பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 239

     இன்று உரைத்ததே வார்த்தை - குற்றமற்ற புகழையுடைய தம்பிமார்கள்
நால்வரும் இப்பொழுது சொன்னதே (ஏற்ற) வார்த்தையாகக் கொள்ளத் தக்கது;
ஆயினும்-, 'பெற்ற அசைவு இல் அன்பு உடை தந்தை சொல் மறுப்பதோ -
தான்கொண்ட (நம்மிடத்துக்) குறைதலில்லாத [உறுதியான] அன்பையுடைய
பெரியதந்தையாகிய திருதராட்டிரனது கட்டளைச் சொல்லை
மறுப்பதுதகுதியோ?' என்றனன்-; (எ - று.)

     'முந்துறு வீமன்' - (பேசுதலிலே) முற்பட்ட வீமனென்றும், (அடுத்துப்
பேசிய அருச்சுனன் முதலிய மூவர்க்கும்) முன் பிறந்த வீமனென்றும்
பொருள்கொள்ளலாம்.  'உரைத்ததே வார்த்தை' என்னுமிடத்தில், உரைத்தது
வார்த்தையென்பது இயல்பிலே அமைந்திருக்கவும் புதிதாக விதித்தது, 'மிகவும்
பயனுடையதாம்' என்ற கருத்தை விளக்குவதால், விதியணியாம். ஆயினும்,
உம்மை - சிறப்பு;  மற்றவை - எண்ணுப்பொருளன.                (226)

74-75:-தருமன் சொற்படிஅத்தினாபுரத்துக்குச் செல்லச்
சேனைத்தலைவரும் அரசரும் வந்து கூடுதல்.

இரண்டு கவிகள் ஒரு தொடர்:

ஆவி யார்நிலை பெறுபவர் நீதிகூரரியவான் புகழன்றிப்
பாவி யானதங் கணுகுறா தொழியினும்பலித்திடு நினைவின்றி
மேவி யாளுடை யையன்வந் திருக்கவும்வேரிவண் டெழுமன்றற்
காவி யார்தொடைக் காவல னேவனாமறுப்பது கடனன்றே.
 
நாளை யேகுது மெந்தைவா ழத்தினாநகர்க்கெனத் தருமன்றன்
காளை யேவலின் முரசறைந் தெங்கணுங்காவலர்குழூஉக்கொண்டார்
வேளை யேறிய வரும்படைத் தலைவருமேல்வரும் புனலூடு
வாளை யேறுதண் பழனநார் டெறிபடைமன்னரும் வந்துற்றார்.

     (இ -ள்.) (74) (பின்னும் தருமபுத்திரன்),-'நீதி கூர் அரிய வான் புகழ்
அன்றி - நியாயவழியாற் பெறுகின்ற அருமையான சிறந்த கீர்த்தியையே
யல்லாமல், ஆவி நிலை பெறுபவர் - உயிரை நிலையாயிருக்கப் பெறுபவர்,
யார் - எவர்? [ஒருவருமில்லை யென்றபடி]: அங்கு அணுகுறாது ஒழியினும் -
(நாம்) அவ்வத்தினாபுரத்திற்குச் செல்லாதிருந்தாலும்,  பாவியானது -
(விதியினால்) நேரக்கூடியது, நினைவு இன்றி - (நமது) எண்ணப்படியல்லாமல்
[நமக்குத் தெரியாமலே], பலித்திடும் - நேர்ந்தே தீரும்;  (ஆகையால்), ஆள்
உடை ஐயன் மேவி வந்து இருக்கவும் - (நம்மை) அடிமையாகவுடைய சிறிய
தந்தையாகிய விதுரன் (அத்தினாபுரிக்கு நம்மை அழைத்துச் செல்லுமாறு)
விரும்பி வந்திருக்கையிலும், வேரி வண்டு எழு மன்றல் காவி ஆர் தொடை
காவலன் - தேனையுண்ணுகின்ற வண்டுகள் (தன்னிடத்துப்)
பறந்துவருவதற்குக்காரணமான நறுமணமுள்ள குவளைமலர் நிரம்பியிருக்கப்
பெற்ற மாலையை