பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 258

பார்கள்;(93) பச இளங் கமுகின் மெல் பாளை சூடுவார் - பசிய இளமையாகிய
பாக்குமரங்களின் பாளைகளைக்கொய்து அணிந்து கொள்வார்கள்; அ செழுங்
காய்கனி கவர்ந்து அருந்துவார்-அந்தப்பாக்கு மரங்களின் செழுமையான
காய்களையும் பழங்களையும் பறித்து உண்பார்கள்; (இவ்வாறு
தம்சேனையிலுள்ளார் மகிழ்ந்து வர), வச்சிரம் போல்பவர் -
வச்சிரரத்தினம்போலச் சிறந்த பாண்டவர்கள், கொச்சை அம் கடைசியர் குழுமி
வாழ்த்த - நிரம்பாச்சொற்களையுடைய அழகிய மருதநிலத்து மகளிர்
கூட்டங்கூடி வாழ்த்துக்கூற, மருதம் நீங்கினார் - மருதநிலத்தைக் கடந்து
சென்றார்கள்;  (எ - று.)

     (92) 'சம்பகம். . . . . . . . மிலைச்சுவார்' என்பது - பூக்கொய்தலையும்,
'வாவியாடுவார்' என்பது - புனல்விளையாட்டையும், பின்னிரண்டடிகள் -
உண்டாட்டையுங் கூறுவனவாம்;  மேல்வருவனவற்றையும், இவ்வாறே
ஆராய்ந்துகொள்க; பூக்கொய்தல் முதலியன கூறுதல்,
பெருங்காப்பியத்தினிலக்கணமாம்.  பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் என்ற
இவற்றை, 'முக்கனி' என்றுகூறுதல் மரபு.  பலவு - 'பலா' என்னும் குறியதன்
கீழ் ஆக் குறுகி உகரமேற்றது.  தீங்கனி - உரிச்சொற்றொடர்; தீம் கனி
எனப்பிரியும்.  உம்பர் - இடவாகுபெயர்.  உடனருந்துவார் என்பதற்கு - தமது
மனைவிமார்களோடு இருந்து உண்பார்கள் எனவும் பொருள் கூறலாம்.
இச்செய்யுளிற்கூறிய சம்பகம் முதலியனவும், அடுத்த செய்யுளிற்கூறும் கமுகு
முதலியனவும் - மருதநிலத்துக் கருப்பொருள்கள்.    (மருதம் - நாடும்
நாடுசார்ந்த இடமும்.)

     (93) கமுகு - க்ரமுகம் என்னும் வடசொல்லின் விகாரம்.  கடைசியர் -
மருதநிலத்து மகளிர்: (ஆடவர், 'கடையர்' எனப்படுவர்.) வச்சிரரத்தினத்தைப்
பாண்டவர்கட்கு உயர்வுத்தன்மையில் உவமையாகக் கொள்ளுதலன்றி,
உடல்வலிமைக்கும் உவமையாகக் கொள்ளலாம்.               (245, 246)

94.-பாண்டவர்கள்முல்லைநிலத்திற் சார்தல்.

தடாநிறை வெண்ணெயுந் தயிருங்கொண்டெதிர்
அடாமுடை நாறுதோ ளாயர்கைதொழப்
படாமுதன் முல்லையின் பரிமளங்கொளாக்
கடாமலை வயவர்தண் கானமெய்தினார்.

     (இ -ள்.) கடாம் மலை வயவர் - மதமொழுகப்பெற்ற யானைச்
சேனையையுடைய பாண்டவர்கள்,-முடை நாறு தோள் ஆயர் - முடைநாற்றம்
வீசுகிற தோள்களையுடைய இடையர்கள், தடா நிறை வெண்ணெயும் தயிரும்
கொண்டு - மிடாக்களில் நிறைந்த வெண்ணெயையும் தயிரையும் (உபஹாரமாக)
எடுத்துக்கொண்டு, எதிர் அடா - எதிர்கொண்டுவந்து, கைதொழ - (தம்மைக்)
கை கூப்பி வணங்க,- படா முதல் முல்லையின் பரிமளம் கொளா -