பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 261

ஒருபொருளன. பொதுவியர் - பெண்பன்மை.  மகளிர்க்கு உரிய
நாற்குணங்களுள் அச்சமும் ஒன்றாதலால், 'வெருவிளம்பொதுவியர்'என்றார்.
காண்ப - பலர்பால் எதிர்காலவினைமுற்று:  காண்பர் என்று பொருள்:  இனி,
'காண்பது' என்பதன் தொகுத்தலெனக் கொள்ளினுமாம்.  கொன்றை, கருவிளை
- முல்லைநிலத்துக்கருப்பொருள்கள்.  கண்ட - பலவின்பால்முற்று;  'கண்டதே'
என்றும் பாடம்.  ஈற்றடி - முற்றுமோனை.  கருவிளை+கண்=கருவிளங்கண்.
வேற்றுமையில் ஐகெட்டு அம்முச்சாரியை பெற்றது; [நன்-உயிர்-52]     (249)

97. புழைநெடுந் தடக்கைவெம் போதகங்களை
மழைமுகி லெனக்களிமயில்க ளாடின
தழலெழு கானகந் தண்ணெனும்படி
செழுமத வருவியின் றிவலைவீசவே.

     (இ -ள்.) தழல் எழு கானகம் தண்ணெனும்படி - நெருப்புப்பற்றி
யெரிகிற அந்தக்காடும் குளிரும்படி,  செழு மதம் அருவியின் திவலை வீச-
செழுமையாகிய [மிக்க] மதநீர்ப்பெருக்கின் துளிகளைச் சொரிதலினால்,-
புழைநெடுந்தட கை வெம் போதகங்களை - துளை பொருந்திய நீண்ட பெரிய
துதிக்கையையுடைய கொடிய யானைகளை, மழை முகில் என - மழைபெய்யுங்
காளமேகமென்று கருதி, களி மயில்கள் - களிப்புடைய மயில்கள், ஆடின -
கூத்தாடின;  (எ - று.)-ஏ - ஈற்றசை.

    மேகத்தைக் கண்டு களிக்கும் இயல்புடைய மயில்கள், மதநீரை
மழையென்றும் அந்நீரைச்சொரியுங் கரிய யானைகளை மழை பொழியும்
மேகமென்றுங் கருதிக் கூத்தாடினவென்க; மயக்கவணி. மயில் -முல்லை
நிலத்திற்கு உரிய பறவை. (குறிஞ்சிக்கும் உரியது.)

98.-தருமன் சேனையுடன்குறிஞ்சிநிலஞ் சேர்தல்.

வனநெறி கடந்துபோய் மன்னவர்க்கெலாந்
தினகர னெனத்தகு செய்யகோலினன்
இனமுகி றவழ்தலி னிரங்குபேரிசைத்
தனிதவண் கிரிநெடுஞ் சாரலெய்தினான்.

     (இ -ள்.) மன்னவர்க்கு எலாம் தினகரன் என தகு செய்ய கோலினன் -
அரசர்களெல்லாருள்ளும் (விளக்கத்தாற்) சூரியனென்று சொல்லத்தக்கவனுஞ்
செங்கோலுடையவனுமாகிய தருமபுத்திரன்,- வனம் நெறி கடந்து போய் -
(இவ்வாறு) முல்லை நிலத்தின் வழியைக் கடந்து சென்று,-இனம் முகில்
தவழ்தலின்-கூட்டமான மேகங்கள் (தன்மீது) படிந்து செல்லுதலினால், இரங்கு
பேர் இசை தனிதம் - ஒலிக்கின்ற பேரிடிமுழக்கத்தை யுடைய, வள் கிரி -
பெரிய மலையினது, நெடுஞ் சாரல் - விசாலமான தாழ்வரையை, எய்தினான்-
போய்ச் சேர்ந்தான்; (எ - று.)