நிற்றலும், சூதாடுதலில் விளையும் பொல்லாங்குகள் தம்மையேயன்றிப் பிறரையுஞ் சார்தலும், பொய்முதலிய பெரும்பாவங்கட்கு இடமாயிருத்தலும் பற்றி யென்க; அன்றியும், மதுபானம் போர்க்கு எழுவது முதலிய சிலகாலங்களில் நன்மைபயத்தலையும், சூதாடுதல் எக்காலத்திலும் நன்மைபயவாமையையும் நோக்குக. இங்குச் சூதாட்டத்தின் பொல்லாங்கினாற் கட்குடித்தலை இனியதாகக் கூறியது-அகமலர்ச்சியணி; இதனை, வடநூலார் உல்லாஸாலங்காரமென்பர்: ஒன்றன் குணத்தையாவது குற்றத்தையாவது கொண்டு மற்றென் றற்கு அவை உள்ளனவாகச் சொல்லுதல், இதன் இலக்கணம். குழகு-மகளிர் மனத்தைக் கவருங் கட்டழகு: அதனையுடையவர்- குழகர். மடந்தையர் - மடந்தைப்பருவமுடையவர்; அப்பருவத்துக்கு வயதெல்லை-பதின்மூன்றுமுதற் பத்தொன்பது வரையிலும். மிகப் பழகுவார் என இயையும். மிகச் சிந்தை நோய் படுக்குமாறு எனஇயைப்பினுமாம். (219) | 67, | மேத கத்தெரி ஞானநூற்புலவரும் வேத்துநூலறிந்தோரும், பாத கத்திலொன் றென்னவே முன்னமே பலபடப் பழித்திட்டார், தீத கப்படு புன்றொழி லிளைஞரிற் சிந்தனைசிறிதின்றித், தோத கத்துட னென்னையோ சகுனிதன் சூதினுக் கெதிரென்றான், |
(இ-ள்.) மேதக தெரி ஞானம் நூல் புலவரும்-மேன்மையாக [மிகுதியாக] அறிந்த தத்துவநூ லுணர்ச்சியையுடைய வித்துவான்களும், வேந்து நூல் அறிந்தோரும் - அரசநீதியைக் கூறும் சாஸ்திரங்களைக் கற்றுவல்லவர்களும்,- (சூதாடுதலை), பாதகத்தில் ஒன்று என்னவே - பெரும்பாவத் தொழில்களுள் ஒன்றென்றே, முன்னமே பலபட பழித்திட்டார் - முற்காலத்திலேயே பலவகையாக நிந்தித்து விலக்கியுள்ளார்கள்; (அவ்வாறிருக்கவும்), தீது அகப்படு புல் தொழில் இளைஞரின் - குற்றத்திற்கு உள்ளாகிற இழிதொழில்களையுடைய சிறுவர்கள்போல, சிறிது சிந்தனை இன்றி - சிறிதேனும் ஆலோசனையில்லாமல், தோதகத்துடன் - வஞ்சனைக் கருத்தோடு, சகுனி-, தன் சூதினுக்கு என்னையோ எதிர் என்றான்-தான் ஆடுகின்ற சூதாட்டத்துக்கு என்னைத்தானா எதிரில் நின்று ஆடுபவனென்று கொண்டான்; (எ - று,) தான் வஞ்சனைக்கருத்துடன் ஆடுகின்ற சூதாட்டத்துக்குச் சிறிதும் வஞ்சகக்குணமில்லாத என்னை எதிராகக்கொள்வது சகுனிக்குக் கொஞ்சமேனுந் தக்கதன் றென்பது, தருமபுத்திரன் கருத்து. சூதாடல் பெரும்பாவ மென்பது வைதிக நூலார்க்கும் லௌகிக நூலார்க்கும் ஒத்தகொள்கையா மென்பது, முன்னிரண்டடியின் தாற்பரியம். பெருந்தன்மை சிறிதுமில்லாமல் வஞ்சனைக் கருத்தோடு சூதாட எண்ணிய சகுனிக்குப் புன்றொழிலிளைஞர் உவமையாக்கப்பட்டனர். 'என்றான்' என்பதற்குத் துரியோதன னென்பதைத் தோன்றாவெழுவாயாகக் கொண்டு, சகுனிதன் - சகுனியினுடைய, சூதினுக்குத் துரியோதனன் என்னைத்தானா ஈடாக்கினானென்றும் உரைகூறலாம். ஞான நூல் - தத்துவஞானத்தை யுணர்த்தும் வேதாந்த சாஸ்திரம்; கடவுளைத்தியானஞ் |