பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 219

                                          வூடன்,
முருகெ லாங்கமழ் துறையெலாந்தரளம்வெண் முத்தெலா
                                    நிலாவெள்ளம்,
பருக லாம்புன னதியெலா நீரெலாம் பங்கயப்
                                    பசுங்கானம்.

     (இ -ள்.) அருகு எலாம் - (அந்நகரத்தில் ஒன்றுக்கு ஒன்று)
சமீபமாகவுள்ள இடங்கள்தோறும், அணிமண்டபம் - அழகிய மண்டபங்களும்,-
அவிர் ஒளி அரங்கு எலாம் - விளங்குகின்ற ஒளியையுடைய
(அம்மண்டபங்களிலுள்ள) கூத்தாடுமிடங்களிலெல்லாம், சிலம்பு ஓசை -
(நர்த்தனஞ் செய்கின்ற மகளிரது) காற்சிலம்புகளின் ஓசையும்,-பழனம் எலாம் -
கழனிகளி லெல்லாம், வளர் குருகு - செழுமையாய் வளர்கின்ற
நீர்வாழ்பறவைகளும்,-அப்புள் எலாம் - அந்தப்பறவைகளி னிடங்களிலெல்லாம்,
கூடல் இன்புஉற ஊடல் - (ஆணும்பெண்ணும் ஒன்றோடொன்று) சேர்தலும்
அப்புண்ாச்சியின்பம் மிகுமாறு அவை தம்முட் சிறு கோபங் கொள்ளுதலும்,-
முருகு எலாம் கமழ் துறை எலாம் - பலவகை நறுமணங்களும் மணக்கப்பெற்ற
நீர்த்துறைகளிலெல்லாம், தரளம் - முத்துக்களும்,-வெள்முத்து எலாம்-
வெண்ணிறமான அம்முத்துக்களி லெல்லாம், நிலா வெள்ளம் - சந்திரகாந்தி
போன்ற குளிர்ச்சியான வெள்ளொளியின் தொகுதியும்,-நதி எலாம் -
(அந்நகரத்தைச் சார்ந்து பெருகுகிற) யாறுமுழுவதிலும், பருகல் ஆம் புனல் -
குடிப்பதற்கு ஏற்ற நன்னீரும்,-நீ்ர் எலாம் - அந்நீரிலெங்கும், பங்கயம்
பசுங்கானம்-பசுமை நிறமான தாமரைக் கொடிகளின் தொகுதியும், (உள்ளன);
(எ- று.)

     முடிபும் அணியும் - மேற்கூறியன.  மணிமண்டபம் என்று எடுத்து,
இரத்தினங்கள் பதித்துச்செய்யப்பட்ட மண்டப மெனினுமாம்.  இங்கு, முத்து -
சங்கினின்று தோன்றுபவை.  பருகலாம் புனல் - "உணற்கினியவின்னீர்."
'நதியெலாம்' என்றவிடத்து 'எலாம்' என்றது - பொருட்பன்மை குறியாமல்,
ஒருபொருளின் பல இடம் குறித்தது: பங்கஜம் - சேற்றில் முளைப்பது எனத்
தாமரைக்குக் காரணவிடுகுறி: பங்கம் - சேறு; ஜம்-தோன்றுவது.
'பருகெலாம்புனல்' என்ற பாடத்துக்கு, எலாம் பருகு புனல் - அனைத்து
உயிர்களும் உண்ணுதற்கு ஏற்ற நீர் நிரம்பியுள்ளன என்று பொருளாம்.
'குருகெலாம் வளர்பழனம்' என்றவிடத்து, "ஏற்றபொருளுக்கு இயையும்
மொழிகளை மாற்றி ஓரடியுள் வழங்கியது" மொழிமாற்றுப்பொருள்கோள்,
குருகு - அன்னப் பறவையுமாம்; "நீரொழியப்பா லுண்குருகிற் றெரிந்து" என்ற
நாலடியாரிற்போல.  பழனம் - மருதநிலம், வயல்.  ஊடலாவது - ஆண்பாலும்
பெண்பாலும் இணங்கி நின்ற நிலையில் இவ்வின்பத்தை மிகுவித்தற்பொருட்டு
ஒருவர் மீது ஒருவர் சினத்தல்: இது, பெண்பாலாரிடத்து மிகும்.  "ஊடுதல்
காமத்திற்கின்பமதற்கின்பங், கூடி முயங்கப் பெறின்" என்பவாதலால், 'கூடலின்
புறவூடல'் எனப்பட்டது.  கானம் - காநநம் என்ற வடசொல்லின் விகாரம்;
காடு: இங்கு, தொகுதியென்ற மாத்திரமாய் நின்றது.                 (208)

56,ஆன கம்பல முழங்கவந்தெதிர்பணிந் தாதுலர்க்
                                 கமுதன்ன,
போன கம்பரிந் திடுநெடுஞ் சாலையே புகுந்தமா
                                  மறுகெல்