பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 221

சிந்தை யன்புடன் றொழத்தொழமைந்தரைச் செங்கையாற் றழீஇக்
கொண்டே, அந்த ணம்புலி கண்டபைங் கடலென வவனு மெய்
                                   குளிர்ந்திட்டான்.

     (இ -ள்.) சிலை விதுரன் வந்தனன் என்று - 'வில்வித்தையில் மிக
வல்லவனான விதுரன் (இந்நகரத்துக்கு) வந்தான்' என்று ஓடி முன் வந்தவர்
உரையாமுன்-ஓடி விரைந்துவந்த தூதர்கள் செய்தி கூறுதற்கு முன்னே [செய்தி
கூறியவுடனே விரைவாக என்றபடி], தருமனும் இளைஞரும் - தருமபுத்திரனும்
அவனது தம்பியரான வீமன் முதலியோர்களும், தந்தையின் தனி வரவு
அறிந்து-தங்கள் சிறிய தந்தையான அவ்விதுரனது ஒப்பற்றவருகையை
யுணர்ந்து, எதிர்கொண்டார் - எதிர்சென்று வரவேற்று, சிந்தை அன்புடன்
தொழ தொழ - மனத்தில் நிறைந்த அன்புடனே (அவனை) அனைவரும்
நமஸ்கரிக்க,-அவனும் - அவ்விதுரனும், மைந்தரை -(தனது)
தமையன்மக்களான அந்தப் பஞ்சபாண்டவர்களை, செம் கையால்
தழீஇக்கொண்டு - (தனது) சிவந்த கைகளினால் அணைத்துக்கொண்டு, அம்
தண் அம்புலி கண்ட பைங்கடல் என மெய் குளிர்ந்திட்டான் - அழகிய
குளிர்ந்த சந்திரனைக் கண்ட பசுமையான கடல் (மகிழ்ந்து பொங்குமாறு போல)
மகிழ்ந்து உடம்பு பூரித்தான்;  (எ - று.)

     'ஓடி முன்வந்தவர் உரையாமுன்னே வரவறிந்து எதிர்கொண்டார்' என்று
காரணத்திற்கு முன்னே காரியம் நிகழ்ந்ததாகக் கூறியது,
மிகையுயர்வுநவிற்சியணி யெனப்படும். (காரியத்தை முன்னும் காரணத்தைப்
பின்னும் நிகழ்வனவாகச் சொல்லுதல், இவ்வணியின் இலக்கணம்.)  இது
காரியவிரைவைச் சொல்வதாகும்.  பாண்டவர்க்கு விதுரனிடத்து உள்ள
பித்ருபக்தியும் விதுரனுக்கு அவர்களிடத்து உள்ள புத்ரவாத்ஸல்யமும் விளங்க,
சிறிய தந்தையென்றும் தமையன்மைந்த ரென்றுங் கூறாது 'தந்தை', 'மைந்தர்'
என்றே கூறினார்.  உண்மையாக அகத்தில் நிகழாதிருக்கையிற் புறத்தே
காட்டப்படும் பொய்அன்பன்றி மனப்பூர்வமாக நிகழ்ந்த அன்பு என்பார்
'சிந்தையன்பு' என்றார்.  'தொழத்தொழ' என்ற அடுக்கு, தொழுபவரது
பன்மைபற்றி வந்தது.  'தழுவி' என்ற சொல், 'தழீஇ' என விகாரப்பட்டு
அளபெடுத்தது; சொல்லிசையளபெடை.  சந்திரனைக் கண்டவளவிலே கடல்
பொங்கும் இயல்பு பிரசித்தம்;  "தண்ணென் கதிர்வரவாற் பொங்குங்கடல்."
திருப்பாற்கடல்கடைந்தகாலத்து அதனினின்று சந்திரன் தோன்றியதனாலும்,
நாள்தோறும் சந்திரோதயமாகின்றமை கடலினின்று தோன்றுவதுபோலக்
காணப்படுதலாலும், கடலுக்கும் சந்திரனுக்கும் பிதாபுத்ர சம்பந்தம் கூறப்படும்:
உபமானத்தில் உள்ள அத்தன்மை, இங்கு உபமேயத்துக்கு ஏற்குமாறு காண்க;
மைந்தரைக்கண்டு தந்தை மகிழ்தல், உபமேயம்.  ஆகவே,
'மெய்குளிர்ந்திட்டான்' என்பதற்கு - உடம்பின் அந்தக்கரணமாய்ச் சிறந்த
உறுப்பாகிற மனம் களித்தான் என்ற அளவோடு நில்லாது, அம் மகிழ்ச்சி
மிகுதியால் உடல் பூரித்தான் என்கின்ற வரை கருத்து நிகழும்.  பசுமை கருமை
நீலம் என்கிற நிறங்களுக்கு ஒன்றோ