யாது' என்று எண்ணித் தான்கொண்ட தொழிலைநெகிழ்த்தி விடப்பகைவரால் எளிதிற் பிரிக்கப்பட்டு விலகிச்செல்வன்: ஆகவே, தேறலார்தமைத் தேறலும், தேறினர்தமைத் தேறாமையுங் கூடாவென்க; "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை, தீராவிடும்பைதரும்," "தேரான்தெளிவுந் தெளிந்தான்கணையுறவும், தீராவிடும்பைதரும்" என்ற திருக்குறட்பாக்களினால் முதலடியின் கருத்து விளங்கும். இனி, தேறலார்தமைதேறலும் - நம்புதற்குத் தகுதியல்லாத அயோக்கியர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும் - யோக்கியரென்று கொண்டவர்களை நம்பா தொழிதலும் என்றுமாம். 'மாறுடன் மருவிவாழ்தல்' என்பதே இங்குச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாயினும், அதன் இனமாக மற்றவற்றையும் உடன்கூட்டி யுரைத்தார். "நட்புப்பிரித்தல் பகைநட்ட லொற்றிகழ்தல் பக்கத்தார் யாரையு மையுறுதல் - தக்கார், நெடுமொழி கோறல் குணம் பிறிதாதல், கெடுவது காட்டுங் குறி" என்ற நீதி நெறிவிளக்கச்செய்யுள் இங்கு அறியத்தக்கது. தேறினர்த் தேறலாமை - உயர்திணையிடத்து இரண்டனுருபு தொக்கு வலிமிக்கது: "இயல்பின் விகாரம்." மாறு - பகைவர்க்குப் பண்பாகுபெயர். என்றுகொண்டு, கொண்டு - அசை. கூறு - முதனிலைத்தொழிற்பெயர். 'கூறலாதன' - கூறலாகாதன என்பதன் தொகுத்தல் விகாரமுமாம்: கூறலாதன என்றது - 'வரதனாற் பணிப்புறு தொழில் மறுக்க நாம் யாவர்' எனவும், 'சூதாட்டம் அறிவுடையோர்செய்கையன்று, பாதகத்தில் ஒன்று' எனவும், 'விதியினை யாவரே எதிர் வெல்வார்' எனவும் துரியோதனன் பக்கல் செல்ல வேண்டுவது அவசியமென்பது தோன்றத் தருமன் கூறியவற்றை. (225) 73.-நகுலசகதேவர்களும்வீமார்ச்சுனர்களின் விருப்பத்தின்படியே சொல்லத் தருமன் தன் கருத்தை வெளியிடுதல். விசைய னிவ்வகை மொழிந்ததுமுந்துறு வீமன்மாற் றமுங் கேட்டே, இசைபெ றும்பெயர் நகுலனுந் தம்பியு மேகுதறகாதென்றார், வசைய றும்புகழ்த் துணைவரின் றுரைத்ததே வார்த்தையாயினும் பெற்ற, அசைவி லன்புடைத் தந்தைசொன்மறுப்பதோ வென்றன னறஞ்செய்வான். |
(இ -ள்.) இ வகை விசையன் மொழிந்ததும் - இவ்வாறு அருச்சுனன் கூறியதையும், முந்துறு வீமன் மாற்றமும் - முன்னதாகப் பேசிய வீமசேனனுடைய வார்த்தையையும், கேட்டு -,-இசை பெறும் பெயர் - புகழ் பெற்ற பெயரை யுடையவர்களாகிய, நகுலனும்-, தம்பியும் - (அவனது) தம்பியாகிய சகதேவனும், ஏகுதல் தகாது என்றார் - '(அத்தினாபுரிக்குத் துரியோதனனது விருப்பத்தின்படியே) போவது தகுதியன்று' என்றே கூறினார்கள்; அறம் செய்வான் - (அவற்றைக் கேட்ட) தருமத்தையே செய்பவனாகிய யுதிஷ்டிரன், 'வசை அறும் புகழ் துணைவர் |