பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 232

செய்து பயனுளதாகக் கழிக்கவேண்டிய பொழுதைச் சூதுசதுரங்க மாடி வீணே
போக்குதல் தகுதியன் றென்பது வேதாந்திகளின் கொள்கை.

     மேதக - 'மேதகு' என்ற பகுதியினடியாப் பிறந்த செயவெனெச்சம்.
வேந்து + நூல் = வேத்துநூல்;  வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
[நன்: உயிர்-34.] வேத்துநூல் - அரசநீதி கூறும் காமந்தகம், சுக்ரநீதி
முதலாயின.  இரண்டாமடியிலுள்ள ஏகாரமிரண்டனுள், முன்னது - பிரிநிலை;
பின்னது - தெளிவு.  இளைஞரின், இன் - ஐந்தனுருபு, ஒப்பு.  என்னையோ
என்றது, சூது பெருங்குற்ற மென்று அறிந்த என்னை எதிராகக் கொள்வது
தகுதியன்று என்னும் பொருளைத் தந்துநிற்றலால், ஓகாரம் -
ஒழியிசைப்பொருளது.                                      (220)

68.-'நின்கருத்தைக்கூறு' என்றுவிதுரனைத் தருமன்
வினாவுதல்.

தன்க ருத்தினி னிகழ்ந்தவாறிம்முறை தருமன்மைந் தனுங் கூறி,
என்க ருத்தினாற் பெறுவதென் விதியினை யாவரே யெதிர்
                                            வெல்வார்,
மன்க ருத்தையு மவன்றிரு வுளநிகர் மகன்கருத் தையு நோக்கி,
நின்கருத்தைநீ யுரையென விதுரனு நிகழ்ந்தன வுரைக்கின்றான்.

     (இ -ள்.) தருமன் மைந்தன் - தருமபுத்திரனும், இ முறை - இவ்விதமாக,
தன் கருத்தினில் நிகழ்ந்த ஆறு - தனது மனத்திலே தோன்றியபடியே, கூறி -
(தன்னுடைய அபிப்பிராயத்தைச்) சொல்லி,-'என் கருத்தினால் பெறுவது என் -
என்னுடைய எண்ணத்தினால் யாது நடக்கும்? [ஒன்றும் நடவாது]; விதியினை
யாவரே எதிர் வெல்வார் - ஊழ்வினையை எதிர்த்துச்சயிப்பவர் யாவருளர்?
[எவரும் இலர்: எல்லாம் விதியின்படியே நடக்குமென்றபடி] மன் கருத்தையும்
- திருதராஷ்டிர மகாராசனது எண்ணத்தையும், அவன் திருஉளம் நிகர் மகன்
கருத்தையும் - அவனது மனக்கருத்துக்கு ஒத்து நடக்கிற அவன் மகனான
துரியோனனது எண்ணத்தையும், நோக்கி - ஆராய்ந்து பார்த்து, நின் கருத்தை
நீ உரை - (இப்போது செய்யத்தக்கது இன்னது என)உனது அபி்பிராயத்தை நீ
எடுத்துக் கூறுவாயாக,' என-என்று கேட்க,-விதுரனும்-, நிகழ்ந்தன -
(அத்தினாபுரியில்) நடந்த வரலாறுகளை, உரைக்கின்றான் -
சொல்வானாயினான்; (எ - று.)

    இளமையிலே குந்திக்குத் துருவாசமுனிவ னுபதேசித்திருந்த மந்திரத்தின்
மகிமையால் எதிர்வந்த யமதருமராசனது அருளாற் பிறந்தவனாதலால்,
யுதிஷ்டிரன் 'தருமன் மைந்தன்' எனப்பட்டான்.  'தன் கருத்தின்படி ஒன்றும்
நடவாது' என்ற சிறப்புப்பொருளை, 'விதியினை யாவரே எதிர்வெல்வார்' என்ற
பொதுப்பொருள் சாதித்து நிற்றலால், இரண்டாமடி - வேற்றுப்பொருள்
வைப்பணி.
  நிகழ்ந்தன' என்பதற்கு - (தன் கருத்தில்) தோன்றியவற்றை
என்பாருமுளர்.  'எதிர்வெல்வார்' என்பதில், எதிர் என்ற