பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 217

கூறப்பட்டது; கீழ் இந்திரப்பிரத்தச்சருக்கத்தில் "அருளுடையறத்தின்வாழ்வா
மந்நகர்" என்றது, இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  வான்பதி-விண்ணுலகத்திலுள்ள
நகரமுமாம்.  வெண்ணிறமான கொடி-நீதிதவறாத களங்கமற்ற அரசாட்சிக்கும்
கீர்த்திக்கும் அறிகுறி. 

     பொன்னுலகு தேவராசனான இந்திரனுடையது.  ஆம்-அசை.  என்ன -
உவமவுருபு.  இதில் ஓர் உபமேயத்துக்குப் பல உபமானங்கள் காட்டியது,
பலபொருளுவமையணி.  புரியும் ஒண் கதிர் - மதிள் கோபுரம் மாட மாளிகை
முதலியவற்றி லமைந்த பொன்மணிகளி னுடையவை.  புரிதல் - செய்தல்.
புரியும் - விரும்பப்படுகிற எனினுமாம். 

     அரியபைம்பொன் - மாற்றும் விலையும்உயர்ந்த பொன்.  அளகாபுரி-
தநாதிபதியான குபேரனுடையது;  கைலாசகிரியிலுள்ளது. நவநிதிகளையுமுடைய
தாதலின், 'நிறைந்தசீரளகைமாநகர்' எனப்பட்டது.  சீர் - அழகு என்றும், புகழ்
என்றும் பொருள்கொள்ளினுமாம்.  'விழிகளித்திடக்கண்டான்' - மனத்தின்
தொழிலைக் கண்ணின்மேலேற்றிக் கூறிய உபசாரவழக்கு.  'பைம்பொனின்
மணிகளின்' என்ற பாடத்துக்கு - பசும்பொன்னினாலும் இரத்தினங்களினாலும்
என்று பொருள் காண்க.  இதுமுதல் நான்கு கவிகளில் இந்திரப்பிரத்த
நகரவருணனை கூறுகின்றார். 

     இதுமுதல் 37 கவிகள் - இச்சருக்கத்தின்முதற்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.                     (206) 

54.-மூன்றுகவிகள் - இந்திரப்பிரத்த நகர்வளங் கூறும்.

ஊடெ லாநறும் பொய்கைநீள் வாவியி னுடம்பெலா மலர்ப் பூவின்,
தோடெ லாமெழு சுரும்பின மருகரச் சொல்லெலாஞ் செழுங்கீதம்,
பாடெ லாமிளஞ் சோலைமென் பொங்கரின் பணையெலாங்
                                            குயிலோசை,
நாடெ லாநெடும் புனல்வயல் கழனியினடுவெலாம் விளைசெந்நெல்.
 

     (இ - ள்.) ஊடு எலாம் - (அந்நகரத்தின்) உள்ளிடங்களிலெல்லாம், நறும்
பொய்கை - நறுமணமுள்ள [நன்னீரையுடைய] குளங்களும்.-நீள் வாவியின்
உடம்பு எலாம் - பெரிய அக்குளங்களின் இடம் முழுவதிலும், மலர் (தாமரை
அல்லி ஆம்பல் குவளை நெய்தல் முதலிய) நீர்ப்பூக்களும்,-பூவின் தோடு
எலாம் - அம்மலர்களின் இதழ்களிலெல்லாம், எழு சுரும்பு இனம் -
மேலெழுந்து மொய்க்கின்ற வண்டுகளின் கூட்டங்களும்,-மதுகரம் சொல்
எலாம்-அவ்வண்டுகளின் வாயொலிகளிலெல்லாம், செழுங்கீதம் - சிறப்பான
இசைப்பாட்டுக்களும்,-பாடு எலாம் - (அக்குளங்களின்) பக்கங்களிலெல்லாம்,
இளஞ் சோலை - இளமரச்சோலைகளும்,-மெல் பொங்கரின் பணைஎலாம் -
மென்மையான அச்சோலைகளிலுள்ள மரக்கிளைகளி லெல்லாம், குயில் ஓசை -
குயில்களின்குரலும்,-நாடு எலாம் - அவ்விந்திரப்பிரத்த நாடு