விரற்கிடையென்று கூறுதலுமுண்டு. மிக்கசுழிகள் - முகம் தலை நாசி மார்பு என்ற இவ்வுறுப்புக்களிற் பொருந்திய இரட்டைச் சுழிகளும், நடுநெற்றி பின்புறம் இவற்றிற் பொருந்திய ஒற்றைச் சுழிகளுமாகிய, 'த்ருவம்' என்னும் பெயருடைய பத்துச்சுழிகளோடு, கழுத்தில்வலமாகச் சுழிந்திருக்குந் தேவமணியும்: இவை, குதிரையின் நல்லிலக்கணமாதலை, "அணிகிளர்கழுத்தில் வலஞ்சுழிந்திருந்தா லறிந்தவ ரதனையே தெய்வ, மணியென விசைப்பர் முகந் தலை நாசி மார்ப மிந்நான்கு மிவ்விரண்டு, பணிதருசுழியு நுதனடுப் பின்னைப்பக்கமு மொவ்வொருசுழியுந், துணிதரவிருப்ப திலக்கணமுளது" என்பதனாலும் அறிக. தீமையற்று மேதகு நிறத்தன - புலி கரடி கழுதை செந்நாய் பூனை நரி காகம் புகை என்னும் இவற்றைப்போன்ற நிறமுடையனவன்றி, சந்திரன் பால் மாதுளம்போது செம்பஞ்சி வண்டு முகில் கோரோசனை பொன் முதலியவற்றைப் போன்ற நிறமுடையவை. குதிரைகளின் ஐங்கதிகள் - "விக்கிதம் வற்கிதம் வெல்லுமுபகண்டம், மத்திமம் சாரியோ டைந்து" என்று சொல்லப்பட்ட இவை: இவ்வாறன்றி, ஆஸ்கந்திதம், தோரிதகம், ரேகிதம், வல்கிலுதம், ப்லுதம் எனவும்படும். இனி, ஸிம்ஹகதி மயூரகதி வாநரகதி வியாக்கிரகதி குஞ்சரகதி என்றலும் பிறவாறு கூறுதலுமுண்டு. (234) | 82. | ஆளி னெஞ்சமும் வார்த்தையுஞ்செங்கையு மாசனத்தொடுதாளுங், கோளி லின்புறக் குறிப்பன வெவற்றினுங்குறைகளற் றனவாகி, ஆளி குஞ்சரம் வானர முதலிய வியக்கினால்விசும்பெங்குந், தூளி கொண்டிட மிடைந்துவந் தனநெடுந் துரகதம்பலகோடி. |
(இ -ள்.) பல கோடி நெடுந் துரகதம். பலகோடிக்கணக்கான பெரிய குதிரைகள்,-ஆளின் - (தம்மீது) ஏறிநடத்துபவரது, நெஞ்சம்உம் - எண்ணத்தையும், வார்த்தையும் - சொற்களையும், செம் கையும் - சிவந்த கைகளினாற்செய்யுங் குறிப்பையும், ஆசனத்தொடு - (தம்மீது ஏறி) வீற்றிருத்தலிலுண்டாகுஞ் சைகையையும், தாளும் - கால்களினாற் செய்யுங் குறிப்பையும், கோளில் இன்பு உற குறிப்பன - (தம்முடைய) அறிவால் (நடத்துபவர்) மகிழும்படி தெரிந்துகொள்வனவும், எவற்றினும் குறைகள் அற்றன ஆகி - (குதிரைகட்குக் கூறியுள்ள குணம் செயல் குறி என்கிற) எல்லா வகையிலுங்குறைபாடில்லாதனவுமாய்,- யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால்-சிங்கம் யானை குரங்கு முதலியவற்றின் நடைபோன்ற நடையினாலே, விசும்பு எங்கும் தூளி கொண்டிட - ஆகாய முழுவதும் புழுதி எழுந்து பரவும்படி, மிடைந்து வந்தன - நெருங்கிச் சென்றன; (எ - று.) தம்மை நடத்துபவரது மனக்கருத்து முதலியவற்றை யெல்லாம் உணர்ந்து அவர்க்கு மகிழ்ச்சியுண்டாகுமாறு நடக்குந் |