பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 243

பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யயஜ்ஞம், பூதயஜ்ஞம் என்ற
ஐம்பெருவேள்விகள்; (வேதமோதுதல் - பிரமயஜ்ஞம்; ஓமம்வளர்த்தல் -
தேவயஜ்ஞம்; பிரஜையைப்பெறுதல் - பித்ருயஜ்ஞம்; விருந்தோம்புதல் -
மநுஷ்யயஜ்ஞம்; பலியீதல் - பூதயஜ்ஞம்.) முகவாசங்க ளைந்தாவன -
தக்கோலம், இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய் என்பனவாம்.  கா -
சோலை; இங்கு, மரத்துக்கு இலக்கணை.                          (230)

78.-பாண்டவர்களது குடைகள்,சாமரங்களின் வருணனை.

விழியி னெஞ்சின்வா னெருப்பினீடுததியின் விதிபடைப் பினிற்
                                            றோன்றிப்,
பொழியும் வெண்கதி ரைவகை மதியுமப்பொழுதுதித்தனவென்ன, மொழியு மைந்துபொற் றனிக்குடை நிழற்றினமுழுமதி வடிவின் கண், இழியும் வெண்சுடர்க் கற்றையிற்சாமரமிரட்டின விருபாலும்.

     (இ -ள்.) 'விழியின் - (அத்திரிமுனிவரது) கண்ணிலும், நெஞ்சின் -
((திருமாலினது) மனத்திலும், வால் நெருப்பின் - பரிசுத்தமான அக்கினியிலும்,
நீடு உததியின் - பெரிய திருப்பாற்கடலிலும், விதிபடைப்பினில் - பிரமதேவனதுசிருஷ்டியிலும், (ஆக ஐந்திடங்களிலும்), தோன்றி - பிறந்து,
வெள் கதிர்பொழியும் - வெண்மையாகிய நிலாவொளியை வீசுகிற, ஐவகை
மதியும் - ஐந்துசந்திரர்களும், அப்பொழுது உதித்தன என்ன - (பாண்டவர்கள்
அத்தினபுரத்திற்குப் புறப்படும்) அச்சமயத்தில் (ஒருங்கே) உதயமாயின' என்று
சொல்லும்படி, மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின -
சிறப்பித்துக்கூறப்படுகின்ற அழகிய ஒப்பற்ற ஐந்து குடைகள் (பாண்டவ
ரைவர்க்கும்) நிழலைச் செய்தன;  இரு பாலும் - (அப்பாண்டவர்களது)
இரண்டு பக்கங்களிலும்,- முழுமதி வடிவின்கண் இழியும் வெள் சுடர்
கற்றையின் - அந்தப் பூர்ணசந்திர பிம்பத்தினின்று கீழிறங்குகிற
வெண்மையாகிய நிலாத்தொகுதிபோல, சாமரம் இரட்டின - சாமரங்கள்
வீசப்பெற்றன;  (எ - று.)

     பாண்டவரைவரும் ஐந்து தேரின்மேலேறிச் செல்லுகையில் ஒருங்கே
அவர்கள்மீது பிடிக்கப்பட்ட ஐந்து வெண்கொற்றக் குடைகட்கு ஒரே காலத்தில்
தோன்றி விளங்குகின்ற ஐந்து சந்திரர்களையும், அக்குடைகளின் இரு
பக்கங்களிலும் வீசப்படுகின்ற வெண்சாமரங்கட்கு அச்சந்திரனிடத்தினின்று
இழியும் நிலாத்தொகுதியையும் ஒப்பாமெனக் குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.

     தேவர்களை இருதிணையாலுங் கூறலா மாதலால், 'ஐவகைமதியும்
உதித்தன' என அஃறிணையாற் கூறினார்.  அத்திரி - பிரமதேவனது
மாநஸபுத்திரர்;  நவப்பிரமாக்களி லொருவர்; (மற்றையோர் - பிருகு,
புலஸ்தியர், கிரது, அங்கிரசு, மரீசி, தக்ஷர், வசிஷ்டர், நாரதர்.)