஞ்செய்யவல்ல புலவர்கட்கெல்லாம் (வருணிக்குமாறு) மனஞ்சென்று
பதியும்படியான அழகையுடையதாய்,- வாவிய புரவி திண் தேர் மன்னவன்
நினைவுக்கு ஏற்ப - தாவிச்செல்லுங் குதிரைகள் பூட்டிய வலிய
தேர்களையுடைய துரியோதனராஜனது எண்ணத்திற்குத் தகுதியாக, ஏவிய
வினைஞர்தம்மால் - கட்டளையிடப்பட்ட சிற்பவேலைக்காரர்களால், இயல்புஉற
சமைந்தது - தகுதியாகக் கட்டப்பெற்று நிறைவேறிற்று; (எ - று.)-அன்றே -
ஈற்றசை.

      காவியமியற்றும் புலவர்கள் இம்மண்டபத்தின் சிறப்பைப் பார்த்த
மாத்ரித்திலே இதனிடத்துக் கருத்துஊன்றி மிகவும் விவரித்து வருணித்துப்
பாடுமாறு பலவகைச் சிறப்புக்களையும் பெற்றுள்ளதென்பது இரண்டாமடியின்
விவரம்.  செஞ்சொல் - அரியபொருளை எளிதில் உள்ளபடி நன்குகாட்டவல்ல
செவ்வியையுடைய சொல்; தொனிப் பொருளையுடைய சொல்லுமாம்.  காவ்யம்-
கவியினாற் செய்யப்படும் நூல்.  கவினிற்று - 'கவின்' என்னும்
பகுதியினடியாப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புவினையாலணையும் பெயர்;  று -
விகுதி, இன் - சாரியை.                                        (199) 

47.-துரியோதனன், மண்டபத்தின் சிறப்பைப் பற்றித்
திருதராட்டிரனிடங் கூறுதல்.

மன்னவைக் கான பைம்பொன் மண்டபஞ் சமைந்த தென்று
தன்னவைக் குரியோர் சொல்லச் சகுனியுந் தானு நோக்கிச்