மாட்டாது? (அதுபோலவே கொடிய துரியோதனனும் பலவகையாகத் துன்பஞ்செய்வான்; ஆதலால்). அவருடன் விழையும் நண்பு இனிவேண்டாம் - அவருடன் விரும்பிக்கொள்ளுஞ் சிநேகம் நமக்கு இனிமேல் வேண்டுவதன்று; வளையில் - (நாம் அத்துரியோ தனனுக்கு) அடங்கிப் பணிவாக நடந்துகொண்டால், (அத்துரியோதனன்), ஏதமே புரிந்து - (நமக்குத்) துன்பத்தையேசெய்து, மேல் மலைந்திடும் - (அவ்வளவோடு நில்லாது) மேலும் போர் செய்தும் வருத்துவான்; (ஆதலின், அவனோடு நட்புப்பாராட்டாமல்), வல் படைகொடு மோதி களையிலே - கொடிய ஆயுதங்களினாற் போர்செய்து (அப்பகையை) ஒழித்தால் மாத்திரமே, நமக்கு இருப்பு உளது - நாம் உயிரோடு வாழ்தல் வேண்டும்,' என்றனன் - என்று கூறினான்: (யாவனெனில்),- காற்று அருள் கூற்று அன்னான் - வாயுதேவன் பெற்ற (பகைவர்க்கு) யமன்போன்றவனாகிய வீமசேனன்; (எ - று.) முதலில் என்னைக்கொல்லுமாறு ஆற்றிலே கழுநாட்டியும், பிறகு நம்மெல்லாரையுமே கொல்லுமாறு நாம் வாழ்ந்தமனையில் தீயிடச் சூழ்ச்சிசெய்தும், இப்போதும் நமதுசெல்வவாழ்க்கை முழுவதையும் பறிக்கும் வகையாக மண்டபமென்ற வியாஜம்வைத்து அழைத்தும், கேட்டிற்கே மேன்மேற் பலப்படியாகத் துரியோதனன் முயல்கின்றனனாதலால் அவனுக்கு இப்பொழுது சிறிதும் இடங்கொடாமல் அவனைக் கொன்றால்தான் நாம் உயிர்தப்பிப் பிழைக்கலாமென வீமன் தனது கருத்தை வெளியிட்டான்: இதனால், துரியோதனன் விருப்பப்படி மண்டபத்தைக் காணச் செல்லுதல் தக்கதன்றென வீமன் மறுத்தவாறு. (70) துரியோதனன் கழுநிரைத்து வஞ்சனைசெய்த கதை:- ஒருநாள் துரியோதனன் கங்கைத்துறையில் இரும்பினாலும் செம்மரத்தாலும் கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி உள்நாட்டச்செய்து, கூமனை 'நீரில்விளையாடலாம், வா' என்று வஞ்சனையாக அழைத்துப்போய் 'இங்கிருந்து நீ நீரிற் குதிக்கின்றனையா? பார்ப்போம்' என்ன, அப்பொழுது கண்ணன் கருவண்டினுருவங் கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க, வீமன் அதனை நோக்கி, 'இது என்ன நீரோட்டத்தில் வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே!' என்று உற்றுப்பார்க்க, அவற்றின்கீழ் வசிகள்நாட்டியிருக்கக் கண்டு தான் அவைநாட்டியிராத இடம்பார்த்துக் குதித்துக் கரையேறி மீண்டனனென்பதாம். இரண்டாமடியிற் குறித்த கதை:-அத்தினாபுரியிலே தருமபுத்திரனுக்கு இளவரசு முடிசூட்டியமை கண்டு அழுக்காறு கொண்ட துரிோதனனுடைய கருத்துக்கு இணங்கிய திருதராட்டிரன், புரோசனனென்னுந் துர்மந்திரியுடன் சதியாலோசனை செய்து வாரணாவதமென்னும் நகரத்தில் அரக்குமாளிகை யொன்று கட்டிமுடித்துப் பாண்டவர்களை அடிதல் வசிக்கச்செய்து ஓரிரவில் அம்மாளிகையில் தீப்பற்றவைத்து அவர்களை ஒழித்துவிடுவ |