தன்மையன் எனக் குதிரைகளின் நல்லறிவையும் பழக்கத்தையும் பாராட்டிக் கூறினார்; "அசைவில் தொடையடி கசை குசை யுரநினை வறியு முணர்வின" என்பர் மேற் பதினாறாம்போர்ச்சருக்கத்தும். வார்த்தை-சொல்லாகுபெயர். கை, ஆசனம், தாள் - அவற்றில் உண்டாகுஞ் சைகைகட்குக் காரணவாகுபெயர். கோள்-முதனிலை திரிந்த தொழிற்பெயர். யாளி - சிங்கம். 'முதலிய' என்றதனால், மயூரகதி வியாக்கிரகதி என்ற இரண்டையும் கொள்க. இயக்கு - 'இயங்கு' என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்: இயங்குதல் - செல்லுதல். வார்த்தா, ஆஸநம், வாநரம், தூளீ, துரகதம், கோடி - வடசொற்கள். குஞ்சரம் - காட்டுப்புதர்களில் மகிழ்ந்து சஞ்சரிப்பது என்றும், துதிக்கையையுடையது என்றும் உறுப்புப்பொருள்படும் வடசொல்: (குஞ்சம் - காட்டுப்புதரும், துதிக்கையும்.) (235) | 83. | வடிவு டைச்சில குரகதமரகத வண்ணமிக் கனவாகிப், படியி னிற்சிறி தமைவுற மிதித்தில பவனவெங் கதிபோல, முடிவிலிப்படி மிசைவரக் கருதியே முனிவர னுயிர்க்கெல்லாம், அடிபடைத்தது படைத்ததிங் கிவற்றினுக் கவயவங் குறையாமல். |
(இ -ள்.) வடிவு உடை சில குரகதம் - அழகிய உருவத்தையுடைய சில குதிரைகள், மரகதம் வண்ணம் மிக்கன ஆகி - மரகதரத்தினம் போன்ற பசுநிறம் மிகுந்தனவாய்,- பவனம் வெம் கதிபோல - வாயுவினது மிக்க வேகம்போல, படியினில் சிறிது அமைவுற மிதித்தில - பூமியிற் சிறிதேனும் கால்பொருந்த மிதித்துச் சென்றனவில்லை; முனிவரன் - பிரமதேவன், உயிர்க்கு எல்லாம் - எல்லாப் பிராணிகட்கும், அடிபடைத்தது - கால்களைச் சிருட்டித்தது, முடிவு இல் இப்படிமிசை வர கருதியே-அழிதலில்லாத இந்தப் பூமியின்மேல் (அவ்வுயிர்கள்) நடந்து செல்வதை நினைத்தேயாம்; இங்கு இவற்றினுக்கு படைத்தது - இச் சேனையிலுள்ள இக்குதிரைகளுக்கு (க் கால்களை)ச் சிருட்டித்ததோ, (பூமியின்மேல் நடந்து செல்வதற்காகவன்று): அவயவம் குறையாமல் - உறுப்புக்கள் குறைபாடில்லாமல் அழகாயிருத்தற் பொருட்டே; ( எ - று.) உலகத்திற் சாதாரணமாய்ப் பிராணிகட்கெல்லாம் பிரமதேவன் கால்களைப்படைப்பது, பூமியில் நடந்துசெல்லுதற்காகவேயாம்; தருமபுத்திரனது சேனையிலுள்ள குதிரைகட்குக்கால்கள் படைத்ததோ, அவயவக்குறைவில்லாது அழகாக இருத்தற் பொருட்டன்றி அவ்வடிகளால் நடத்தற்காக அன்று என வருணித்தவாறு: இதனால், இக்குதிரைகள் கால்கள் தரையிற்படுதல் தெரியாதபடி மிக்கவேகத்துடன் பறந்து செல்வன என்றபடியாம். குதிரைக்குக் கால்கள் நடத்தற்பொருட்டே அமைந்திருக்கவும் அவ்வுண்மையை விலக்கி, அங்கவீனப்படாமைப்பொருட்டுப் படைக்கப்பட்டனவென வேறொரு தன்மையை |