முழுவதிலும், நெடும் புனல் வயல் - மிகுதியான நீ்ர்பாயப்பெற்ற கழனிகளும்,- கழனியின் நடு எலாம் - அக்கழனிகளின் நடுவிடம் முழுவதிலும், விளை செந்நெல் - விளைகின்ற செந்நெற் பயிர்களும், (உள்ளன:) (எ - று,)- வினைமுற்று வருவித்து முடிக்கப்பட்டது. இனி, 'பொய்கை' முதலியவற்றை இரண்டாம் வேற்றுமைத் தொகையாகக்கொண்டு, பொய்கை முதலியவற்றை விதுரன் விழிகளித்திடக் கண்டான் என முன்செய்யுளிலிருந்து வினைகூட்டி முடிப்பினுமாம்; அடுத்த இரண்டுசெய்யுள்களிலும் இங்ஙனங் காண்க: அங்ஙனங் கொள்ளுமிடத்து 'கீதம்' 'ஓசை' இவற்றிற்கு ஏற்ப, அவற்றைக் கேட்டானென்ற கருத்து அமைக்கப்படும். இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும் மூன்றாமடியிலும் நான்காமடியிலும் தனித்தனி பொருள்கட்குத் தொடர்ச்சியமையக் கூறியது, ஒற்றைமணிமாலையணியென்னும் ஏகாவளியலங்காரமாம்; அடுத்தசெய்யுளிலும் இதுகாண்க, பின்பின்னாகவருவனவற்றிற்கு முன்முன்னாக வந்தவற்றை விசேஷணங்களாகவேனும் விசேஷ்யங்களாகவேனுஞ் சொல்லுதல், இதன் இலக்கணம். தீ்ாத்தத்தின் இனிமையையும் அதிலுள்ள நீ்ாப்பூக்களின் சுகந்தத்தையுங்கருதி, 'நறும்பொய்கை' எனப்பட்டது. இனி, நறுமை - நன்மையுமாம். 'பொய்கை' என்ற சொல்லுக்கு-'மானிடராக்காத நீ்ர்நிலை' என்று பொருளுரைத்தனர் சீவகசிந்தாமணியுரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர்; அஃது இவ்விடத்துக்கும் பொருந்தும்; இந்த இந்திரப்பிரத்தநகரம் மனிதசிற்பிகளாற் கைத்தொழிலாச் செய்யப்ட்டதன்றித் தேவசிற்பியான விசுவகர்மாவினால் மாநஸநிர்மாணமாக நினைத்தமாத்திரத்தில் நிருமிக்கப்பட்டதாதலால்: அதனை, கீழ் இந்திரப்பிரத்தச்சருக்கத்து "திரங்குடி புகுந்த கல்விச் சிற்பவித்தகன் தன் நெஞ்சாற், கரங்குடி புகாமற் செய்த கடிநகர்" என்றதனால் அறிக. செந்நெல் - நீரில்விளைவதொரு சிறந்த தானியம். அதன் விளைவுகூறவே, கழனிகளில் நிறைந்த நீர்வளச்சிறப்புக்கூறியவாறு. 'வாவியின் உடம்பு' என்றது, அதன் இடத்தை; உடம்பு - உருவம். சுரும்பு இனம் - வண்டுவகைகளென்றலுமாம்; சுரும்பு, வண்டு, தேன், மிஞிறு என்ற சாதிபேதங்களெல்லாம் இதில் அடங்கும். பொன்வண்டு, பொறிவண்டு, கருவண்டு, தேன்வண்டு, என்றும் கூறுவர். மதுகரம் - தேனை ஈட்டுவது என்ற காரணப் பொருள்படும். 'சொல்' என்றது- இங்கு, குரலென்றமாத்திரமாய் நின்றது. செழுங்கீதம் - ஸ்வரபுஷ்டியுள்ள இனிய இசை, மரங்களின இளமையை அவற்றின் தொகுதியாகிய சோலையின்மேலேற்றி, 'இளஞ்சோலை' என்றார். மென்மை - இங்கு, கண்ணுக்கு இனிமை. பொங்கர் என்ற சொல் - (உயர்ந்து) விளங்குவது என்று காரணப்பொருள்பெறும்; அர் - பெயர்விகுதி. விளைதல் - செழித்துவளர்தல், தானியம் முதிர்தல். (207) | 55, | அருகெ லாமணி மண்டபமவிரொளி யரங்கெலாஞ் சிலம்போசை, குருகெ லாம்வளர் பழனமப் புள்ளெலாங் கூடலின் புற |
|