பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 234

இனி, 'புதைந்து நின்னிதயத்துத், தங்கு நீர்மையில்' என்றும் பாடம்.

     'இனி' என்றது, இந்திரப்பிரத்தத்தை.  'அங்கு' என்றது, அத்தினாபுரியை.
இங்கு - இப்பொழுதுமாம்.  யானும் மன்னவர் அகட்ப என்று பிரித்தும்
உரைக்கலாம்.  நீர்மையின் மொழிதல் - இனிது கூறுதல்; நீர்மை - நீரின்
தன்மை, இனிமை.  'மதிக்கிற்பார்' - இயல்பினால் இறந்தகாலம் எதிர்காலமாகச்
சொல்லப்பட்ட காலவழுவமைதி.  'பொங்கு நீர்' எனவே, கடலாயிற்று.    (222)

70. 71.- இரு கவிகள் -ஒருதொடர்; வீமசேனன் வார்த்தை.

அன்று தாழ்புனற்றுறையினிற் கழுநிரைத் தரியவஞ் சனைசெய்தான்,
குன்று போலுயர் வாழ்மனைக் கொடுந்தழல்கொளுத்திவன்
                               கொலைசூழ்ந்தான்,
வென்று சூதினில் யாவையுங்கவரவே விரகினா லழைத்திட்டான்,
என்று தானமக்கன்புடைத்துணைவனாயிருந்ததவ் விகலோனே.

முளையி லேயுயிர் கொல்வதோர்கடுவிட முற்றிவன் காழேறி
விளைவி லேதுசெய் யாதுமற் றவருடன் விழையுநண்பினி வேண்டாம்
வளையி லேதமே புரிந்துமேன்மலைந்திடும் வன்படை கொடுமோதிக்
களையி லேநமக் கிருப்புள தென்றனன்காற்றருள் கூற்றன்னான்.

     (இ -ள்.) (70) (துரியோதனன்), - அன்று - (நாம் சிறுவராயிருந்த)
அக்காலத்தில், தாழ் புனல் துறையினில் - ஆழமான (கங்கையின்)
நீர்த்துறையில், கழு நிரைத்து - கழுக்களை வரிசையாக நிறுத்தி, (என்னைக்
கொல்லுமாறு), அரிய வஞ்சனை செய்தான் - (பிறராற்செய்வதற்கு)
அருமையான வஞ்சகத்தைச் செய்தான்; (பின்னையும்), குன்றுபோல் உயர் வாழ்
மனை கொடுந் தழல் கொளுத்தி - மலை போல உயர்ந்துள்ளதாகிய (நாம்)
வாழ்ந்த மாளிகையிற் கொடியநெருப்பிட்டு கொளுத்தி, வல் கொலை சூழ்ந்தான்
- (நம்மைக் கொல்லுமாறு) வலிய கொலைத்தொழிலை ஆலோசித்தான்;
(இப்பொழுதும்), சூதினில் வென்று யாவையும் கவரவே விரகினால்
அழைத்திட்டான் - சூதாட்டத்தில் (நம்மை) வென்று (அவ்வழியாக)
நமதுபொருள் முழுவதையும் கவரும் பொருட்டாகவே (புதமண்டபத்தைக்
காணவேண்டுமென்கிற வியாஜத்தினால்0 தந்திரமாக அழைத்திருக்கிறான்; அ
இகலோன் - (எப்பொழுதும் நம்மிடத்துப்) பகை பாராட்டு கின்றவனான
அத்துரியோதனன், நமக்க அன்பு உடை துணைவன் ஆய் இருந்தது -
நம்மிடத்து அன்புள்ள சகோதரனாய் வாழ்ந்தத, என்றுதான் -
எக்காலத்தில்தான்?  [ஒருபோதுமில்லை யென்றபடி]. (71) முளையிலே உயிர்
கொல்வது ஓர் கடு விடம் - முளைக்கும் பருவத்திலேயே உயிரை
வதைப்பதாகிய ஒரு கொடிய நச்சுமரம், முற்றி வல் காழ் ஏறி செய்யாது -
எந்தக் கேட்டைத்தான் செய்ய