பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 224

 புக்கனம் ஆக - சென்றுசேர்ந்தோமாக, - வலம்புரி மலர் தாரான்-
நந்தியாவர்த்த மலர்மாலையைத் தரித்தவனான துரியோதனன்,-'நூபுரம் திகழ்
இனை அடி-சிலம்பென்னும் அணிவிளங்குதற்குக் காரணமான இரண்டு
கால்களையுடைய, அரம்பையர்-தேவமாதர்களாலும், நோக்கு அரு-பார்த்து
அநுபவித்து எல்லை காணமுடியாத, கவின் - பேரழகை, கொண்ட -
தன்னிடத்து உடைய, மா புரந்தரன்-சிறந்த இந்திரன், இவன்-,' என-என்று
(காண்பவர்) வருணித்துக் கூறும்படி, இருந்தனன் - (சபையில்) வீற்றிருந்தான்;
 

     இப்பொழுது உள்ள இந்திரன் தேவமாதர்களால் நோக்கி
எல்லைகாணப்படும் அழகுடையான்; அங்ஙனமன்றி, அவர்களாற்
பார்த்துமுடியாத பேரழகுடையானொரு மகேந்திர னிவனென்று ஒப்புமை
விசேடித்துச் சொல்லும்படி மிக்க சிறப்பாக அரசுவீற்றிருந்தனன்
துரியோதனனென அவனது அழகையும் அரசு வீற்றிருத்தற் சிறப்பையும்
வருணித்தவாறு.  இனி, அரம்பையர் நோக்கு அருங் கவின் கொண்ட -
அரம்பையர்களாற் காதலித்துப் பார்க்கப்படுகிற அருமையான [பிறர்க்கில்லாத]
அழகைக் கொண்ட, சிறந்த இந்திரனென்றலும் அமையும்.  கழித்து=கழிய
எனக்கொண்டு, எச்சத்திரிபுமாம்.  கழித்தியாவரும்-குற்றியலிகரம்.  மாடம் -
மண்டபமுமாம்.  யாவரும் புக்கனமாக - தன்மையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி; [நன்-பொது-29.] 'நூபுரம் திகழ் இணையடி' என்பதற்கு -
நூபுரத்தினால் விளங்குகிற பாதமென்று பொருள்கொள்ளுதலினும், நூபுரம்
விளங்குதற்குக் காரணமான பாதமென்று கொள்வது, அக்காலின்
இயற்கையழகை விளக்குவதாய்ச் சிறக்கும்.  'இணையடி' என்ற விடத்து 'இணை
என்பது அடிக்கு வெறும் இயற்கையடைமொழியெனக் கொள்ளுதலினும்,
(தமக்குவேறு ஒப்புமையில்லாமையால்) தம்மில் ஒன்றற்கு ஒன்று நிகரான
பாதமென்று கொள்வது விசேடமாம்.  அரம்பை - தேவலோகத்து
அப்ஸருஸ்ஸ்ீதிரீகளில் ஒருத்தியின் பெயராதலால், அம்மாதர்கள் 'அரம்பையர்'
எனப்படுவர்; அரம்பை முதலியோர் அல்லது அரம்பை போல்வார் என்று
பொருள் காண்க.                                            (213)

61.தம்பி மாரொடுந் தகையிலாத் துன்மதிச் சகுனிதன்
                                    னொடுமெண்ணிக்,
கும்ப மாமணி நெடுமுடி நிரைத்தவண் கூடமொன்றமைக்கென்ன,
அம்பு ராசிசூழ் மண்டலத் தரசெலா மடங்குபேரவைத்தாக,
உம்ப ராலய நிகரெனச் சமைத்தன ரொட்பநூ லுணர்வுற்றார்.

     (இ - ள்.) (அங்ஙனம் சபையில் வீற்றிருந்த துரியோதனன்)
தம்பிமாரொடும் - (தனது) தம்பிமார்களுடனும், தகை இலா துன்மதி
சகுனிதன்னொடும் - பெருந்தன்மையில்லாத துர்ப்புத்தியையுடைய
சகுனியுடனும், எண்ணி - ஆலோசித்து, கும்பம் மா மணி நெடு முடி நிரைத்த
வள் கூடம் ஒன்று அமைக்க என்ன-'(மேலே) கலசம் வைக்கப்பெற்றவையும்
சிறந்த இரத்தினங்கள் பதித்தவையுமான உயர்ந்த சிகரங்கள் வரிசையாய்
அமைக்கப்பெற்ற அழகிய