பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 240

யணிந்த திருதராஷ்டிர மஹாராஜனது, ஏவல்-கட்டளையை, நாம் - (மாறுகூறாமல்
அடங்கிநடக்க வேண்டிய) நாம், மறுப்பது-(உடன்படாமல்) மறுத்துச்சொல்வது,
கடன் அன்று - முறைமையன்று; (அதனால்), (75) எந்தை வாழ்
அத்தினாநகர்க்கு - எமது தந்தை [திருதராஷ்டிரன்] வசிக்கின்ற
அத்தினபுரத்திற்கு, நாளை ஏகுதும்-நாளைக்குச் செல்வோம்' என-என்று (தன்
கருத்தை வெளியிட்டு (ப் பின்பு காவலாளர்க்கு)க் கட்டளையிட, தருமன் தன்
காளை ஏவலின் - அந்தத் தருமபுத்திரனது கட்டளையினால், காவலர்-
காவற்காரர்கள், எங்கணும் முரசு அறைந்து குழூஉக்கொண்டார் - எல்லா
விடங்களிலும் கூட்டமாகக் கூடிப் பறையறைந்து தெரிவித்தார்கள்; வேளை
ஏறிய அரும்படைத் தலைவரும் - பல காலமாகப் பழகிய [மிக்க
அனுபவமுடைய] அருமையாகிய சேனைத்தலைவர்களும், மேல் வரும் புனலூடு
- மிக்குப் பெருகுகின்ற நீர்வெள்ளத்தினிடத்தே, வாளை-வாளைமீன்கள், ஏறு-
எதிராகச்செல்லுகின்ற, தண் பழனம் நாடு - குளிர்ந்த வயல்களையுடைய
அயல்நாடுகளிலுள்ளவர்களான, எறி படைமன்னரும்-(பகைவர்மேல்)
வீசியெறிதற்கு உரிய ஆயுதங்களை ஏந்திய அரசர்களும், வந்து உற்றார் -
வந்து கூடினார்கள்; (எ - று.)

     (74) நம்மை வருமாறு கட்டளையிட்டவனோ, நமது பெரிய தகப்பன்;
நம்மை அழைத்துச் செல்ல வந்தவனோ சிறிய தகப்பன்; இவ்வொன்றே நாம்
செல்லுதற்குத் தக்ககாரணமாயிருக்க, இவ்விரண்டும் ஒருங்கே நேர்ந்தபோது
நாம் போகாமலிருப்பது பழிக்கே காரணமாம்;  அவ்வத்தினாபுரிக்குச் செல்வது,
தீங்குக்குக் காரணம் என்போமானால், ஊழ்வலியால் நேரக்கூடியவை நாம்
அங்குச் செல்லாமற்போனாலும் பலித்தே தீரும்: ஆகவே, 'பெரியோர்கள்
கட்டளையை மறுத்தார்கள்' என்ற பழிக்கு உள்ளாகாமல் இப்பொழுது
செய்வதே தகுதியெனத்தருமன் தன் கருத்தை வெளியிட்டன னென்க.  "ஒன்றா
வுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றாது நிற்பதொன்றில்' என்றபடி பூதவுடம்பு
அழியப் புகழுடம்பு அழியாது நிலைநிற்றலால் 'வான்புக ழன்றி ஆவி யார்
நிலை பெறுவர்' என்றான்.  புகழ் நிலைபெறுதலாவது - தான் இறந்த பின்பும்
தன்பெயர் அழியாது நிலைநிற்றல்.  பாவி-வடசொல்.  பாவியானது பலித்திடும்
- "வருகுவது தானே வரும்".  'வேரிவண்டு எழுமன்றல் காவி ஆர் தொடை'
என்பதற்கு - தேன்வண்டுகள் நறுமணம்மேலெழப் பெற்ற குவளை மலர்களிலே
ஆரவாரித்தற்கு இடமான மாலை யெனினுமாம்.

     (75) 'எந்தைவாழ் அத்தினாநகர்' என்றதில், நாம் துரியோதனாதியரைப்
பார்த்துப் போகாதிருந்தாலும், நமது தந்தையைப் பார்த்தாவது செல்ல
வேண்டுமென்ற பொருள் தொனிக்கும்;  "பாலைப் பார்த்தோ, பானையைப்
பார்த்தோ" என்பது, பழமொழி.  காளை - இளவெருது போன்றவன்,
உவமையாகுபெயர்:  நடைவலிமை காம்பீரியங்களில் உவமம்.  முரசறைந்து
செய்திதெரிவித்தல், மரபு.  'காவலர்' என்றது - இங்கே, ஊரைக் காவல்
செய்துகொண்டு உரிய காலத்திற் பறையறைந்து திரியும் ஏவலாளரைக்
குறிக்கும்;  'மன்னரும்வந்துற்றார்' என நான்காமடியில்