| தென்று நிச்சயித்து, அவ்வமைச்சனைக்கொண்டே அந்நகரத்தை விசேஷமாக அலங்கரிப்பித்து, ஒருநாள் தருமபுத்திரனை நோக்கி 'நீ உனது தம்பியர் நால்வருடன் வாரணாவதத்துச்சென்று தனியே வாழ்வாய்' என்று கட்டளையிட்டு, அப்புரோசனனையே துணையாக்கி அவனோடும் அவனுக்கு அடங்கிய பரிவாரத்தோடும் அனுப்ப, பாண்டவரும் குந்தியும் வாரணாவதத்திற்சென்று தங்கட்கென்று புதிதாகச் செய்யப்பட்ட மாளிகையில் வசித்திருந்தனர்; அங்ஙனம் வசிக்கும் நாட்களில் பாண்டவர்கள் அரக்குமாளிகையின் தன்மையையும், புரோசனனது செய்கைகளையும் உற்றுநோக்கிச் சங்கைகொண்டிருக்கையில், விதுரனா லனுப்பப்பட்ட சிற்பியொருவன் வீமனிடம் வந்து, திருதராட்டிரனது கட்டளையின்படி புரோசனன் வஞ்சனையாக இந்தமாளிகையைக் கட்டும்பொழுது அவனது சூழ்ச்சியை யுணர்ந்த விதுரனுடைய ஏவலால் தான் இம்மாளிகையினுள்ளே ஒரு புறத்தில்நீண்ட சுரங்க வழியொன்றை நெடுந்தூரத்திலுள்ள ஒருவனத்திற் சென்று சேரும்படி எவருமறியாமல் அமைத்துள்ள தந்திரத்தைத் தெரிவித்து, அவ்வழிக்குத் துவாரம் ஒரு தூணின் கீழ் உள்ளதென்பதையுங் குறிப்பாகச் சொல்லிச்செல்ல, பின்பு ஒருநாளிரவில் வீமன் புரோசனனை அம்மாளிகையிலேயே படுக்கச்சொல்லி அவன் நன்றாகத் தூங்கியபின் அவ்வீட்டில் தானே நெருப்புப் பற்றவைத்துவிட்டுத் தன்னுடன் பிறந்தவர்களையும் தாயாரையும் சுரங்கவழியாக ஒரு வனத்திற் சேர்த்தான். துரியோதனன் கட்டளைப்படி பாண்டவர்க்கு விஷங்கலந்த தேனைக் கொடுத்து அவர்களைக் கொல்ல வந்த ஐந்துவேடர்களும் அவர்கள் தாயும் அந்நாளில் அவ்வரக்கு மாளிகையில் தங்கித் தீப்பட்டு இறந்தன ராதலால், பொழுது விடிந்தபின்பு அங்குவந்து பார்த்த ஊராரெல்லாரும், பாண்டவரும் குந்தியுமே எரிபட்டு இறந்தன ரென்று இரங்கினார்கள். அவ்வாறே நாடெங்கும் பரவி உலகம் முழுவதும் வருத்தமடைய, துரியோதனாதியர் மாத்திரமே மனமகிழ்ச்சி கொண்டனர் என்பதாம். ஏகாரம் இரண்டனுள், முன்னது - தேற்றம்; பின்னது - ஈற்றசை. கொளுத்தி - கொளுந்து என்பதன் பிறவினையான் கொளுத்து - பகுதி. (71) இளமைப்பருவத்திலேயே நம்மைக்கொல்ல முயன்ற துரியோதனன் படைவலியும் துணைவலியும் மிக்குக் காளைப்பருவமடைந்து அரசனாயிருக்கிற இப்போது மற்று எந்தக்கேட்டைத்தான் செய்யா னென்ற உபமேயப் பொருளைத் தருதலால், 'முளையிலே உயிர்கொல்வதோர் கடுவிடம் முற்றி வன்காழேறி, விளையிலேது செய்யாது' என்பது பிறிதுமொழிதலணி: இத்தொடர் மொழியை, கீழ்வந்த பதினோராஞ்செய்யுளின் பின்னிரண்டடிகளோடு ஒப்பிடுக. இத்தொடர் 'அவருடன் விளையும் நண்பு இனி வேண்டாம்' என்பதைச் சாதித்துநிற்பது - தொடர்நிலைச்செய்யுட்குறியணி. இவ்விரண்டணியும் அரிசியும் எள்ளும்போல வேறுபாடு தோன்றச் சேர்ந்து வந்தது - சேர்வையணியாம். மற்று - அசைநிலை; வினைமாற்றுமாம். 'முற்றிவன்காழேறி' என வருதலால், 'விடம்' என்பதற்கு - நச்சுமரமெனப் பொருள் |