பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 228

வேறொன்றையுஞ் சொல்லாதவனாய்,- 'சேத்த நாகம் வெம்கொடியவன் -
(கோபத்தாற் கண்) சிவந்த சர்ப்பத்தின் வடிவமெழுதிய பயங்கரமான துவசத்தை
யுடையவனாகிய துரியோதனன், கொடிய வல் சிந்தையின் நிலை தோன்ற -
(தனது) மிக்க கொடிய மனத்தின் இயல்பு விளங்குமாறு [தனது கடுஞ்சிந்தைக்கு
ஏற்றபடி], கோத்த-தொடர்ச்சியாக ஆலோசித்த, கோவை - ஆலோசனைத்
தொடர், நன்று ஆயினும் - (அவனுக்கு) நல்லதாயிருந்தாலும், குருகுலம்
தனக்கு தகுவதோ - குருகுலத்தின் பெருமைக்குத் தகுமோ?-;(எ - று.)

    வஞ்சனையாக வருவித்துச் சூதாடிப் பொருள் கவருங் கருத்து துஷ்டரது
துராலோசனைக்கு ஏற்றதாயினுங் குடிப்பழியன்றோ வென்றன னென்க.
குருகுலம்-சந்திர வம்சத்திற் பிரசித்தி பெற்ற குருவென்னும் அரசனது மரபு;
'வேறு மற்றொன்றையும்' என்ற விடத்து 'மற்று' என்பதை அசையென்ன
லுமாம்.  மனுநெறி-மநுவென்னும் அரசனியற்றிய தரும சஸ்திரத்திற்கூறிய நீதி.
சேத்த-செம்மையென்ற பண்பினடி விகாரப்பட்டு வினைத்தன்மையடைந்த 'சே'
- பகுதி.  ஓ - எதிர்மறை.  'கொடியவன் கொடியவன் சிந்தை' என்ற விடத்து,
'மடக்கு' என்னுஞ் சொல்லணி காண்க.

    இச்செய்யுளில் 'மனுநெறிவழுவாதோன்' என்ற விசேஷ்யம் -
எப்பொழுதும் தகுதியில்சொற் சொல்லாது தக்கமொழியே பேசத் தக்கவனென்ற
கருத்தையும், 'நாகவெங்கொடியவன்' என்ற அடைகொளி - தான் தனது
கொடியில் விஷப்பாம்பை அறிகுறியாகக் கொண்டமைக்கு ஏற்பத்
தீக்குணந்தீச்செயல்களை யுடையனாய் நல்லோர்க்குப் பொல்லாங்கு
விளைப்பவனென்ற கருத்தையும் உட்கொண்டிருத்தலால்,
கருத்துடையடைகொளியணி. கோபங்கொண்டு கடுஞ்சொற் கூறத்தக்க
சமயத்திலும் அங்ஙனம் ஒன்றுங் கூறினானில்லை யென்பார், 'வார்த்தைவேறு
மற்றொன்றையு முரைத்திலன்' என்றனரென்க.  கொடிய, வல் -
ஒருபொருட்பன்மொழி.                                          (217)

65.-மூன்றுகவிகள் - தருமன்வார்த்தை: சூதாடுதலின் குற்றம்,

அடியு மாண்மையும் வலிமையுஞ் சேனையுமழகும்வென் றியுந்
                                             தத்தம்,
குடியு மானமுஞ் செல்வமும் பெருமையும் குலமுமின் பமுந்
                                             தேசும்,
படியு மாமறை யொழுக்கமும் புகழுமுன் பயின்றகல் வியுஞ்சேர,
மடியு மான்மதி யுணர்ந்தவர் சூதின்மேல் வைப்பரோ
                                       மனம் வையார்.

     (இ -ள்.) அடியும்-தலைமையும், ஆண்மையும்-பராக்கிரமமும்,
வலிமையும் - பலமும், சேனையும்-, அழகும்-, வென்றியும் - ஜயமும், தம்தம்
குடியும் - தம்தமது குடிப்பிறப்பின் மேன்மையும், மானமும்-, செல்வமும்-,
பெருமையும்-, குலமும் - வம்சமும், இன்பமும்-, தேசும் - ஒளியும், படியும் -
நற்குணமும், மா மறை ஒழுக்கமும்.  சிறந்த வேதங்களிற்கூறிய விதிமுறைப்படி
யொழுகும்