பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 257

வெளிப்பட்டு மிக்குச்சொரிகிற மதநீரையும், உன்னி - (தாங்கள் சென்றடைய)
நினைத்து, தமரின் நண்புஉற தொடர்ந்து உடன் வரவர - சுற்றத்தார்போல
நட்பு மிகுதியாக உண்டாகப் பின் தொடர்ந்து நெருங்கி வர,-(சென்று),-சோலை
எய்தினார்-(பாண்டவர்கள் தங்கள்சேனையோடு வழியிலிருந்ததொரு)
சோலையிற்சென்று சேர்ந்தார்கள்; (எ - று.)

    மலர்களிற்போலவே மகளிரது கூந்தலிலும் யானைகளின் மதநீரிலும்
நறுமணமிகுதியால் வண்டுகள் மொய்க்குமென்க.  பழகிய மணத்தைவிட்டுப்
புதுமணத்தை விரும்பித்தொடர்தல், வண்டுகட்கு இயற்கை.  'மடந்தையர்'
என்றது, பருவப்பெயராகாமல் மகளிரென்ற மாத்திரமாய் நின்றது.  முன்னெற்றி
மயிரைக் குறிக்கிற அளகம் என்றசொல், கூந்தலெனப் பொதுப்பொருளை
யுணர்த்திற்று.  'மடந்தையர்' என முன்வந்ததனால், 'மாந்தர்' என்னும்
பொதுப்பெயர் - பெண்பாலையொழித்து ஆண் பாலைக்குறித்தது;
ஒன்றொழிபொதுச்சொல்.  வரவர, அடுக்கு மிகுதிப்பொருளது.         (244)

92, 93.-இரண்டுகவிகள் -சேனையிலுள்ளார் சோலையில்
நீர்விளையாட்டு நிகழ்த்தியபின், பாண்டவர்கள் சேனையோடு
மருதநிலங் கடத்தல்கூறும்.

சம்பகம் பாடலந் தமால நாண்மலர்
வம்பெழ மிலைச்சுவார் வாவியாடுவார்
செம்பல வாமிரங் கதலித்தீங்கனி
உம்பரி னமிழ்தென வுடனருந்துவார்.
 
பச்சிளங் கமுகின்மென் பாளைசூடுவார்
அச்செழுங் காய்கனி கவர்ந்தருந்துவார்
கொச்சையங் கடைசியர் குழுமிவாழ்த்தவே
வச்சிரம் போல்பவர் மருதநீங்கினார்.

    [இவ்விரண்டும் - ஒருதொடர்; ஒருங்கு உரை உரைக்கப்படுகின்றது.]

     (இ -ள்.) (அச்சேனையிலுள்ளவர்கள்),-(92) சம்பகம் - சண்பக
மரங்களும், பாடலம் - பாதிரிமரங்களும், தமாலம் - பச்சிலை மரங்களும்
ஆகிய இவற்றினுடைய, நாள் மலர் - அன்றுமலர்ந்த [புதிய] மலர்களை
(ப்பறித்து.) வம்புஎழ மிலைச்சுவார் - வாசனை வீசுமாறு சூடிக்கொள்வார்கள்;
வாவி ஆடுவார் - (அங்குள்ள) குளங்களில் நீராடுவார்கள்; செம் பலவு -
செவ்விய பலாமரங்களும், ஆமிரம் - மாமரங்களும், கதலி - வாழை
மரங்களும் ஆகிய இவற்றினது, தீம் கனி - இனிய பழங்களை, உம்பரின்
அமிழ்து என - தேவாமிருதத்தைப்போல, உடன் அருந்துவார் - பலர்
கூடியுண்