பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 213

     துரியோதனன் தனது துராலேராசனைக்குத் துணைபுரியுமாறு
வேண்டுகின்றானாதலால், தனது தந்தையை 'அரும்பெறலைய' என்று புனைந்து
விளித்தான்.  'உன்மைந்தர்' - நீ கூறிய கட்டளைப்படியே தவறாது நடக்கும்
மைந்தரென்ற குறிப்பு:  ஆனது பற்றியே, தான் தூது ஏவாமல் 'நீ தூது ஏவு'
என்றான்.  வெல்லவேண்டுமென்று மனம்பதறுதலால் 'விரைவின் தூதுஏவு'
என்று தூண்டினான்.  'அடியனேன்கருத்து' என்றது - மண்டபவியாஜமாகப்
பாண்டவர்களை வருவித்துச் சகுனியைக்கொண்டு சூதாடுவித்து அவர்களது
பொருள்களையெல்லாம் கவரவேண்டுமென்பது.  'கரும் புயல் தவழுஞ்சென்னி'
- தொடர்புயர்வுநவிற்சியணி; இது,மண்டபத்தினது மிக்க உயர்வை
விளக்கும்.  கரும்புயல் - நீர்கொண்ட காளமேகம்.  தூது -
உயர்திணைப்பொருள் தரும் அஃறிணைச்சொல்.  மைந்தரை =
மைந்தர்க்கு: உருபுமயக்கம்.                               (201)
 

49.-அதற்குத் திருதராட்டிரன் மகிழ்ந்து கூறுதல்.

மகன்மொழி நயந்து கேட்டு வாழ்வுறு தந்தை தானும்
மிகநயந் துருகி நல்ல விரகினால் வெல்ல லுற்றீர்
அகநெடும் போர்செய் தாலு மைவ ரை யடர்க்கொ ணாது
சகுனியை யன்றி வேறார் தரவல்லார் தரணி யென்றான்.

     (இ - ள்.) வாழ்வு உறு தந்தை தானும் -செல்வ வாழ்க்கை பொருந்திய
தந்தையாகிய திருதராட்டிரனும், மகன்மொழி நயந்து கேட்டு - (தனது)
குமாரனாகிய துரியோதனனது வார்த்தைகளை விரும்பிக்கேட்டு, மிகநயந்து
உருகி - மிகவும் மகிழ்ந்து மனமுருகி, (அத்துரியோதனனை நோக்கி), 'நல்ல
விரகினால் வெல்லல் உற்றீர் - தகுதியான உபாயத்தினால் (பாண்டவர்களைச்)
சயிக்கத்தொடங்கினீர்கள்;  அகம் நெடும் போர் செய்தாலும் - துன்பத்திற்கு
இடமான பெரியபோரைச் செய்தாலும், ஐவரை அடர்க்க ஒணாது -(அவர்கள்
மிக்க வலிமையை யுடையவர்களாதலால்) அப்பாண்டவர்களைவரையும் வென்று
அடக்க (உங்களால்) முடியாது;  (இவ்வாறான பின்பு), தரணி - பூமியை,
சகுனியை அன்றி வேறு ஆர் தர வல்லார் - சகுனியையேயல்லாமல் வேறு
யாவர்தாம் (உங்களுக்குத்) தரவல்லவர்?' என்றான் - என்று கூறினான்;
(எ -று.) 

     என்றது-பாண்டவர்கள் வலியராதலால்,சகுனியைக்கொண்டு சூது
வழியாக வென்றுவிடுதலே தகுதி யென்றவாறு.  கம் - சுகம்; அதற்கு -
மாறானது அகம் - துன்பம்; வடசொல்: 'அகனெடும் போர்' என்ற பாடத்திற்கு,
அகன்ற நீண்ட போரென்று பொருளாகும்.  அர்க்கொணாது - அகரவீறு
தொகுத்தல்.  ஒணாது - ஒன்றாது என்பதன் மரூஉ.             (202) 

50.-திருதராட்டிரன், தூது செல்லுமாறு விதுரனுக்குக்
கட்டளையிடுதல்.

விழியிலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீபோய்
மொழியிலா ருலகின் மற்றுன் மொழியினை மறுக்க வல்லார்