பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 246

உடையது, ம்ருகம்.  பத்ரத்துக்கு உயரம் ஏழு முழமும், நீளம் எட்டு முழமும்,
வயிற்றின் சுற்றளவு பத்து முழமுமாம்; மந்த்ரத்துக்கு இவ்வளவினும் ஒவ்வொரு
முழம் குறைவும் ம்ருகத்திற்கு அதனளவினும் ஒவ்வொரு முழம் குறைவுமாகும்.
பத்ரத்துக்கும் மந்த்ரத்துக்கும் நீளம் ஓரளவு என்பதும் உண்டு.  பத்ரத்தின்
மதநீர் பகமையாகவும், மந்த்ரத்தின் மதநீர் மஞ்சள் நிறமாகவும், ம்ருகத்தின்
மதநீர் கருமையாகவும் இருக்கும்.  இனி, களிற்றியானை பிடியானை
குட்டியானையென்றும், மூன்றுவகை மதத்தையுடைய யானையென்றும்
யானையின் முத்திறத்தைக் கூறுதல் தகுதியன்று. 'முத்திறத்தன வெண்ணிலப்
பிறப்பின' என்ற பாடத்துக்கு-மூவகையாக எண்ணப்படுகிற நிலங்களிற்
பிறத்தலையுடையன என்று பொருள்.  மததாரா - வடசொற்றொடர்.  (232)

80.வன்ற போதன ரினுமிகுபொறையனவலனுயர்வனவெண்கோ,
வென்ற போதகத் தானையின் பெருமையையெங்ஙனம்
                                     புகல்கிற்பாம்,
நின்ற போதுடன் முகிலிடை மறைந்ததுநிரை நிரை
                                    நெறிப்பட்டுச்,
சென்ற போதுவெம் படைக்கடற்செய்ததோர் சேதுபந்
                                    தனம்போலும்.

     (இ -ள்.) வல் தபோதனரினும் மிகு பொறையன - முதிர்ந்த தவத்தையே
செல்வமாக வுடையவர்களான முனிவர்களைக் காட்டிலும் மிக்கபொறுமை
யுடையனவும், வலன் உயர்வன-வெற்றியினால் மேம்பட்டனவுமாகிய, எண் கோ
என்ற போதகம் தானையின்-மதிக்கப்படுகின்ற மலையென்று சொல்லத்தக்க
யானைச்சேனைகளினுடைய பெருமையை,-எங்ஙனம் புகல்கிற்பாம் - (யாம்)
எவ்வாறு வருணித்துச் சொல்லவல்லோம்? நின்றபோது - (இவ்யானைகள்
எழுந்து) நிற்குஞ் சமயத்தில், உடல் முகிலிடை மறைந்தது - (அவற்றின்)
உடம்பு மேகமண்டலத்தினிடையிலே மறையுந்தன்மையுள்ளது; நிரை நிரை
நெறிபட்டு சென்றபோது - வரிசை வரிசையாக ஒழுங்குபட்டுச்
செல்லுஞ்சமயத்தில், (அவ்யானை வரிசையின் தோற்றம்), வெம்படை கடல்
செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் - கொடிய சேனாசமுத்திரத்திற்
கட்டியதாகிய ஓர் அணைக்கட்டை யொத்திருக்கும்; எ - று.)

     பிறர்செய்த தீங்குக்கு அப்பொழுதே மாறுசெய்ய வல்லமை
பெற்றிருந்தும் அவ்வாறு செய்யாமல் அப்பொழுது பொறுத்துக்கொள்ளும்
யானையின் பொறுமைக்கு, முனிவர்களின் பொறுமையை உவமை கூறினார்.
துறவறத்தார்க்கு உரிய விரதங்களுள் வெகுளாமை ஒன்றாத லுணர்க.  நாட்டு
மானிடர் செல்வத்தைப் பேணிக் காப்பதுபோல முனிவர்கள் தவத்தைச்
செல்வமாகப் பாவித்துப் பேராதரத்தோடு பாதுகாத்தலால், அவர்கட்கு
'தபோதனர்' என்று ஒரு பெயர்.  'எண் கோ என்ற' என்பதற்கு அஷ்டகுல
பர்வதங்களென்று சொல்லத் தக்க என்றும், அஷ்டதிக்கஜங்க ளென்று
சொல்லத்தக்க என்றும், வெண்கோ என்ற என்று எடுத்து - ஐராவதம் என்று
சொல்லத்தக்க என்றும் பொருள் கூறலாம்.  கோ - மலை; யானைக்கு
இலக்கணை.  'வென்ற' என்று பிரித்து உரைப்பது, மோனைத்தொடைக்குச்
சிறவாது.